நமது வெற்றிக்கு உதவ அறிவு, புத்திசாலித்தனம், திறமை, பயிற்சி என இவையெல்லாம் இருக்க, லிங்கபைரவி யந்திரம் பெரிதாக நமக்கு என்ன செய்யப் போகிறது?! சிலருக்கு இப்படி நினைக்கத் தோன்றலாம்! நமது குறிக்கோளை அடைய உறங்காமல் செயலாற்றும் லிங்கபைரவி யந்திரங்கள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார். யந்திரங்களுக்குப் பின்னால் உள்ள அறிவியலையும் இதன்மூலம் அறியலாம்!

Question: சத்குரு, நீங்கள் லிங்கபைரவி யந்திரங்கள் மற்றும் அவிக்ன யந்திரங்களை வழங்குகிறீர்கள் என அறிகிறோம். யந்திரங்கள் பற்றியும் அவை எப்படி உதவியாய் இருக்கும் என்பதையும் விளக்க முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்படும் பொருள்நிலையிலுள்ள ஒன்றை எந்திரம் என அழைக்கிறோம். அந்த வகையில் பார்த்தால், எந்திரம் என்பது ஒரு இயங்கும் இயந்திரமாகும். மனித உயிர் எப்போதும் அடுத்த நிலைக்கு விரிவடைவதற்கான தேடலை தொடர்ந்தவண்ணம் உள்ளது. நாம் கண்டுபிடித்துள்ள அனைத்துவகை எந்திரங்களும் நாம் தற்போது கொண்டுள்ள திறமையை மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், இந்த இரண்டு யந்திரங்களும் அதில் அடங்காது!

இந்த யந்திரங்கள் பொருள்நிலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டாலும், இவை அடிப்படையில் மந்தத் தன்மையற்ற தூய சக்தி வடிவங்களாகும்.

பொருள்தன்மை கொண்டவற்றைக் கொண்டு ஒரு எந்திரத்தை உருவாக்கும்போது அங்கு குறிப்பிட்ட அளவிலான மந்தத்தன்மை இருக்கும். மந்தத்தன்மை என்பது பொருள்நிலையில் இயல்பான ஒன்று. பழங்கால இந்தியாவில் உருவாக்கப்பட்ட எந்திரங்கள் இந்த பூமியிலிருந்து பெறப்படும் பொருட்களிலிருந்து உருவாக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் செயலற்ற மந்தத்தன்மையை விரும்பவில்லை. அவர்கள் அந்த எந்திரம் நாம் என்ன செய்கிறோம் அல்லது என்ன செய்யவில்லை என்பதையெல்லாம் சார்ந்து இருக்கக் கூடாது என நினைத்தார்கள். ஏனென்றால், மனிதன் ஒரு சமனில்லா உறுதியில்லா உயிர் என்பதை உணர்ந்திருந்தனர். நாம் கீழேயும் மேலேயும் போகிறோம். இன்று முக்கியமானதாக தோன்றும் ஒரு விஷயம், மறுநாள் காலையில் முக்கியமற்றதாய் ஆகிவிடுகிறது.

உங்கள் வாழ்வில் எந்தவொரு இலக்கை அடைய முயன்றாலும், நீங்கள் தூங்கும்போது அதை அடைவதற்காக செயல்படுவதில்லை. மீண்டும் காலையில் அந்த குறிக்கோளை நோக்கி செயல்பட நினைக்கிறீர்கள், அதற்குள் அது செயலற்று போய்விடுகிறது. அதனால், செயலற்ற தன்மையில் நீங்கள் இருக்கும்போதும் கூட செயல்படக் கூடிய ஒரு சக்தி வடிவத்தை உருவாக்குகிறோம். உறக்கம் என்பது உங்கள் பொருள் உடலை செயலற்ற தன்மைக்கு கொண்டு செல்வதாகும். உங்களுக்கு உடல் என்பது இல்லையென்றால் நீங்கள் உறங்கவே மாட்டீர்கள்.

மந்தத்தன்மை அற்ற யந்திரங்களை நாம் வெவ்வேறு காரணங்களுக்காக உருவாக்க முடியும் - ஆரோக்கியம், வளம், சுபிட்சம், புத்திச்சாலித்தனம் போன்றவற்றிற்காக உருவாக்கலாம். நீங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி செயல்படும்போது, நீங்கள் உறங்கினாலும், சுயநினைவற்று இருக்கும்போதும், நீங்கள் அதைப்பற்றிய கவனம் இல்லாத போதும்கூட, ஏதோ ஒன்று உங்களுக்காக அந்த நோக்கில் செயல்படுகிறது. இந்த யந்திரங்கள் பொருள்நிலையின் அடிப்படையில் அமைக்கப்பட்டாலும், இவை அடிப்படையில் மந்தத் தன்மையற்ற தூய சக்தி வடிவங்களாகும்.

அவிக்னா என்றால் “தடைகளை அகற்றுவது” என்று பொருள். உங்கள் திறனுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் தடைகளைத் தகர்த்து வெற்றிகொள்வதற்கும் அவிக்ன யந்திரங்கள் துணை நிற்கின்றன. அதனுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் ஒருவரின் சக்திநிலை குறிப்பிட்ட விதத்தில் வலுப்பெறுகின்றன, சவால்களை வெற்றிகொண்டு எளிதாய் வாழ்வை அமைத்துக்கொள்ள முடிகிறது.

அறிவு, புத்திசாலித்தனம், திறமை, பயிற்சி என இவை அனைத்தும் வெற்றி பெறுவதற்கு அவசியம் தேவைதான். ஆனால். அருள் என்ற தன்மை ஒருவரைத் தொடாமல், இவை அனைத்தும் இருந்தும் வெற்றியை ருசிக்க முடியாது.

ஆசிரியர்: ஜூலை 22ஆம் தேதி யந்திரா வைபவம் நடைபெற இருக்கிறது. சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம். மேலும் தகவல்களுக்கு, மின்னஞ்சல் செய்யவும் yantra@lingabhairavi.org அல்லது கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்புகொள்ளவும்: 94890 45133