ஏன் சூரிய சக்தி?
நம்ம உடல் ஆரோக்கியமா இருப்பதற்கும் பல நோய்களில் இருந்து பாதுகாக்கவும் ரொம்ப முக்கியமானது நோய்எதிர்ப்பு சக்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சூரியனின் பங்கு அதிகமாக உள்ளது
இந்த சூரியனின் சக்திய முழுமையாக உள்வாங்கிக்குறதுக்கு இருக்கின்ற பயிற்சிகளில் மிக எளிதானதும் அனைவருக்கும் பொருத்தமானதும் சூரிய சக்திதான்.
பலன்கள்
இதயத்திற்கு பலம் அளிக்கிறது.
ஆற்றலைப் பெருக்குகிறது.
சீரண மண்டலத்தை சீரமைக்கிறது.
ஹார்மோன் சமச்சீரின்மையைச் சரி செய்கிறது.
எலும்பு மூட்டுகளின் உராய்வை தடுக்க உயவூட்டுகிறது.
மனத்தெளிவு, மனம்குவிப்புத் திறனை மேம்படுத்துகிறது
இளைய தலைமுறையின் வாழ்வில் சூரிய சக்தி விதைத்த மாற்றங்கள்
சூரிய சக்தி யோக பயிற்சியை சிறந்த முறையில் பெற சில வழிகாட்டுதல்கள்
7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்
நிகழ்ச்சி துவங்குவதற்கு குறைந்தது 10 நிமிடங்கள் முன்னதாக இருக்கையில் அமரவும்.
யோகா மேட் / பெட் ஷீட் கொண்டு வரலாம்.
பயிற்சி கற்றுக் கொள்ள, காலி வயிற்று நிலையில் வரவேண்டும். (சாப்பிட்ட பிறகு 4 மணி நேர இடைவெளி)
பயிற்சிக்கு தளர்வான ஆடை அணிவது சிறந்தது.
கருவுற்ற பெண்கள், குடலிறக்கம் (Hernia) இருப்பவர்கள், கடந்த 6 மாதத்திற்குள் பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது.