சத்குரு:

வாக்குசுத்தி அல்லது நீங்கள் உச்சரிக்கும் ஒலிகளைச் சுத்திகரிப்பது அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.
இந்த மனித உடலமைப்பை ஒரு உயர்ந்த சாத்தியமாக உபயோகிப்பதற்கு நீங்கள் விரும்பினால், மிகத் துல்லியமான அதிர்வுடைய ஒரு அடித்தளம் அவசியமாகிறது. இல்லையென்றால் உடலானது உங்களுக்குப் பின்னால் தடை ஏற்படுத்தும் சுமையாகவே எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஒரு பெரும் சாத்தியமாக இருப்பதற்கு நீங்கள் விரும்பினால், சரியான விதமான அதிர்வினால் உருவாக்கப்பட்ட அடித்தளம் அதற்கு இருக்கவேண்டும். வாக்குசுத்தி அல்லது நீங்கள் உச்சரிக்கும் ஒலிகளைச் சுத்திகரிப்பது அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்குள் நீங்கள் மௌனமாகிவிட்டால், அதைவிட மேலானது வேறில்லை. அதுவே உச்சபட்ச வழியாக இருக்கிறது. ஆனால் அது நிகழவில்லையென்றால், அதற்கடுத்த சிறந்த வழி, நீங்கள் ஷிவா என்று கூறுவது. அது நிச்சலனத்திற்கு மிகவும் நெருக்கமான விஷயம். அல்லது ஒரு வார்த்தை மட்டுமே உங்களுக்குச் செயல்படாது என்றால், சிறிது விரிவான அளவில் நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம் – ப்ரஹ்மானந்த ஸ்வரூபா அல்லது இதனை ஒத்த உட்சாடணைகளில் ஒன்றை உச்சரிக்கலாம். எந்த ஒலி உங்களுடன் முழுமையாக எதிரொலிக்கிறதோ, அதை மட்டும் உச்சரியுங்கள்.

சரியான நோக்கம்

சமஸ்கிருத மொழியானது விழிப்புடன் உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்த மொழியை உச்சரிப்பதனாலேயே மனித உடலமைப்பு  சுத்திகரிக்கப்படும்.
ஒலி ஒரு காரணியாக இருந்தாலும், ஒலியின் நோக்கம் மற்றொரு காரணியாக இருக்கிறது. மனிதருக்கு இந்த பேசும்திறன் என்பதே ஒரு விசேஷமான பரிசாக இருக்கிறது. நுட்பங்கள் நிறைந்த பல ஒலிகளை உச்சரிக்கக்கூடிய மனிதரின் திறனுக்கு வேறு எந்தப் படைப்பும் இணையாகாது. ஆனால் ஒரு மனிதர் உச்சரிக்கும் ஒலியின் பரப்பு குறையக்குறைய வாக்குசுத்தி குறையும். இந்திய மொழிகளை ஒப்பிடும்போது, ஆங்கில மொழி குறைவான ஒலிகளின் பரப்பை உடையது. இதனால்தான் பிறந்ததிலிருந்து ஒருவர் ஆங்கில மொழி மட்டுமே பேசியிருந்தால், ஒரு மந்திரத்தை உச்சரிப்பதற்கோ அல்லது வேறொரு மொழி பேசுவதற்கோ அவ்வளவு கடினமாக உள்ளது.

மந்திரங்களிலும், சம்ஸ்கிருதத்திலும் இருப்பதைப்போல், ஒலிகள் அறிவியல்பூர்வமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தால், அப்போது நீங்கள் அதிகளவு விழிப்புணர்வில்லாமல் ஒலியை உச்சரித்தாலும், ஒலிகள் உருவாக்கப்பட்டிருக்கும் இயல்பின் காரணமாகவே நீங்கள் பலன் பெறுவீர்கள். சமஸ்கிருத மொழியானது விழிப்புடன் உருவாக்கப்பட்டு இருப்பதால், அந்த மொழியை உச்சரிப்பதனாலேயே மனித உடலமைப்பு சுத்திகரிக்கப்படும். ஆனால் இப்போது, அந்த விதமாக உருவாக்கப்படாத மொழிகளையே நாம் பெரும்பாலான தருணங்களில் பேசுகிறோம், ஆகவே அதனை சரியான நோக்கத்துடன் கையாள்வதே சிறந்தது. ஏனென்றால் கர்மாவின் வழிமுறையில் விருப்பம்தான் பெரும்பங்கு வகிக்கிறதே தவிர, செயலில் அல்ல. நீங்கள் ஏதோ ஒன்றை பேரன்புடன் கூறமுடியும் அல்லது வேறோரு நோக்கத்துடன் கூறமுடியும். இரண்டும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது.

யாரிடமாவது பேசினால், அதுதான் நீங்கள் பேசக்கூடிய கடைசி வார்த்தைகள் என்பது போல் அந்த நபரிடம் நீங்கள் அதை உச்சரித்தால், நீங்கள் பேசுவது யாரிடமென்றாலும் அதைச் செயல்படுத்தினால், அது உங்களது வாக்குசுத்தியை நிர்ணயிக்கும் அற்புதமான ஒரு வழியாக இருக்கிறது.
நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு ஒலியிலும் மிகச் சரியான நோக்கத்தைக் கொண்டுவந்தால், இத்தகைய ஒலிகள் உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விதமாக எதிரொலிக்கும். ஆகவே நீங்கள் யாரிடமாவது பேசினால், அதுதான் நீங்கள் பேசக்கூடிய கடைசி வார்த்தைகள் என்பது போல் அந்த நபரிடம் நீங்கள் அதை உச்சரித்தால், நீங்கள் பேசுவது யாரிடமென்றாலும் அதைச் செயல்படுத்தினால், அது உங்களது வாக்குசுத்தியை நிர்ணயிக்கும் அற்புதமான ஒரு வழியாக இருக்கிறது.