கேள்வியாளர்: நம் அன்றாட வாழ்க்கையில், நமக்கு பல ஆசைகள் உள்ளன, அதைநோக்கி பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாம் விரும்புவதை தேவி தானாகவே அறிவாளா, நாம் பயணிக்கும் பாதை அவளுக்கு தெரியுமா?

சத்குரு: நீங்களே சைக்கிள் அல்லது படகு வாங்கினால், நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று சைக்கிள் அல்லது படகு முடிவு செய்யுமா? அது உங்கள் பயணத்தை மேம்படுத்தும். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதை பைரவி அறியவேண்டிய அவசியம் இல்லை. பைரவிக்கு நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று தெரியவேண்டிய அவசியம் இல்லை, உங்கள் பயணத்திற்கான திறனை அவள் மேம்படுத்துகிறாள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதனால்தான் அவள் ஒரு இயந்திரம் என்று சொல்கிறேன். பைரவியுடன் ஒரு உறவை நாம் ஏற்படுத்திக்கொண்டால், அவள் நம்மை ஒரு குறிப்பிட்ட திசையில் அழைத்துச் செல்வாள் – உதாரணத்திற்கு உங்களை முக்தியை நோக்கி அழைத்து செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம் - பிறகு நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும், அவள் உங்களை அதை நோக்கி மட்டுமே இழுத்துச் செல்வாள். ஆனால் அவள் உங்களை மிக உயர்ந்த சாத்தியத்தை நோக்கி அழைத்துச் செல்லும்போது, நீங்கள் விருப்பமின்றி சென்றால், அது உங்களுக்கு ஒரு பரிதாபகரமான வாழ்க்கையாக மட்டுமே இருக்கும். 

பைரவியுடன் ஒரு உறவை நாம் ஏற்படுத்திக்கொண்டால், அவள் நம்மை ஒரு குறிப்பிட்ட திசையில் அழைத்துச் செல்வாள் – உதாரணத்திற்கு உங்களை முக்தியை நோக்கி அழைத்து செல்கிறாள் என்று வைத்துக்கொள்வோம் - பிறகு நீங்கள் எங்கு செல்ல விரும்பினாலும், அவள் உங்களை அதை நோக்கி மட்டுமே இழுத்துச் செல்வாள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் அவளுடன் ஒரு தொடர்பை நாம் ஏற்படுத்தும்போது, பைரவி நீங்கள் விரும்புவதை மேம்படுத்துவாள், அவள் எதையும் முடிவு செய்வதில்லை. உங்கள் திறன் மேம்பட்டவுடன் நீங்கள் எங்கு செல்லவிருக்கிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்கவேண்டியது மிக முக்கியம். நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் இலக்கை மாற்றிக்கொண்டே இருந்தால், அதனால் ஏற்படும் தவறுகள் பெரிதாக இருக்கும். ஏனென்றால், ஒரு இயந்திரம் உங்களை மேம்படுத்தியுள்ளது. நீங்கள் நடந்து கொண்டிருக்கும்போது தவறான திசையில் செல்கிறீர்கள் என்று புரிந்தால், உடனே பாதையை மாற்றி திரும்பிக்கொள்ளலாம். அதேசமயம் நீங்கள் ஒரு விமானத்தை செலுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் திடீரென்று திரும்ப முடியாது, அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும். நீங்கள் மேம்பட்ட திறனை பெற்றவுடன், நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக தீர்மானிப்பது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் திசைகளை மாற்றுவது வாழ்க்கையை வீணாக்கும்.

"தேவி எனக்கு ஏதாவது கொடுக்கப் போகிறாள்" என்று நினைப்பதற்கு பதிலாக உங்களை பக்தியுடன் அவளோடு இணைத்துக்கொள்ளுங்கள். அவள் உங்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் அவளை கவனித்துக் கொள்ளுங்கள். நடக்க வேண்டியது தானாகவே நடக்கும். அவளிடம் எதையும் கேட்பது சிறந்த வழி அல்ல. அதைவிட அவளுடன் உங்களை எவ்வளவு ஆழமாக இணைக்க முடியும் என்பதைப் பார்ப்பதே சிறந்த வழி. ஏனென்றால், நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து மட்டுமே எதையாவது கேட்பீர்கள். உங்களுக்குத் தெரியாததை நீங்கள் கேட்க முடியாது. உங்களுக்குத் தெரிந்ததைக் கேட்பது இப்போதைக்கு வளர்ச்சியைப் போல் தோன்றலாம், ஆனால் அது உண்மையில் ஒரு அடி பின்னோக்கி செல்லும் நிலையாகும்.

இதுவரை தெரியாத விஷயங்கள் உங்களுக்கு நடக்க வேண்டுமென்றால் முதலில் கேட்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் வெறுமனே அந்த ஆற்றலுடன் இணைந்தால், விஷயங்கள் தானாக நடக்கும்.

இதுவரை தெரியாத விஷயங்கள் உங்களுக்கு நடக்க வேண்டுமென்றால் முதலில் கேட்பதை நிறுத்த வேண்டும். நீங்கள் வெறுமனே அந்த ஆற்றலுடன் இணைந்தால், விஷயங்கள் தானாக நடக்கும். அது எந்த வழியில் நடந்தாலும், அது நன்றாக இருக்கிறது என்ற எண்ணம் வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தும் நடக்க, உங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையின் தரத்தை தீர்மானிக்காத வகையில் உங்களை நீங்களே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்கள் வேலையின் தரத்தையும், உலகில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கலாம். ஆனால் - அது உங்களையும் உங்கள் தரத்தையும் தீர்மானிக்கக்கூடாது. ஒருமுறை இந்த நிலையை எட்டிவிட்டால், பின் அவளிடம் எதையாவது கேட்பது என்பது உங்களுக்கு வேடிக்கையாக தோன்றும். ஏனென்றால், நீங்கள் ஏற்கனவே அறிந்த விஷயங்களை மட்டுமே கேட்கிறீர்கள்.

நீங்கள் தெய்வீகத்தை இயக்க வேண்டுமா அல்லது தெய்வீகம் உங்களை இயக்க வேண்டுமா? நீங்கள் அதை புரிந்துகொண்டால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போதே, நீங்கள் தெய்வீகத்தை இயக்க முயற்சிக்கிறீர்கள், இது ஒரு வேடிக்கையான வழி

நமக்குத் தெரிந்தவைகளை தாண்டி சில விஷயங்கள் நடக்கவேண்டுமென்றால், எதையும் கேட்டு பெறுவது சரியான வழி இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது என்பது நம் வாழ்க்கையின் மிகக் குறுகிய செயல். அதைவிட ஆழமான வழிகள் உள்ளன. இதே நிலைதான் எனக்கும் கூட. நான் எதையும் உட்கார்ந்து முடிவெடுப்பது கிடையாது. நான் செய்யும் செயல்கள் அனைத்திலும் சிவனை ஐம்பது சதவிகித பங்குதாரராக ஆக்கிக்கொள்வேன். சிவன் எனக்கு ஏதோ செய்கிறார் என்பதால் அல்ல. அவர் எதையும் செய்யமாட்டார். நான்தான் எல்லாவற்றையும் செய்வேன். எந்த இடத்தில் திரும்ப வேண்டும் என்பதற்கு இண்டிகேட்டரை போடுவது மட்டுமே அவர் வேலை. வண்டியை இயக்குவது என்னுடைய வேலை. திசையை மட்டும் காட்டுவதற்காக அவருக்கு ஐம்பது சதவிகிதம். இண்டிகேட்டர் எந்த திசையை காட்டுகிறதோ அந்த திசையில் பயணிப்பேன். நான் இண்டிகேட்டரை போடுவது கிடையாது. அதுவாகவே இயங்கும். இண்டிகேட்டர் விளக்கு எரிய ஆரம்பித்தால், இந்த பக்கம் திரும்ப வேண்டும் என்று புரிந்துகொள்வேன். காது கேட்காத ஓட்டுனருக்கு செய்யப்பட்ட தனி ஏற்பாடு இது.

எனவே, ஏதாவது நடக்கப்போகிறதா இல்லையா என்று கவலைப்பட வேண்டாம். அது நடந்தால் - நல்லது. அது நடக்கவில்லை என்றால் - மிகவும் நல்லது. “பிறகு, ஏன் பைரவி? நான் அவளுடன் என் நேரத்தை வீணடிக்கிறேனா? ”நீங்கள் தெய்வீகத்தை இயக்க வேண்டுமா அல்லது தெய்வீகம் உங்களை இயக்க வேண்டுமா? நீங்கள் அதை புரிந்துகொண்டால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இப்போதே, நீங்கள் தெய்வீகத்தை இயக்க முயற்சிக்கிறீர்கள், இது ஒரு வேடிக்கையான வழி.

ஆசிரியர் குறிப்பு: அடுத்த யந்திர வைபவம் ஈஷா யோக மையத்தில் 2020 ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில், சக்திவாய்ந்த ஒரு செயல்முறைக்கான தீட்சை மற்றும் சத்குருவின் முன்னிலையில் யந்திரத்தை பெறுதல் போன்ற நிகழ்வுகள் இருக்கும். மேலும் தகவல்களுக்கு, இங்கே கிளிக் செய்க அல்லது அழைக்கவும் 844 844 7708.