சத்குரு:

கருவுற்றிருந்த கங்கை ஒரு ஆண் குழந்தைக்கு தாயானாள். ஆனால் பிறந்த குழந்தையை அப்படியே எடுத்துச்சென்று கங்கை நதியில் மூழ்கடித்தாள்‌. சாந்தனுவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இதயம் வலியில் துடித்தபோதும், ஏன் இப்படி செய்கிறாய் என்று கேள்வி கேட்டால் கங்கை தன்னை பிரிந்துவிடுவாள் என்பது நினைவுக்கு வரவே பொறுத்துக் கொண்டான். தன் மனைவியை பற்றிய ஆனந்தத்திலும் காதலிலும் மிதந்து கொண்டிருந்தவன் இப்போது துயரத்தில் தத்தளிக்க துவங்கினான்‌. கங்கையின் மீது ஒருவித பயமும் சாந்தனுவுக்கு ஏற்பட்டது. ஆனாலும் இன்னமும் காதல் இருந்ததால் இருவரும் இணைந்தே வாழ்ந்தனர். அடுத்த குழந்தை பிறந்தது. இப்போதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இந்த குழந்தையையும் தூக்கிச்சென்று மூழ்கடித்தாள் கங்கை.

Mahabharat Episode 6: The Birth of Devavrata

கிட்டத்தட்ட பித்துப்பிடித்த நிலையில் இருந்தான் சாந்தனு. கங்கையின் நிபந்தனை நினைவிலேயே இருக்க, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தான் சாந்தனு. இது இப்படியே தொடர, அடுத்து பிறந்த ஏழு குழந்தைகளை நதியில் மூழ்கடித்தாள் கங்கை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எட்டாவது குழந்தை பிறந்ததும் வழக்கம்போல எடுத்துச்சென்ற கங்கையை நதிக்கரை வரை தவிப்புடன் பின்தொடர்ந்து சென்றான் சாந்தனு. குழந்தையை மூழ்கடிக்கும்முன் கங்கையிடமிருந்து குழந்தையை பிடுங்கி கொண்டான். "போதும், ஏன் இப்படி மனிதத்தன்மை அற்றவளாக நடந்து கொள்கிறாய்?" என்று கங்கையை‌ கேட்டான். "நீ உன் வாக்கை மீறிவிட்டாய், நான் பிரிந்து செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் உனக்கு விளக்கம் தர கடமைப்பட்டுள்ளேன்," என்று துவங்கினாள் கங்கை.

நீண்ட காலத்திற்கு முன் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம் ‌நந்தினி என்ற தெய்வாம்சம் நிறைந்த பசு ஒன்றும் இருந்தது. ஒரு நாள் எட்டு வசுக்கள் அந்த பகுதியில் தங்கள் ஓய்வுபொழுதை கழிக்க வந்தார்கள். வேதங்களின்படி, பறக்கும் விமானங்கள் அல்லது வாகனங்களில் பயணம் செய்பவர்கள் என்று வசுக்கள் பற்றிய பல குறிப்புகள் இருக்கிறது. மேலும், அந்த வாகனம் தானாகவே இயங்கக் கூடியது என்றும், அதன் மேற்பரப்பு திரவ பாதரசம் போல சீராக இருந்தது‌ என்றும், அதில் இருந்த விளக்குகள் எண்ணையோ, நெருப்போ தேவையின்றி தாமாகவே எரியும் என்றும், பலவிதங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசுக்கள் அப்படியே உலவியவாறு ‌வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்த நந்தினியை பார்த்ததும் "எனக்கு இந்த பசு வேண்டும்" என்றாள் வசுக்களில் ஒருவனான பிரபாசாவின்‌ மனைவி. சிறிதும் யோசிக்காமல் "பசுவை பிடிக்கலாம் வாருங்கள்" என்று உடனிருந்தவர்களை அழைத்தான் பிரபாசா‌. "இந்த பசு நம்முடையதில்லையே, ஒரு முனிவருக்கு சொந்தமானதல்லவா. நாம் எப்படி எடுப்பது?" என்று ஓரிருவர் கேள்வி எழுப்பினார்கள். "கோழைகளுக்கு எப்போதுமே ஏதாவது காரணம் இருக்கும். உங்களால் பசுவை கொண்டுவர முடியாததால் தர்மநியாயம் பேசுகிறீர்கள்" என்றாள் பிரபாசாவின் மனைவி. இதை கேட்டதும், ஒரு ஆண்மகனாக இதை செய்தே தீரவேண்டும் என்று முடிவு செய்த பிரபாசா தன் குழுவினரின்‌ உதவியுடன்‌ சென்று பசுவை திருடினான்.

இந்த எட்டு வசுக்களும் கங்கையிடம் வந்து, "உன் கருவில் பிறக்க எங்களுக்கு வாய்ப்பு கொடு, அந்த கிரகத்தில் எங்கள் வாழ்வு எவ்வளவு குறுகியதாக இருக்கமுடியுமோ அவ்வளவு குறுகியதாக இருக்கும்படி நீ பார்த்துக்கொள்" என்று கெஞ்சினார்கள்.

தனக்கு பிரியமான பசு திருடப்பட்டதை உணர்ந்த வசிஷ்டர் அவர்களை பிடித்து, "எவ்வளவு தைரியம் உங்களுக்கு. விருந்தினர்களாக வந்து எங்களின் சிறப்பான கவனிப்பில் இருந்துவிட்டு எம் பசுவையே திருட துணிச்சல் வந்துவிட்டது. நீங்கள் எல்லோரும் எல்லா கட்டுப்பாடுகளும் இருக்கும் மனிதர்களாக பிறக்கப் போகிறீர்கள். உங்கள் சிறகுகள் பறக்க முடியாமல் ‌சிறைபடும். இந்த பூமியில் பொருள் உடலுடன் பிறந்து நடக்க வேண்டும், மற்றவர்களை போலவே இறக்க வேண்டும்," என்று சாபமிட்டார். இந்த எட்டு வசுக்களும் கங்கையிடம் வந்து, "உன் கருவில் பிறக்க எங்களுக்கு வாய்ப்பு கொடு, அந்த கிரகத்தில் எங்கள் வாழ்வு எவ்வளவு குறுகியதாக இருக்கமுடியுமோ அவ்வளவு குறுகியதாக இருக்கும்படி நீ பார்த்துக்கொள்" என்று கெஞ்சினார்கள்.

"அவர்களின் விருப்பத்தையே நான் நிறைவேற்றினேன். அவர்கள் ‌என் வழியாக பிறந்து‌ தங்கள் சாபத்தை கழிக்க விரும்பினார்கள். அதில் எழுவரை நான் காப்பாற்றிவிட்டேன், ஆனால் எட்டாவதை நீ காப்பாற்றி விட்டாய். பசு திருட காரணமான பிரபாசாதான் இந்த குழந்தை. ஒருவேளை இவனுக்கு பூமியில் நீண்ட காலம் வாழவேண்டியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது குழந்தையாக இருப்பதால் என்னுடனே எடுத்துச்செல்கிறேன். மீண்டும் பதினாறு வயதில் உன்னிடம் ஒப்படைக்கிறேன். அப்போது ஒரு நல்ல அரசனுக்கு தேவையான கல்வியறிவு, நிர்வாக திறமை எல்லாமும் ‌நிறைந்தவனாக இவன் இருப்பான்" என்றவாறே குழந்தையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் கங்கை.

என்ன‌ செய்வதென்றே தெரியாமலும், தனது‌ தேசத்தின் மீதும் ஆர்வமில்லாமல், சோர்வடைந்தான் சாந்தனு. பேரரசராக திகழ்ந்தவன் இப்போது எரிச்சலுடனும் ஆற்றாமையுடனும் இலக்கின்றி சுற்றித்திரியத் துவங்கினான்.

பதினாறு வருடங்களுக்கு பிறகு, தேவவிரதன் என்று பெயரிடப்பட்ட தங்கள் குழந்தையை‌ மீண்டும் சாந்தனுவிடம் ஒப்படைத்தாள் கங்கை. வில்வித்தையை பரசுராமரிடமும், வேதங்களை பிரகஸ்பதியிடமும் என ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களிடம் தன் கல்வியை கற்று அரசனாக முழுதகுதியுடன் தயாராக இருந்தான் தேவவிரதன். தன் பிள்ளையை பார்த்த உடனேயே சாந்தனுவின் எல்லா மன அழுத்தங்களும் பறந்தோடியது. உற்சாகத்துடனும் அன்புடனும் தேவவிரதனை தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனாக முடிசூடி மகிழ்ந்தான்.

அரச பரிபாலனத்தை ஏற்றுக்கொண்டு, சாந்தனுவின் சார்பாக எல்லாவற்றையும் மிகச்சிறப்பாக கவனித்துக் கொண்டார் தேவவிரதன். இதனால் ‌மீண்டும் மகிழ்ச்சியான மனிதனாக மாறிய சாந்தனு ஒருநாள் வேட்டையாட கிளம்பினான்.. மீண்டும் காதலில் விழுந்தான்.

தொடரும்...

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் பார்வையிலிருந்து மஹாபாரதக் கதை... ஒரு நெடுந்தொடர்! அழகியலும் கலைநயமும், பண்பாடும் கலாச்சாரமும், வாழ்வியலும் அரசியலும், தந்திரமும் தெய்வீகமும் ஒன்றாக இணைந்த ஒரு மாகாவியமான மகாபாரத கதையை ஞானியின் பார்வையிலிருந்து படித்து மகிழுங்கள்!

தொடர்