சத்குரு : சில யோகா பள்ளிகளில், யோகிகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறார்கள். அவை மந்தா, மத்யமா மற்றும் உத்தமா என்று குறிப்பிடப்படுகின்றன.

மந்தா யோகிகள் - அவ்வப்போது புரிதலின் உச்சம் தொடுபவர்கள்

மந்தா என்றால், விழிப்புணர்வுடன் இருப்பதென்றால் என்ன என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் படைப்பின் மூலத்தை உணர்ந்திருக்கிறார், அவர் ஒருமையை அறிந்திருக்கிறார், ஆனால் நாள் முழுவதும் அதை அவரால் தக்கவைக்க முடியவில்லை. அவர் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் விழிப்புணர்வில் இருக்கும்போது, அந்தத் தன்மையை உணர்கிறார். அவர் விழிப்புணர்வில் இல்லாதபோது, அவர் அந்த ஒட்டுமொத்த அனுபவத்தையும் இழக்கிறார். இது அமைதியாக இருப்பது அல்லது மகிழ்ச்சியாக இருப்பது பற்றி அல்ல. இது பெயரிடப்படாத பரவச நிலைகளில் இருப்பது. எனவே, முதல் வகைப்பட்ட யோகி அதை அறிந்திருக்கிறார். ஆனால், அவருக்கு நினைவூட்டப்பட வேண்டும் அல்லது அவர் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவரது புரிதல் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதில்லை.

நீங்கள் போதுமான அளவு விழிப்புடன் இல்லாவிட்டால், உங்கள் புரிதல் குறையும்போது, அவைகளை அதன்தன் இயல்பில் நீங்கள் உணர்வதில்லை.

நீங்கள் விழிப்புணர்வோடு கூடிய புரிதலில் இருக்கும்போது, சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள் வரை, ஒவ்வொன்றும் உள்ளபடியே அங்கே இருப்பதை உணர்கிறீர்கள். நீங்கள் போதுமான அளவு விழிப்புடன் இல்லாவிட்டால், உங்கள் புரிதல் குறையும்போது, அவைகளை அதன்தன் இயல்பில் நீங்கள் உணர்வதில்லை. உங்கள் புரிதல் மேலும் குறையும்போது, உதாரணத்திற்கு நீங்கள் தூக்கத்தில் இருக்கும்போது, உங்களால் புற உலகம் சார்ந்ததைக்கூட உணர முடியாது. உங்கள் அனுபவத்தில் அது மறைந்துவிட்டது. இதேபோல், ஒரு குறிப்பிட்ட அம்சம் எந்த அளவுக்கு அதிகமாக நுட்பமாகிறதோ, அந்த அளவுக்கு உங்களுக்கு அதிகமாக ஆழமான புரிதல் உணர்வு தேவைப்படுகிறது. யாராலும் இருபத்தி நான்கு மணி நேரமும் விழிப்புணர்வுக்கான முயற்சியில் இருக்க முடியாது. நீங்கள் விழிப்புடன் இருக்க முயற்சி செய்தால், அதை சில வினாடிகள் அல்லது நிமிடங்களுக்கு உங்களால் நிலைநிறுத்த முடிந்தால், அது ஒரு பெரிய விஷயம். இல்லையெனில், அது இடம் விட்டு இடம் தாவிச்செல்லும். எனவே, ஒரு யோகியின் முதல் கட்டம், மந்தா என்று அழைக்கப்படுகிறது. மந்தா என்றால், மக்கள் பொதுவாக இந்த வார்த்தைக்குப் பயன்படுத்தும் மந்தத்தன்மையை இது குறிக்கவில்லை; இது புரிதலில் இருக்கும் மந்தநிலை.

மத்யமா யோகிகள் - நீம் கரோலி பாபா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
ஒருவர் புற உலகத்துடன் தொடர்பற்றுப் போகும்போது, அவரால் உடலில் நீடித்திருக்க முடியாது.

யோகிகளின் இரண்டாவது வகை அல்லது இரண்டாவது கட்டம், மத்யமா என்று அழைக்கப்படுகிறது, அதாவது நடுத்தரமானது. அவரைப் பொறுத்தவரை, உள்நிலைப் பரிமாணமும், அதற்கு அப்பாற்பட்டவையும் இடையறாமல் அவர் புரிதலில் உள்ளன. ஆனால், அவரால் இங்கே இருப்பதை, உடல்தன்மையின் பரிமாணத்தை நிர்வகிக்க முடியாது. இன்றைக்கும் கூட வழிபடப்படும் பல்வேறு யோகிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் எதைச் செய்வதற்குமான திறனையும் முற்றிலும் இழந்தவர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டங்களில், சாப்பிடவும், கழிப்பறைக்குச் செல்வதற்கும்கூட அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுக்குள் ஒரு அற்புதமான நிலையில் இருந்தனர். ஆனால், அவர்கள் தனக்கான எதையும் செய்துகொள்ள இயலாத குழந்தைகளைப் போல ஆனார்கள், அவர்கள் புறஉலகிலிருந்து தொடர்பற்றுப் போனார்கள்.

இதற்கு ஒரு உதாரணம் நீம் கரோலி பாபா. இவருக்குக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றுகூடத் தோன்றுவதில்லை. அவர் வெறுமனே உட்கார்ந்திருப்பார். மற்றவர்கள்தான் அவரிடம் “நீங்கள் பல மணி நேரங்களாக கழிவறைக்குச் செல்லவில்லை, இப்போது நீங்கள் போக வேண்டும்” என்று சொல்வார்கள், அதன்பிறகே அவர் செல்வார். உடலியல் செயல்பாடுகள், உலகியல் செயல்பாடு என்பதே அவர்களின் உணர்வு நிலையில் முற்றிலும் இருப்பதில்லை. அவர்கள் ஒரு அற்புதமான நிலையில் உள்ளனர், ஆனால் அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அந்த நிலையில் நீடித்திருக்க முடியாது. ஏனென்றால், ஒருவர் புற உலகத்துடன் தொடர்பற்றுப் போகும்போது, அவரால் உடலில் நீடித்திருக்க முடியாது.

உத்தம யோகிகள் - குரு தத்தாத்ரேயாவின் கதை

ஒரு யோகியின் மூன்றாவது நிலை என்பது, அவர் எப்போதும் உச்சபட்ச உணர்தலில் இருக்கிறார், அதேநேரத்தில், அவர் வெளி உலகத்துடனும் மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால், அவர் உண்மையிலேயே ஒரு யோகியாக இருக்கிறாரா, இல்லையா என்பதே உங்களுக்குத் தெரிவதில்லை! இதற்கு ஒரு உதாரணம் தத்தாத்ரேயா. அவரைச் சுற்றியிருந்தவர்கள், இவர் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் மறு அவதாரம் என்று கூறினார்கள். இது மக்கள் அதனை வெளிப்படுத்தும் வழி. ஏனென்றால், அவர் மனித வடிவத்தில் இருந்தாலும், மனிதத் தன்மையில் இல்லை. இதனால் அவர் மனிதத்தன்மை இல்லாத இரக்கமற்றவர் என்று அர்த்தமல்ல. ஆனால், அவர் நிச்சயமாக மனிதர் அல்ல. எனவே, அவர்கள் அத்தகைய குணங்களைக் கண்டபோது, அவரை சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மாவுடன் மட்டுமே ஒப்பிட முடிந்தது. அவர் மூவரின் மறு அவதாரம் என்று மக்கள் கூறினர்.

எனவே, சில சமயங்களில் தத்தாத்ரேயாவின் படங்களை பார்த்தால் அவர் மூன்று தலைகளுடன் சித்தரிப்பட்டிருப்பதை காண்பீர்கள். ஏனெனில், அவர் மூவரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறார்.

தத்தாத்ரேயா மிகவும் புதிரான வாழ்க்கை வாழ்ந்தார். இன்றும், சில நூறு தலைமுறைகளுக்குப் பிறகும் கூட, தத்தாத்ரேயரை வழிபடுபவர்கள் ஒரு சக்திவாய்ந்த வம்சாவளியாக இருக்கின்றனர். கான்ஃபத்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைக்கும்கூட, அவர்கள் கருப்பு நாய்களுடன் சுற்றி வருகிறார்கள். தத்தாத்ரேயா எப்போதும் அவரைச் சுற்றி கன்னங்கரிய நிற நாய்களை வைத்துக்கொண்டிருந்தார். உங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தால், அது உங்களை விட இன்னும் கூடுதலான புலனுணர்வு கொண்டது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மோப்ப சக்தியில், கேட்கும் திறனில், பார்வைத் திறனில் - அது உங்களை விட சற்று மேலானதாகவே தோன்றுகிறது. எனவே, தத்தாத்ரேயா, நாயை வேறொரு நிலைக்கு அழைத்துச் சென்றார். மேலும் அவர் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருந்த நாய்களை மட்டும் தேர்ந்தெடுத்தார். இன்றைக்கும்கூட, கான்ஃபத்கள் தங்களுடன் பெரிய நாய்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் நாய்களை நடக்கவிட மாட்டார்கள், அவர்களின் தோள்களில் சுமந்துகொண்டு நடப்பார்கள். ஏனெனில், அது தத்தாத்ரேயாவின் செல்லமாக இருந்தது. எனவே, அவர்கள் அவைகளை மிகவும் தனிக்கவனத்துடன் நடத்துகிறார்கள். அவர் கட்டமைத்துக் கொடுத்தது இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுடன், இது மிகப்பெரும் ஆன்மீக சாதகர்களின் குலங்களுள் ஒன்றாக இருக்கிறது.

பரசுராமர் ஒரு குருவைத் தேடிச் செல்கிறார்

பரசுராமர், மகாபாரத காலத்தைச் சேர்ந்த, போர் புரியும் மாவீர துறவியாக இருந்தார். குருக்ஷேத்ர போரில் பங்கேற்கவில்லையென்றாலும், அதன் தலைவிதியை பல வழிகளில் பரசுராமர் முடிவு செய்தார். அவர் கர்ணனை ஆரம்பத்திலேயே குறித்து வைத்திருந்தார். அவருக்கு அபரிமிதமான திறன்கள் இருந்தன. ஆனால், அவரது உணர்ச்சியின் நிலையற்ற தன்மையானது, அவரது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தெய்வீகத்தை உணர அனுமதிக்கவில்லை. அவர் விழிப்பு நிலை, விழிப்பற்ற நிலை என்று மாறி மாறி இருந்தார். பெரும்பாலான நேரங்களில் மோசமான நிலையில் இருந்தது.

. தத்தாத்ரேயர் மதுவையும், பெண்ணையும், போதையையும் தாண்டி, எப்போதும் தெய்வீகத்தின் தொடர்பில் இருப்பதை பரசுராமர் உணர்ந்தபோது, அந்தக் கணமே அவரது மீட்சிக்கான வாசல் திறந்துகொண்டது.

எனவே, அவர் பல, பல குருக்கள் அல்லது ஆசிரியர்களிடம் சென்றார். அவர் தேடுவது அவர்களிடம் இல்லை என்பதை அவர் கண்டபோது, அவர்களை அவர் வெட்டிச் சாய்த்தார். இறுதியாக, அவர் தத்தாத்ரேயரை நோக்கி வந்தார். மக்கள் அவரிடம், "தத்தாத்ரேயர்தான் உங்கள் கேள்விக்கான பதில்" என்று சொன்னார்கள். அப்போதும் அவர் தனது கோடரியைக் கையில் வைத்துக் கொண்டுதான் வந்தார். அவர் தத்தாத்ரேயரின் இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தபோது, ஆன்மீகத் தேடுதலை உடைய பலரும் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் ஆசிரமத்திற்குள் சென்று பார்த்துவிட்டு, தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர்!

பரசுராமர் தத்தாத்ரேயரின் இருப்பிடத்திற்குள் நடந்துசென்றபோது, கையில் ஒரு ஜாடி மதுவும், மடியில் ஒரு இளம் பெண்ணையும் வைத்தவாறு உட்கார்ந்திருந்த ஒரு மனிதரைக் கண்டார். தத்தாத்ரேயர் போதையில் இருப்பதாகத் தோன்றினார். பரசுராமர் அவரைப் பார்த்ததும், கோடரியைக் கீழே போட்டுவிட்டு, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். மற்ற அனைவரும் வெளியேறினர். அவர் சாஷ்டாங்கமாகப் பணிந்த தருணத்தில், மது ஜாடியும், பெண்ணும் மறைந்துவிட்டதுடன், தத்தாத்ரேயர் மட்டும் அவரது காலடியில் கிடக்கும் நாயுடன் அமர்ந்திருந்தார். பரசுராமர் தனக்கான மீட்சியை தத்தாத்ரேயருக்குள் கண்டார்.

உலகத்தில் தன்னால் எதையும் செய்ய முடியும், அதேநேரத்தில் தன்னை எதிலும் இழக்காமல் இருக்கவும் முடியும் என்பதை தத்தாத்ரேயர் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார். இது, பரசுராமருக்கு அவர் அளித்த ஒரு விளக்கம். ஏனென்றால், பரசுராமர் அபரிமிதமான திறன்களைக் கொண்ட மனிதர். ஆனால், இந்தத் திறன் கோபத்தில் வெளிப்பாடு காண்கிறது. நிலையில்லாத ஒரு உணர்ச்சி நிலையில் எப்போதும் எதிர்மறையான வெளிப்பாட்டைக் காண்கிறது. எனவே, தத்தாத்ரேயர் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சூழலைப் பயன்படுத்தினார். தத்தாத்ரேயர் மதுவையும், பெண்ணையும், போதையையும் தாண்டி, எப்போதும் தெய்வீகத்தின் தொடர்பில் இருப்பதை பரசுராமர் உணர்ந்தபோது, அந்தக் கணமே அவரது மீட்சிக்கான வாசல் திறந்துகொண்டது. இவர் தனது வாழ்க்கை முழுவதும் இதே புலனுணர்வின் தன்மையில் இருந்திருந்தால், எவ்வளவோ மக்கள் கோடரியிலிருந்து தப்பித்திருப்பார்கள்!

SGTAMAPPNL