கேள்வியாளர்: சத்குரு, தாய்மொழியில் கல்வி கற்பித்தல் மற்றும் ஆங்கிலத்தில் கல்வி கற்பித்தல் பற்றி உங்களது கருத்தை தெரிந்துகொள்ளலாமா?

தமிழ் மொழியின் சிறப்பு

சத்குரு: நம் நாட்டில் உள்ள இருபத்தைந்து அல்லது முப்பது விதமான மொழிகளுடன், அனைத்து பேச்சுவழக்கு மொழிகளையும் சேர்த்தால் 1300 பிராந்திய பேச்சு மொழிகள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் குறைந்தபட்சம் இருபத்தைந்து முதல் முப்பது முழுமையான மொழிகள் அவற்றிற்கான தனிப்பட்ட எழுத்து வடிவங்களைப் பெற்றிருப்பதுடன், பெரியளவில் இலக்கியங்களையும் கொண்டுள்ளன. ஒரு முழுமையான மொழி என்பது ஒரே இரவில் தோன்றியது அல்ல. இந்த கிரகத்தின் பழமையான மொழி தமிழ் மொழி; நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். மொழி என்பது மனித அறிவின் மிக முக்கியமான பகுதியாகும்.

வேலைவாய்ப்பு சார்ந்த கல்விக்கான நமது அதீத ஆர்வத்தில், பல பள்ளிகள் உள்ளூர் மொழிகளை முற்றிலுமாக அழித்து வருவதை நான் அறிவேன். இப்படி நிகழக்கூடாது.

உலகெங்கிலும் உள்ள பல மொழியியலாளர்கள் மொழியின் ஆற்றலை தெளிவாக அங்கீகரித்துள்ளனர். மனிதன் மொழியைப் பயன்படுத்தும் திறன் இந்தியாவில் வேரூன்றியுள்ளது. இங்கிருந்து தான் மொழியைப் பயன்படுத்தும் திறன் உலகின் மற்ற பகுதிகளுக்கு வந்தது. ஐரோப்பா மற்றும் அரேபியாவில் அதிகம் உள்ள அனைத்து மொழிகளும் சமஸ்கிருத தாக்கத்தைக் கொண்டுள்ளன. எனவே, ஒரு வேலையைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த மொழிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டியதில்லை. நாம் மிகப் பெரிய ஒன்றை இழந்துவிடுவோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆங்கிலத்தின் எளிமை

ஆங்கிலம் அதன் எளிமையின் அடிப்படையில் ஒரு அற்புதமான விஷயம். இன்டர்நெட் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆங்கிலத்தை அடிப்படையாக்கிக் கொண்டதால், அது அவசியம். இனி யாரும் ஆங்கிலத்திற்கு எதிராக இருக்க முடியாது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். உங்களுக்கு ஆங்கிலேயர்களைப் பிடிக்காவிட்டாலும், நீங்கள் ஆங்கில மொழியை விரும்பத்தான் வேண்டும். அது இப்போது நம் மொழியின் ஒரு பகுதியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் பல மோசமான விஷயங்கள் நடந்தாலும், நாம் செய்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், நாம் மொழியை உள்வாங்கிக் கொண்டோம்.

இன்று பல படித்த இந்தியர்களால் பெரும்பாலான ஆங்கிலேயர்கள் பேசுவதை விட சிறந்த ஆங்கிலம் பேச முடிகிறது. இது ஒரு நல்ல விஷயம், ஆனால் அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நம் மொழிகளை நாம் ஒருபோதும் கொல்லக்கூடாது. ஏனென்றால் இந்திய மொழிகளில் இருக்கும் ஒலியின் வரம்பு அத்தகையது. அது நீங்கள் யார் என்பதற்கான ஒவ்வொரு அம்சத்தையும் தூண்டும் விதத்தில் உள்ளது. ஆனால் ஆங்கில மொழி மிகவும் குறுகிய ஒலி வரம்பைக் கொண்டுள்ளது.

தாய்மொழிக்காக பள்ளிகள் செய்ய வேண்டியது

தாய்மொழி, Thai Mozhi, Language Class

அறிவியல் வகுப்பு, Science Class

எனவே, ஒலிகளின் மூலம் ஒருவரின் புத்திசாலித்தனத்தையும் ஆற்றலையும் நமக்குள்ளேயே தூண்டி, ஊக்குவிக்கும் இந்த திறனை நாம் விட்டுவிடக் கூடாது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி தெரிந்திருக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும், நமது மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் வாழும் மாநிலத்தின் எந்த மொழியாக இருந்தாலும், அதனை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு சார்ந்த கல்விக்கான நமது அதீத ஆர்வத்தில், பல பள்ளிகள் உள்ளூர் மொழிகளை முற்றிலுமாக அழித்து வருவதை நான் அறிவேன்.

இப்படி நிகழக்கூடாது. உள்ளூர் மொழியையும் கற்க வேண்டும். அது உங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மக்கள் அதை பேசவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், உங்களுக்கு சிறந்த இலக்கியம் தெரியாவிட்டாலும், குறைந்தபட்சம் நீங்கள் ஆங்கில மொழியைத் தவிர வேறு ஒரு மொழியைப் படிக்கவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். நமது கல்விக் கொள்கை இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவ்விதமாக நடப்பதை உறுதிப்படுத்துவது ஒவ்வொரு பள்ளியின் பொறுப்பு.

அதைச் செய்வதற்கான எளிதான வழி இதுவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மாணவர்கள் ஆங்கில வழியில் அறிவியலை கற்கலாம். அவர்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியைப் படிக்கலாம், ஆனால் நாடகங்கள், கலைகள் சார்ந்த விஷயங்களை உள்ளூர் மொழிகளில் நிகழ்த்தலாம். அதனால் மக்கள் அதை ஒரு சமூக விஷயமாக, பொழுதுபோக்கு அம்சமாக பயன்படுத்துவதன் மூலம், அந்த மொழியில் தங்களை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் இயற்கையான ஆர்வம் உருவாகும். இது அவசியம். இந்த மொழிகளை நாம் கொல்லக்கூடாது, ஏனென்றால் அதை உருவாக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. அதிகபட்ச மொழிகள் நம்மிடம் இருப்பது, நமது தேசத்தின் பெருமை.

இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இப்படி பல மொழிகளை உருவாக்க வேண்டும் என்றால், உதாரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளா என்று வைத்துக்கொள்வோம். தெளிவான புவியியல் பிரிப்பு இல்லை. இந்த மாநிலங்களுக்கு இடையே கடல்கள் இல்லை. நீண்ட காலமாக மக்கள்தொகையை தெளிவாக வரையறுக்கும் மற்றும் பிரிக்கும் மலைத்தொடர்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் மொழியை பேணிக்காத்து வந்தார்கள். இது மிகவும் அழகாக இருக்கிறது. அவர்கள் வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைக்கு செல்லும்போது மற்ற மொழியைக் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் எப்போதும் தங்கள் மொழியை விட்டுவிடாமல் வைத்துக்கொண்டனர்.

இன்றைய தலைமுறையினர் கவனிக்க வேண்டியது

Online class

ஆனால் இன்று புதிய தலைமுறையினர் தங்கள் மொழியை மிக வேகமாக இழந்து வருகின்றனர். நீங்கள் அனைவரும் குறைந்தபட்சம் உங்கள் வீடுகளில் உங்கள் குழந்தைகளுடனும் மேலும் முடிந்தவரை உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதை இப்போது நாம் கவனிக்கவில்லை என்றால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு நாம் மிகவும் வருந்துவோம். ஏனென்றால் ஒரு மொழியை மீண்டும் கொண்டுவர முடியாது. நீங்கள் அதைக் கொல்லமுடியும், ஆனால் அதை உயிர்ப்பிக்க முடியாது, அது மிகவும் கடினம்.