குரு பௌர்ணமியன்று ஈஷா யோகா மையத்தில், 200-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய முதலாவது சாதனாபாதை நிகழ்வு மஹாசிவராத்திரி 2019-அன்று முடிவடைந்தது. தன்னிலை மாற்றத்தை வேண்டிய பங்கேற்பாளர்கள், ஈஷா யோகா மையத்தில் யோகப் பயிற்சிகள் மற்றும் தன்னார்வத்தொண்டினை உள்ளடக்கிய, தீவிரமான சாதனா கால அட்டவணையை மேற்கொண்டு 7-மாதங்கள் தங்கியிருந்தனர்.

 

ஒரு நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு நிகழ்ந்த சத்குருவின் சந்திப்பில், மகிழ்ச்சியுடன் ஆனந்தக் கண்ணீரும் வழிந்தோட பங்கேற்பாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தப்பட்டனர்.

சத்குரு : இந்த சாதனா பாதையை நீங்கள் அனைவரும் அற்புதமாகச் செயல்படுத்தியிருக்கிறீர்கள். இதற்கு எனது ஆழ்ந்த பாராட்டுதல்கள். இந்தக் காலகட்டத்தில், இதைப் போன்றதொரு இடத்திற்கு அருகில்கூட இல்லாத அளவுக்கு இள வயதினர் மற்ற எல்லாவிதமான விஷயங்களிலும் ஈடுபாடு செலுத்தும்போது, இங்கே உங்களிடையே அந்த வயதைச் சேர்ந்த பலரைப் பார்ப்பது அற்புதமாக இருக்கிறது. எனது இளமைப் பருவத்தில், என்னைச் சுற்றியிருந்த ஒவ்வொருவரும் பலதரப்பட்ட விஷயங்களுக்குள் இருந்தனர். எனக்குள்ளேயே ஏதோ ஒன்றை செய்ய விரும்பிய ஒரே அசாதாரணமான நபராக நான் மட்டுமே இருந்தேன். மற்ற அனைவரும் வேறு யாரோ ஒருவருடன் ஏதோ ஒன்றைச் செய்யத்தான் விரும்பினர். ஆகவே, இங்கே இந்த மாதிரி உங்களனைவரையும் பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது.

உங்களுடைய மனிதத்தன்மையை நீங்கள் உயிர்ப்புடன் வைத்திருந்தால் போதும், நான் ஒவ்வொரு கணமும் உங்கள் வாழ்க்கைக்குள் இருப்பேன் – ஆனால் நீங்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கவேண்டும். மற்ற எல்லா உயிரினங்களும் தங்களுடைய உந்துதலால் வாழ்வதற்கு உண்டாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உயிரினமும், அவைகளுக்கே உரிய வழியில், எல்லா நேரமும் உந்துதலால் அவைகளின் எல்லைகளை அமைத்துக்கொள்கின்றன. ஒரு மனிதராக அவரவர் எல்லையை விழிப்புணர்வுடன் அழித்துக்கொள்ள முடியும் – எல்லைகள் இல்லாமல் வாழமுடியும். வெளிப்புறக் காரணங்களுக்காக, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தின் இயல்பின் காரணமாக, நாம் ஒரு வேலி அமைத்துக்கொள்ளக்கூடும். ஆனால் நமது இதயங்களில் எல்லைகள் இல்லை.

ஆகவே, உங்களுக்கான எல்லையற்ற தன்மையை எப்படி நிகழ்த்திக்கொள்வது என்று தயவுசெய்து பாருங்கள். சாதனா பாதைக்கான காலம் முழுமையடைந்த காரணத்தினாலேயே, அது முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. வாழ்க்கையே சாதனாதான்… சாதனா என்றால் ஒரு கருவி. இந்த உடல், மனம், மற்றும் சக்தி ஆகியவை நமது கருவிகள். உண்மையில் நமக்கு இருக்கும் கருவிகள் அவைகள் மட்டும்தான். அவைகள் திறன்மிக்கதாகவும், கூர்மையாகவும் உருவாகவில்லையென்றால், பிறகு வாழ்க்கை மோசமடைகிறது. உங்களுக்கு பணம், சொத்து, மற்றும் எவ்வளவோ பல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் இந்த ஒரு உயிர் எல்லையற்ற உயிர்த்தன்மையுடன் இல்லையென்றால், உங்களின் அத்தனை விஷயங்களும் ஒரு தொந்தரவாகதான் இருக்கின்றன. சாதனா என்றால் இதுதான் – அதாவது உங்கள் உடல், மனம் மற்றும் சக்தியை ஒரு ஆற்றல்வாய்ந்த கருவியாக நீங்கள் உருவாக்குவது. ஆகவே, கருவிகளை உபயோகப்படுத்துவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் கற்றுக்கொண்டால், இயற்கையாகவே நீங்கள் உங்கள் எல்லைகளை அழித்துவிடுவீர்கள். ஆற்றல் வாய்ந்த கருவிகளுடன், எல்லைகளும் இல்லாத நிலையில், நீங்கள் பூமியின் மீது ஒரு அற்புதமான சக்தியாக உருவெடுப்பீர்கள். இதைத்தான் நாம் காண விரும்புகிறோம். இதனை நாம் நிகழ்த்துவோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதலாவது சாதனாபாதை நிகழ்வு முடிவுபெறும் இந்தத் தருணத்தில், மஹாசிவராத்திரி மற்றும் சம்யமாவுக்குத் தயாரான கடந்த சில மாத அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் பயணத்தை நாம் திரும்பிப் பார்க்கிறோம்.

sadhanapada-2019-collagepic

கைவல்யபாதைக்கு மாற்றமடையும் பங்கேற்பாளர்கள், ஒரு ஆனந்தமயமான வாழ்க்கை வாழ்வதற்கு கடந்த ஏழு மாதங்கள் எப்படி ஒரு நிலையான அடித்தளத்தினை உருவாக்கியது என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஈஷாவில் 25-வது மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களை ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இத்தருணத்தில், இந்த நிகழ்வை இயன்ற அளவுக்குச் சிறப்பாக நடத்துவதற்கு, சாதனாபாதை பங்கேற்பாளர்களுள் பலரும் தங்களுக்கான செயலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சங்கேத், இந்தியா – மஹாசிவராத்திரி ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்தார்

தீவிரமான செயல்பாடு மற்றும் முழுமையான நிச்சலனம்! சாதனாபாதையில் இருந்தபோது, இந்த இரண்டு அம்சங்களையும் உணரவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. குறிப்பாகக் கடந்த சில வாரங்களில் மஹாசிவராத்திரி தன்னார்வத் தொண்டு செய்யும்போது, அந்தத் திசையில் நான் நகர்ந்ததைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். கிளாசிக்கல் யோகா வொர்க்ஷாப் பங்கேற்பாளர்களுடனான அறிமுகம், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்தது எனக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கிறது.

ஸ்டீவன், ஜெர்மனி – நான் ஏன் சாதனாபாதையில் இணைந்தேன்

அனைவரும் செய்கிறார்கள் என்பதற்காக, நான் ஏதோ ஒன்றைச் செய்ய விரும்பவில்லை. அதனால் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கும் செயலை செய்ய விரும்பினேன். சாதனாபாதை மூலமாக, எதைக் குறித்தும் வருந்தாமல், உணவு, அது தொடர்பான விஷயங்கள் அல்லது வேறு எதையும் யோசிக்காமல், வெறுமனே இங்கே இருப்பதற்கு அவர்கள் ஒரு இடம் அளிக்கின்றார்கள். நீங்கள் இங்கே வெறுமனே இருந்துகொண்டு, தன்னார்வத் தொண்டு செய்து ஆனந்தமாக இருக்கலாம்.

அனிருத், ரஷ்யா – நன்றியுணர்வின் அர்த்தத்தைக் கற்றுக்கொள்கிறேன்

ரஷ்யாவிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வருகை தந்த மக்களுக்கு பக்கத்துணையாக, தென்பகுதி ஆன்மீக யாத்திரை (Southern Sojourn Yatra) செல்வது என் சேவையின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தப் பயணத்தில் அவர்களுடன் இணைந்திருந்தது எனக்குப் பெருத்த ஆனந்தம் அளித்தது. ஏனெனில் உணவு, உறக்கம் பற்றி உண்மையில் நான் வருத்தப்படாததுடன், அவர்களுடைய அனுபவத்தை மேம்படுத்துவதற்கு அடுத்து என்னால் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றிய எண்ணம்தான் எப்போதும் எனக்குள் இருந்தது.

இதன் ஒரு பகுதியாக இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நான் உண்மையிலேயே நன்றி செலுத்துகிறேன். என்னுடன் நான் எடுத்துச் செல்வதற்கு ஒரு விஷயம் உண்டு என்றால், அது நன்றியுணர்வு என்ற சொல்லின் அர்த்தம்தான்.

பௌலினா, மெக்சிகோ – கொண்டாட்டமும், பழமை வழிமுறைகளை விட்டுவிலகுவதும்.

என் கடந்த பிறவியில் நான் இந்தியராக இருந்தேன் என்பதில் சமாதானம் அடையும் அளவுக்கு, நான் இந்தியக் கலாச்சாரத்தின் விசிறி! இந்தியாவில் ஒட்டுமொத்த தேசமும், மக்களும் பல வழிகளிலும் வாழ்வைக் கொண்டாடுகின்றனர் – ஒவ்வொரு பருவகாலத்துக்கும், தொழில் செய்ய உதவும் கருவிகளுக்கும், ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு பிராணிக்கும், தாவரங்களுக்கும், மற்றும் அனைத்துக்கும்!

என்னைப் பொறுத்தவரை சாதனாபாதை என்றால் விடுதலை – பழமை வழிகளிலிருந்து விடுதலை. முன்பெல்லாம் நான் எந்த நேரமும் அழுத்தத்துடன் அல்லது கோபமுடன் அல்லது பதற்றமுடன் இருந்தேன் – எப்போதும் எல்லாவற்றைக் குறித்தும் பதற்றமாக இருந்தேன். சாதனாபாதை அவைகளிலிருந்து, தொடர்ச்சியான பதற்றத்திலிருந்து என்னை விடுவித்துள்ளது.

நோரா, ஜெர்மனி/அயர்லாந்து: ஏமாற்றத்திலிருந்து, பரவசத்துக்கு

நான் பலவிதமான பணிகளைச் செய்துகொண்டு, வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்திருந்தேன். ஆகவே எப்போதும் ஒரு பரபரப்புடன் இருந்துகொண்டிருந்தேன். முன்பெல்லாம் நான் எவ்வளவு இறுக்கத்தில் இருந்தேன் என்பதைக்கூட நான் உணர்ந்தது கிடையாது என்று எண்ணுகிறேன். ஆகவே இந்த ஏழு மாத சாதனாபாதை உண்மையில் என்னை வெடித்தெழ வைத்துவிட்டது. இங்கே எனக்குக் கிடைத்த ஆனந்தமும், தெளிவும், சமநிலையும் உண்மையிலேயே நம்புதற்கரியது.

சாதனாபாதை 2018 பங்கேற்பாளர்களுக்கு அடுத்தபடி என்ன?

இங்கே தங்கும் ஆர்வத்தில் இருக்கும் சிலர், சத்குருவின் கனவை நிறைவேற்றுவதில் உதவி செய்யவும், சாதனாபாதையின்போது தங்களுக்குள் எழுந்த உணர்தலை மேன்மேலும் ஆழமாக எடுத்துச் செல்லவும் ஆசிரமத்திலேயே முழுநேர தன்னார்வத் தொண்டர்களாக இருப்பார்கள். பிறர் ஆசிரமப் பணிகளுக்கு எப்போதாவது உதவி செய்யவும் 2019 ஆண்டின் சாதனப்பாதை நிகழ்ச்சிக்கு உதவவும் திட்டமிட்டுள்ளனர்.

சாதனாபாதை 2019-க்கான பதிவுகள் தொடங்கிவிட்டன!

மக்களுக்கு மேலும் இந்த சாத்தியத்தை அதிகரிப்பதற்காக, சத்குரு இந்த வருடம் விரிவான அளவில் சாதனாபாதை-ஐ வழங்கவிருக்கிறார். இந்நிகழ்ச்சி குரு பௌர்ணமி அன்று (ஜூலை 2019) துவங்கி மஹாசிவராத்திரி (பிப்ரவரி 2020) அன்று நிறைவுபெறுகிறது.

மேலும் தகவலுக்கு:+91-83000 98777

பதிவு செய்க