சத்குரு:

மத்சேந்திரநாத் மற்றும் தத்தாத்ரேயர் யோக மரபில் மிக உயர்ந்த யோகிகளாகப் போற்றப்பட்டு வருகின்றவர்கள்.

தன்னை உணர்ந்த பல உன்னத யோகிகளுக்கு மத்தியில் இவர்கள் மிக பெரியவர்களாகக் கருதப்படுகின்றனர். மத்சேந்திரநாத், அவர் இருந்த விதத்தைப் பார்த்து மக்கள் அவரை சிவனாகவே கண்டனர். தத்தாத்ரேயரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் ரூபமாகப் பார்த்தனர். ஒரு மனிதரிடம் ஏதொவொன்றை அவர்கள் பார்க்கும்போது, அவர் மனிதனாக இருந்தாலும், அவரிடம் சில தன்மைகளை மக்கள் பார்க்கும்போது, அவரை சிவா, விஷ்ணு, பிரம்மா போன்றவர்களோடு ஒப்பிட்டனர். தத்தாத்ரேயரை மூவேந்தர்களின் மறுரூபமாக அவர்கள் கண்டனர். தத்தாத்ரேயரின் புகைப்படத்தைப் பார்த்தால் அவருக்கு மூன்று தலைகள் இருப்பதை நீங்கள் காணமுடியும்.

தத்தாத்ரேயர், புதிரான வாழ்வையே வாழ்ந்தார். சில நூறு வருடங்கள் அல்லது ஓராயிரம் வருடத்திற்குப் பின்னரும், அவர் உருவாக்கிய சிஷ்ய மரபில் இருப்பவர்கள் இன்றும் குறிப்பிட்ட சில விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். இன்றும் கூட அவர் தோற்றுவித்த அந்த மரபு மிகவும் உயிர்ப்புடையதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்து வருகிறது. ஆன்மீகத் தேடல் இருப்பவர்களில் அதிக எண்ணிக்கை கொண்ட குழுவில் இதுவும் ஒன்று. இதுபோன்ற கன்ஃபாட்ஸ் (Kanphats) என்ற குழு தத்தாத்ரேயரை வழிபடுபவர்கள். இன்று கூட இவர்கள் கருப்பு நிறமுள்ள நாய்களை வைத்திருப்பார்கள். தத்தாத்ரேயர் எப்போதும் அவருடன் முற்றிலும் கருப்புநிற நாய்களை வைத்திருப்பார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் நாய்களை ஒரு விதமாகப் பயன்படுத்தினார். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் வீட்டில் நாய் இருந்தால், அது உங்களைவிட சற்று அதிகமாகவே கிரகித்துக்கொள்ளும் திறன் கொண்டிருக்கும். வாசம் நுகர்வதில், பார்ப்பதில், கேட்பதில் அது உங்களை விட திறனுடையவை தானே! தத்தாத்ரேயர் நாய்களை ஒரு வித்தியாசமான நிலைக்கு கொண்டு சென்றார். அவர் முற்றிலும் கருப்பாக இருக்கும் நாயைத் தேர்ந்தெடுத்தார். இன்று கன்ஃபாட்ஸ் இதுபோன்ற நாய்களை வைத்திருப்பர். அவர்கள் நாய்களை நடத்தி செல்வதில்லை; அவர்கள் அவ்வளவு பெரிய நாய்களை தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு செல்வார்கள். அவை தத்தாத்ரேயரின் செல்லப்பிராணி என்பதால் அதனை நன்றாக பார்த்துக் கொள்வார்கள்.

பரசுராமர் - உணர்வுகளின் அலை!

பரசுராமர், கோடாரியால் அறுப்பவர் - எதை பார்த்தாலும் அறுப்பவர், அவர் தாய் உட்பட. சட்டென்று உணர்வுகள் மாறும் விதமுள்ளவர். பல விதத்தில் குருஷேத்திர யுத்தத்தில் பங்கேற்காமலே அதன் இறுதியை முடிவு செய்தவர். கர்ணனை முதலிலேயே அவர் சபித்திருந்தார். அவர் மகத்தான திறன்களை கொண்டிருந்தாலும் அவருடைய உணர்வுகளின் தன்மைகளால், ஒவ்வொரு நொடியும் தெய்வீகத்தை உணராமலே கழித்தார். சில சமயம் உண்டு; சில சமயம் இல்லை - பல சமயங்கள் சரியான நிலையில் இல்லாமல் இருந்தார்.

அதனால் அவர் பல குருமார்களிடம் சென்றார். அவர்களிடம் அவர் தேடியது இல்லை என்று தெரிந்தவுடனேயே அவர்களைக் கொன்று விடுவார். கடைசியில், அவர் தத்தாத்ரேயரிடம் வந்தார். தத்தாத்ரேயர்தான் அவருக்கு விடை என்று பலரும் கூறினர். அப்போதும் அவருடைய கோடாரியுடன் தான் வந்திருந்தார். அவர் தத்தாத்ரேயரின் இடத்திற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் வழியிலேயே ஆன்மீகத் தேடலில் இருப்பவர்கள் பலர் குழுமியிருப்பதைக் கண்டார். ஆனால், அவர்கள் இது ஆன்மீகத்திற்கான இடமில்லை என்று ஓட்டம் பிடித்து சென்று கொண்டிருந்தனர்.

தத்தாத்ரேயரின் விசித்திரம்!

பரசுராமர் தத்தாத்ரேயரின் இடத்திற்குச் சென்றபோது, அங்கு ஒருவர் ஒரு தொடையில் மதுரசமுடைய ஜாடியுடனும் மறு தொடையில் இளவயது பெண்ணுடனும் இருந்தார். தத்தாத்ரேயர் குடிபோதையில் இருப்பவராக காட்சி தந்தார். பரசுராமர் அவரைப் பார்த்தார். அவருடைய கோடாரியை கடைசியாக கீழே போட்டுவிட்டு, அவர் முன் சரணடைந்து நெடுசாண் கிடையாக விழுந்தார். அந்த நொடியே மதுரச ஜாடியும், இளவயது பெண்ணும் மறைந்தனர். தத்தாத்ரேயர் அமர்ந்திருக்க, அவர் பாதத்தினருகே ஒரு நாயும் இருந்தது. பரசுராமர், தத்தாத்ரேயரிடம் தனது மோட்சத்தை அடைந்தார்.

தத்தாத்ரேயர், இந்த உலகில் எதை வேண்டுமானாலும் தன்னால் செய்ய முடியும். அதேசமயம் அதில் தொலைந்து போகாமலும் இருக்க முடியும் என்று பரசுராமருக்கு காண்பித்தார். ஏனென்றால், பரசுராமர் மகத்தான திறனுடைய மனிதர். ஆனால், அவருடைய திறனெல்லாம் அவர் உணர்வுகளின் காரணமாக கோபமாக, பல நேர்மாறான விதங்களில் வெளிப்பட்டன. இதனால் பரசுராமரிடம் தத்தாத்ரேயர் சிறு தந்திரத்தை உபயோகித்தார். பரசுராமர் மதுவுடனும் பெண்ணுடனும் தத்தாத்ரேயரைப் பார்த்த பின்னும் அவர் தெய்வீகத்தின் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறார் என்று எந்த நொடி உணர்ந்தாரோ, அந்த நொடி அவரை திறந்தது. இப்படி அவர் வாழ்வு முழுவதும் இருந்திருந்தால், பல மக்கள் அவரின் கோடாரிக்கு இரையாகாமல் இருந்திருப்பர்.