கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
Karma Quotes in Tamil, Karma Quotes Images, கர்மா quotes
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் உடல், மனம், உணர்வு, சக்தி நிலைகளில் ஏதோவொன்றை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒருவித நினைவை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது. இதனையே கர்மா என்கிறோம்.
பக்தி, கர்மவினையை அழித்து முக்திக்கு வழிவகுக்கிறது.
Karma Quotes in Tamil, Karma Quotes Images, கர்மா quotes
கர்மா என்பது செயல் மற்றும் ஞாபகங்களைக் குறிக்கிறது. செயலின்றி ஞாபகங்கள் இல்லை, ஞாபகங்கள் இன்றி செயலில்லை.
 Karma Quotes in Tamil, Karma Quotes Images, கர்மா quotes
புதிதாக மீண்டும் மீண்டும் கர்மப்பதிவுகளின் பசையை சேர்த்துக்கொண்டே சென்றால்தான், பழைய கர்மப்பதிவுகள் உங்கள் மீது ஒட்டிக்கொள்ளும். 
Karma Quotes in Tamil, Karma Quotes Images, கர்மா quotes
கர்மவினை என்பது உங்கள் செயலில் இல்லை - உங்கள் நோக்கத்தில்தான் உள்ளது. வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, என்ன நோக்கத்தில் செய்கிறீர்கள் என்பதுதான் கர்மவினையை உண்டாக்குகிறது.
Karma Quotes in Tamil, Karma Quotes Images, கர்மா quotes
கர்மவினை என்பது குறிப்பிட்ட சில சுபாவங்கள் மூலம் இயங்குகிறது. ஆனால் சற்று விழிப்புணர்வும் கவனமும் கொண்டு, அதனை உங்களால் திசைமாற்ற முடியும்.
விழிப்புணர்வு, Awareness
அனைத்து கர்ம வினைகளிலும், செய்வினை சக்திகளை சுய நலத்திற்காகவோ அல்லது பிறருக்கு கேடு விளைவிக்கவோ பயன்படுத்துவதுதான் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
 செய்வினை, Occult
கர்மா என்பது டேப் ரிக்கார்டரிலிருந்து மீண்டும் மீண்டும் ஒலிபரப்பாகும் பழைய ஒலிப்பதிவுகள் போன்றது. யோகா என்றால் வாழ்க்கை திரும்ப ஒலிபரப்பாவது மட்டுமல்ல, ஒரு ஆழமான சாத்தியம் மற்றும் அனுபவமாகவும் கூட ஆவது.
கர்மா மற்றும் யோகா, Karma and Yoga
விழிப்புணர்வான செயல் கர்மப்பதிவுகளை உருவாக்காது, எதிர்செயல் கர்மத்தை உருவாக்கும்.
 எதிர்செயல், Reaction

நீங்கள் பொருள்நிலையில் எவ்விதமான செயல் செய்தாலும் - அதை நீங்கள் ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் செய்தால், நீங்கள் ஒரு கர்மயோகி.
ஈடுபாடு மற்றும் மகிழ்ச்சி, Involvement and Joy
எதுவுமே இங்கு தற்செயலாய் நிகழ்வதில்லை. பொருள் உலகம் முழுவதுமே காரண காரியத்திற்கு இடையேதான் இயங்குகிறது.
காரண காரியம், Cause and Consequence 
கர்மா என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்களே உருவாக்குகிறீர்கள். கர்மவினையின் குவியல் வரமாகவும் இருக்கலாம், பாரமாகவும் இருக்கலாம் - தேர்வு உங்களிடத்தில்.
வரம் அல்லது பாரம், Boost or Burden
உங்கள் கடந்தகாலத்தில் நீங்கள் எத்தகைய கர்மவினையை சேர்த்திருந்தாலும், இந்த கணத்தின் கர்மவினை எப்போதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
இந்த கணத்தின் கர்மவினை, This Moment’s Karma
நீங்கள் என்ன செய்தாலும் இதை கவனியுங்கள் - அது உங்களைப் பற்றியது மட்டும்தானா, அல்லது அனைவர் நல்வாழ்வுக்குமானதா. நல்ல கர்மவினையா கெட்ட கர்மவினையா என்ற குழப்பத்திற்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.
 நல்ல கர்மவினை மற்றும் கெட்ட கர்மவினை, Good and Bad Karma
உங்கள் புரிந்து கொள்ளும் தன்மையில், பழைய நினைவுகளின் நிழல் இருந்தால் அதுதான் கர்மா. உங்கள் பழைய நினைவுகளே உங்கள் முன்முடிவுகளின் அடிப்படையும் கூட.
 முன்முடிவு, Prejudice
கர்மா உங்களை உயிர்வாழ வைக்கிறது, அதுவே உங்களை கட்டுண்டு கிடக்கவும் செய்கிறது. நீங்கள் சரியாகக் கையாண்டால், கர்மா உங்கள் முக்திக்கும் வழியாகிவிடுகிறது.
 முக்தி, Mukthi 
கர்ம யோகா என்றால் சேவை செய்வது என்று அர்த்தமல்ல. அது, செயல் செய்ய வேண்டிய நிர்பந்தத்தைக் கடந்து செல்வதையே குறிக்கிறது.
 நிர்பந்தம், Compulsiveness 
கர்மா என்றால் உச்சபட்ச பொறுப்பு. உங்கள் மரபுவழிப் பண்புகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்கிறீர்கள்.
 மரபுவழிப் பண்புகள், Genetics
உண்மையில் நீங்கள் தியான நிலையை அடையும்போது, நீங்கள் கர்மவினையின் எல்லைக்கு அப்பால் இருப்பீர்கள்.
  தியான நிலை, Meditativeness 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.