கொரோனா வைரஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியை எப்படி எதிர்கொள்வது?

சத்குரு: செயல்படுவதைக் காட்டிலும் செயல்படாமை அதிக முக்கியத்துவம் பெறும் காலங்கள் இருக்கின்றன. இது, அதைப்போன்ற ஒரு காலம். பணிரீதியாக, குறிப்பாக பயணரீதியாக நீங்கள் எவ்வளவு குறைவாகச் செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது – ஏனென்றால், நாம் பல தொற்று நோய்களைக் கண்டிருக்கிறோம். மலேரியா தொற்று மற்றும் மிகச் சமீப காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா தொற்றுகளால் இந்தியா பாதிப்புக்குள்ளாகி இருந்திருக்கிறது. இந்த மூன்று தொற்று நோய்களுக்குமே, கொசுக்கள் தொற்று பரப்பிகளாக இருக்கின்றன. ஆகவே நாம் எப்போதுமே கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால் தற்போதைய சூழலில், நாம்தான் நோய் கடத்திகளாக இருக்கிறோம். நாம் கொல்லமுடியாது, ஆதலால் நாம் பதுங்கியிருக்க வேண்டும். இப்போது நாம் நிமிர்ந்து உட்கார்ந்து, நமது வாழ்க்கையை சற்றே உற்று நோக்கி, சிந்தனை செய்து, நமது வாழ்க்கை என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்தப் பாதையில் செல்வதற்கான நேரமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், நமது வாழ்வின் நிச்சயமற்ற இயல்பை உணர்வதற்கான நேரமாக இருக்கிறது. தினசரி அளவிலேயே நமது வாழ்க்கை மிகவும் நிச்சயமற்றது என்பதை பெரும்பாலான மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை – ஒரு நுண்ணிய கிருமி நம்மைக் கொன்றுவிட முடியும்.

நமது வாழ்க்கையை சற்றே உற்று நோக்கி, சிந்தனை செய்து, நமது வாழ்க்கை என்னவாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்தப் பாதையில் செல்வதற்கான நேரமாக இருக்கிறது.

நாம் எதிர்கொண்டிருக்கும் எதிரிகள் கண்ணுக்குப் புலப்படாதவர்கள். இந்தக் காரணத்தினால்தான் அவைகள் மிகவும் அபாயகரமானவையாக இருக்கின்றன. இப்போது நாம் நோய் கடத்திகளாக இருக்கிறோம். அதனால் அது ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்குச் செல்லும்போது, இடையில் இருக்கும் ஒரு நபர் இல்லையென்றால், அது அடுத்த நபருக்குச் செல்லாது. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, பொதுவாக அதிக பயணங்களை மேற்கொள்ளும் நாங்கள் அனைவரும், எல்லா இன்னர் எஞ்ஜினியரிங் ஈஷாங்காக்களும், நான் உட்பட பயணங்களை ரத்து செய்துவிட்டோம். பலரும் பயணம் குறித்து புகார் கூறுவதுண்டு – இப்போது இங்கிருப்பதில் அவர்கள் மகிழ்ச்சிகொள்ள வேண்டும். அதிகமாக செயல்படாமல் இருப்பது எப்படி என்பதை இப்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட, யோகப் பயிற்சிகள் செய்வதற்கு நேரமில்லாமல் இருந்தவர்களுக்கு, இப்போது நேரம் இருக்கிறது. நீங்கள் பரபரப்பாக இருந்த காரணத்தால், உங்கள் கண்களை மூடி தியானம் செய்ய முடியாமல் இருந்திருந்தால், இதோ நீங்கள் இங்கு வந்துவிட்டீர்கள். உங்கள் கண்களை மூடி அமர்ந்திருப்பதற்கான நேரம் இது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கரோனா வைரஸ் சுய கட்டுப்பாடு – ஒரு யதார்த்த நிலை பரிசோதனைக்கான நேரம்

இது நம் அனைவருக்குமான யதார்த்தத்தின் பரிசோதனைக் களம். நாம் இருந்துகொண்டிருக்கும் நிச்சயமற்ற வாழ்வில், நமது வாழ்வு மிக மிக நுட்பமானது மற்றும் கணத்தில் மறைந்து போகக்கூடியது. இதைப் புரிந்துகொண்டு இங்கே வாழக்கூடிய அளவுக்கு நம்மை நாமே ஒருங்கிணைத்து, அந்த மாதிரியான ஒரு வாழ்க்கைக்கு நாம் திட்டம் வகுத்திருக்கிறோமா? அல்லது உங்களுக்கே உரிய தற்காலிக நம்பிக்கையின்பாற்பட்ட ஒரு உலகத்தில், இங்கே நிரந்தரமாக நீங்கள் இருக்கப்போவதாக நினைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? நாம் யார்? என்பதற்கான யதார்த்தமானதொரு சோதனைக் களம் இது.

இதனை நாம் பயன்படுத்திக்கொள்வோம். உங்களை நீங்களே ஞானமடையச் செய்ய முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் வைரஸை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது போகிறப்போக்கில் உங்களை உணரச் செய்கிறது, யாரோ ஒருவர் தும்மிவிட்டால் நீங்கள் இறந்துபோவீர்கள். அது ஒரு நல்ல பாடமாகவும், நல்லதொரு நினைவூட்டலாகவும் இருக்கிறது. இது பீதியடைவதற்கான நேரம் அல்ல, ஆனால் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய தேவை உள்ளது. ஆசிரமத்தில் நம்மால் இயன்ற ஒவ்வொரு சாத்தியமான படியையும் நடைமுறையில் செயல்படுத்துகிறோம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுவதுடன், அதன் ஒரு பகுதியாகவும் இருக்கவேண்டும். யாராவது சிறிது உடல் நலம் குன்றியிருந்தாலும்கூட, அவர்கள் பரிசோதனை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கைகள்

நாம் இதனை வெற்றிகரமாகவும், கம்பீரமாகவும் நடத்திக்கொள்ள விரும்புகிறோம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்? இந்தியாவில் நம்முடைய மக்கள்தொகையை கருத்தில்கொண்டு தற்போது இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் அற்புதமான ஒன்று. தயார் நிலை மற்றும் தவிர்த்தல் என்கிற அணுகுமுறையை, தேசத்திற்காக மட்டுமல்லாமல், எல்லையை நம்முடன் பங்குபோடும் எல்லா தேசங்களுக்காகவும் செயல்படுத்தி வருகிறோம். இது நமக்கு மிக அதிகமான பொருளாதார சுமையை ஏற்படுத்தும். மக்கள் மற்றும் வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில், தேசமும், உலகமும் மிகப் பெரிய அளவில் பொருளாதாரத் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது. இதற்கு அளவிட முடியாத விலை கொடுக்கவேண்டியுள்ளது, ஆனால் இறப்பை விட எந்த விலையும் மேலானதுதான். தற்போது, உயிருடன் இருப்பதில்தான் கவனம் இருக்கிறது. 

நீங்களோ, உங்களைச் சுற்றிலும் உள்ள வேறு ஒருவரோ வைரஸுக்கு பலியாகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களையோ அல்லது சுற்றிலும் உள்ள யாரையுமோ ஆபத்து நெருங்காமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இது ஓய்ந்து முடியும் காலம்வரை, இந்தப் பொறுப்புணர்வுடன் நீங்கள் வாழவேண்டும்.

உயிருடன் தங்கி இருப்பதற்கு, செயல்படுவதை நீங்கள் குறைத்துக்கொள்வதுடன், பிரயாணம் செய்வதை சிறிது தள்ளிவைக்கவும் வேண்டும். உங்களது நட்புறவுகள், மக்களிடம் உங்களுடைய நெருக்கம், இவற்றையெல்லாம் சிறிது காலத்திற்கு நீங்கள் ஒதுக்கிவைக்க வேண்டும். அன்பானது உங்களது இதயத்தில் வளர்க்கப்பட வேண்டும்; சிறிது காலத்திற்கு அதனை வெளிப்படுத்தத் தேவையில்லை. நீங்களோ, உங்களைச் சுற்றிலும் உள்ள வேறு ஒருவரோ வைரஸுக்கு பலியாகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களையோ அல்லது சுற்றிலும் உள்ள யாரையுமோ ஆபத்து நெருங்காமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இது ஓய்ந்து முடியும் காலம்வரை, இந்தப் பொறுப்புணர்வுடன் நீங்கள் வாழவேண்டும். உங்களுக்கு இருமல் இருந்தால், மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். இது வேற்றுமை பாராட்டுதல் அல்ல, இதுதான் புத்திசாலித்தனம். இத்தகைய சூழ்நிலைகளில் அறிவுடன் இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். அறிவில்லாமல் இருப்பவர்கள் துணிச்சலுடன் இருந்து, இறந்துபோவார்கள்.

மற்றவர்களுக்காகவும், உங்களுக்காகவும் பொறுப்பேற்றுக்கொள்வது

அதைக் குறித்து அளவுக்கதிகமாக பீதியடையவேண்டிய தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்கும், பீதியடைவதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது – பீதியடைதல் என்றால் நீங்கள் தவறான விஷயங்களையே செய்வீர்கள்; முன்னெச்சரிக்கை என்றால் நீங்கள் சரியான விஷயங்களைச் செய்கிறீர்கள். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரிடமிருந்தும் விலகியிருக்க வேண்டும். உங்களுடைய வெளி உலக செயல்பாடுகளை குறைந்தபட்சமாக வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் பயணம் மேற்கொள்வதற்கான நேரம் இது அல்ல. உங்களில் பலரும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்ததால், உங்களால் தியானம் செய்யவோ அல்லது ஷாம்பவி மஹாமுத்ரா செய்யவோ முடியவில்லை – இப்போது நேரம் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, உங்களையே நீங்கள் நன்றாகக் கட்டமைத்துக்கொள்ள முடியும். வாழ்க்கை நம் மீது எதை எறிகிறது என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாது, ஆனால் அதிலிருந்து நாம் என்ன உருவாக்குகிறோம் என்பது நூறு சதவிகிதம் நம்மிடம் இருக்கிறது.

வாழ்க்கை நம் மீது எதை எறிகிறது என்பதை நம்மால் முடிவு செய்ய இயலாது, ஆனால் அதிலிருந்து நாம் என்ன உருவாக்குகிறோம் என்பது நூறு சதவிகிதம் நம்மிடம் இருக்கிறது.

இப்போது, ஏதோ ஒரு காரணத்தினால், இயற்கை நம்மை நோக்கி ஒரு ஆட்கொல்லி வைரஸை எறிந்துள்ளது. அதிலிருந்து சிறப்பானதை உருவாக்குவோம். அது போய்விடும். அதை, கோடை வெய்யில் கொல்லுமோ, அதுவாகவே இறந்துவிடுமோ அல்லது வேறு ஏதாவது வழியில் போகுமோ, நமக்குத் தெரியாது. ஆனால் அது என்றென்றைக்கும் நீடித்திருக்காது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், அது கண்களுக்குப் புலனாகாத ஒரு எதிரியாக இருக்கும் காரணத்தால், நாம் தலை வணங்கியவாறு சற்று நேரம் இங்கே அமர்ந்திருக்கிறோம். அது கடந்து செல்லட்டும். அது ஒரு பெரிய ராட்சசனாக இருந்திருந்தால், நாம் அதை எதிர்த்துப் போரிட்டிருப்போம். வைரஸ் இடம் பெயர்வதற்கு நாம் தேவைப்படுவதால், இப்போது நாம் செய்யவேண்டியதெல்லாம் அதற்கு மேன்மேலும் புதிய வாழ்விடங்களை அளிக்காமல் இருப்பதுதான். இந்த உறுதிமொழியை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம், வைரஸை மற்றொரு மனிதருக்கு எடுத்துச்செல்லும் கடத்தியாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்துவீர்கள். வைரஸ் உங்களிடம் வந்தால், அது உங்களோடு நிற்கவேண்டும். இதைப்பற்றி நீங்கள் கவனம்கொள்ள வேண்டும்.

சமநிலையும், புத்திசாலித்தனமும்தான் அதிகம் தேவைப்படுகிறது

அறிவியல் கணிப்புகள், வைரஸின் உயிர்சுழற்சி பற்றியும், அது எப்படி பலவீனமாகிறது என்பதையும் பேசுகின்றன. அது ஏப்ரல், 15க்குள் பலவீனமடையுமா, இல்லையா என்பது, நாம் வழிகாட்டுமுறைகளின்படி நடந்துகொள்கிறோமா அல்லது வைரஸ் முன்னெச்சரிக்கைகளால் களைப்படைந்து, பெருத்த விலை கொடுக்கும் விதத்தில் வழக்கமான நமது செயல்பாடுகளில் ஈடுபடுவோமா என்பதைப் பொறுத்தே இருக்கிறது.. உங்களைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கை நெருக்கடியில் இருக்கும்போது, உங்களுடைய புத்திசாலித்தனம், உங்களது உடல் ஆரோக்கியம், உங்கள் சமநிலையான உணர்வு, உங்கள் அறிவுகூர்மை, எல்லாமே மிக உயரிய மதிப்புடையதாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு போராட்டத்தை நாம் எதிர்கொள்ளும்போது, இது உள்முகமாகத் திரும்புவதற்கான நேரமாகவே இருக்கிறது.