மஹாளய அமாவாசை 2020

"இந்நாள், நம் வாழ்க்கைக்கு பல விதங்களில் பங்காற்றியுள்ள நமது மூதாதையர்களுக்கு நம் நன்றியை வெளிப்படுத்துவதற்கான நாள்." - சத்குரு

காலபைரவ சாந்தி செயல்முறை

 

மஹாளய அமாவாசை 2020

"இந்நாள், நம் வாழ்க்கைக்கு பல விதங்களில் பங்காற்றியுள்ள நமது மூதாதையர்களுக்கு நம் நன்றியை வெளிப்படுத்துவதற்கான நாள்." - சத்குரு

காலபைரவ சாந்தி செயல்முறை

seperator
 

மஹாளய அமாவாசை என்றால் என்ன?

மஹாளய அமாவாசை, பெண்தன்மையை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒன்பது இரவுகளான நவராத்திரி அல்லது தசராவின் துவக்கத்தைக் குறிக்கும் அமாவாசை நாள். இந்த ஆண்டு, மஹாளய அமாவாசை வரும் தேதி: 16 செப்டம்பர் 2020.

மஹாளய அமாவாசையின் மகத்துவம்

சத்குரு: முதலில், நமக்கு முன் வந்த தலைமுறைகள் இல்லாமல் நாம் இங்கு இருக்க வழியில்லை. அடுத்து, அவர்களது பங்களிப்பு இல்லாமல் இன்று நம்மிடம் இருப்பவை அனைத்தும் நமக்கு இருந்திருக்காது. இந்நாள் அவர்கள் அனைவருக்கும் நாம் நம் நன்றியை வெளிப்படுத்துவதற்கான நாள். காலமடைந்த பெற்றோர்களுக்கு இந்நாளில் திதிகள் செய்யப்படுகிறது, ஆனால் இந்நாள் நமக்கு முன் வாழ்ந்த மூதாதையர்கள் அனைவருக்கும் நன்றி வெளிப்படுத்துவதற்கான நாளாகும். மேலும் வாசிக்க

காலபைரவ சாந்தி

காலபைரவி சாந்தி என்பது பிரியமான ஒருவரின் மரணத்திற்குப் பிறகு எந்தவொரு அமாவாசை இரவிலும் அவருக்காக செய்யப்படக்கூடிய புனிதமான சடங்காகும். மஹாளய அமாவாசையன்று ஒரு விசேஷமான வருடாந்திர காலபைரவ சாந்தி செய்யப்படுகிறது

 

பதிவுசெய்ய

இறந்தவரின் புகைப்படத்தோடு, அவரின் பிறந்தநாள் அல்லது சரியான பிறந்த வருடம், அதோடு அவரது இறந்த தேதி அல்லது சரியான இறந்த வருடம், இறந்த வருடம் தெரியவில்லை எனில், இறந்தவரின் தாய் தந்தை இருவரின் பெயர்களும் தேவைப்படுகிறது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு காலபைரவி சாந்தி செய்வதற்கு ஒரே பதிவாகவும் செய்துகொள்ள முடியும்.

கவனிக்க வேண்டியவை:

  1. இறந்தவரின் புகைப்படம் தேவைப்படுகிறது. பலர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பயன்படுத்த முடியாது. இப்புகைப்படம் அவர் உயிருடன் இருந்தபோது எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
  2. கருத்தரித்து 48 நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட கருக்கலைப்பு அல்லது இறந்து பிறந்த குழந்தை என்றால், தாயின் புகைப்படம் (கர்ப்பமாக இருந்தபோது எடுத்திருந்த புகைப்படம் சிறந்தது) பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. பெண்கள் கர்ப்பமாக இருந்தாலோ, மாதவிலக்கு சமயமாக இருந்தாலோ, காலபைரவ சாந்திக்கு வரக்கூடாது, அது அவர்கள் நல்வாழ்வுக்கு உகந்ததாக இருக்காது.

மேலும் தகவல்களுக்கு:

+91-8300083111 / info@lingabhairavi.org
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளூர் மையங்களிலும் முன்பதிவு செய்யமுடியும்.

 
இந்நாளைக் கொண்டாட பிற வழிகள்
seperator
Annadanam
அன்னதானம்

அமாவாசை நாள் அல்லது பிற விசேஷ நாட்களில் ஈஷா யோகா மையத்திற்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கமுடியும்.