பொங்கல் திருவிழா குறித்த சத்குருவின் வாசகங்கள் (Pongal Quotes in Tamil)

கடந்த வருடத்தின் சுமைகளை கீழே இறக்கி வைத்துவிட்டு, புதிதாகவும் உயிரோட்டமாகவும் ஆகும் நேரம் இது.

Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

சுத்தம் செய்யும் நேரம் இது. உங்கள் வீட்டில் மட்டுமின்றி, உங்கள் மனதிலும், உணர்விலும், உடலிலும், விழிப்புணர்விலும் உள்ள தேவையற்ற விஷயங்களைக் களையும் நேரமிது.

Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இன்றைய நாள் உங்கள் வீடு, உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகளிலிருந்து உபயோகம் இல்லாத விஷயங்களை, வாழ்க்கை அனுபவத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்களை எல்லாம் நீக்கிவிட்டு, புதியதாக தொடங்கும் நாள்.
Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

பொங்கல் பண்டிகை - நம் வாழ்க்கை வளமாக இருக்க அடிப்படையான மண், விலங்குகள், காற்று, நீர், மக்கள் என அனைத்தையும் கொண்டாடும் ஒரு விழா. கொண்டாடி மகிழ்வோம்!
Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது, பூமித்தாய் வசந்த காலத்திற்குள் வைக்கும் முதல் படி. நீங்களும் ஒரு புதிய வசந்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்திடுங்கள்! மரங்கள் பழைய இலைகளை உதிர்ப்பது போல, உங்களுக்குள் பழைய சுமைகளை உதிர்த்துவிட்டு, புதிய உயிராக ஆகிடுங்கள்!
Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

சங்கராந்தி என்பது உயிருக்கு ஊட்டமளிக்கும் அம்சங்களுக்கு நன்றி வெளிப்படுத்துவது ஆகும். வெளியே அடியெடுத்து வையுங்கள், மண்ணையும் காற்றையும், நீரையும், உணவையும் உணர்ந்து பார்த்துக் கொண்டாடுங்கள்! நன்றியை வெளிப்படுத்த கொண்டாட்டத்தை விட சிறந்த வழி எதுவுமில்லை.
Pongal Quotes in Tamil, பொங்கல் திருவிழா பற்றிய சத்குருவின் வாசகங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பொங்கல் கொண்டாட்டம்... நன்றியுணர்வின் திருவிழா!

பொங்கல் திருவிழா தமிழ் மக்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மார்கழியின் நிறைவைக் குறிக்கும் போகிப் பண்டிகையின் நோக்கம், பொங்கல் விழா விவசாயிகளுக்கும் ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் என அனைவருக்குமே முக்கியத்துவம் பெறுவதன் காரணம் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது இக்கட்டுரை!

மாட்டுப் பொங்கல் விழா எதற்காக?

இது வரை நம் சிந்தனைக்கு எட்டாத, புதிய பார்வையில் சத்குரு எடுத்துக்கூறும் கருத்துக்கள் மாட்டுப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணரவைப்பதுடன், நம் வாழ்வில் எல்லா உயிர்களையும் நம்முடன் அரவணைத்துச் செல்லும், மறந்துபோன நம் பண்பாட்டை மீட்டெடுப்பதாகவும் உள்ளது.

காணும் பொங்கல் சொல்லும் செய்தி

பொங்கல் கொண்டாட்டங்களின், முக்கியமான அம்சமாக காணும்பொங்கல் முத்தாய்ப்பாக விளங்குகிறது. அது குறித்த சத்குருவின் தனித்துவமான விளக்கம் நம் வாழ்க்கை முறையை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, ஆனந்தத்தை நம் வசமாக்கிக்கொள்வதற்கான ஒரு திறவுகோலாக இருக்கிறது.