கேள்வி: சத்குரு, மாணவர்களின் வாழ்க்கையில் ஆன்மீகத்திற்கான இடம் என்ன?

சத்குரு: ஆன்மீக செயல்முறைகள் என்றாலே நீங்கள் தேடுதல் உள்ளவர்கள் என்று பொருள். அதுவே நீங்கள் ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை உள்ளவர் என்றால் நீங்கள் எல்லாவற்றையும் நம்புபவர்கள் என்று பொருள். ஒரு மாணவனும் ஒரு ஆன்மீகத் தேடல் உள்ளவரும் மிகப் பொருத்தமானவர்கள். ஏனென்றால், ஒரு சில வழிகளில் பார்த்தால் எந்த சுறுசுறுப்பான வாழ்க்கையும் இயற்கையாகவே ஆன்மீக தேடல் உள்ளதுதான். அவர்கள் தங்களை இப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர்கள் அனைத்தைப் பற்றியும் உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி இருந்தால் இயற்கையாகவே நீங்களும் ஒரு ஆன்மீகத் தேடுதல் உள்ளவர் என்று பொருள்.

 

நீங்கள் உங்கள் தேடுதலை ஒழுங்கமைத்துள்ளீர்கள் என்றால் மட்டுமே, அதன் விளைவாக அது வெளிப்படும், அல்லது உங்கள் இளம் வயதின் காரணத்தால் உந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும். இப்படி இருந்தால் நீங்கள் முப்பது வயதை அடையும்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, உங்கள் வாழ்க்கை பணம் மற்றும் உணவை தேடி மட்டுமே அலைந்து கொண்டு இருக்கும். பலரும் இப்படித்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கேள்வியை எப்படி உயிர்ப்புடன் வைத்திருப்பது?

உங்கள் கேள்விகளை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் பட்சத்தில் இயற்கையாகவே நீங்கள் ஆன்மீக தேடுதல் உள்ளவர்களாக இருப்பீர்கள். ஏனென்றால், விடை கிடைக்காத கேள்விகளுடன் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? உங்கள் மனமும், அறிவும் உங்கள் கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவாது. சிறிது காலம் கழித்து, மனம் துயரமாகிவிடும். பத்து வயதில் நீங்கள் இருந்ததைவிட இப்போது கொஞ்சம் கூடுதல் துயரங்களுடன் தானே இருக்கிறீர்கள். முப்பது வயதை எட்டும்பொழுது முழு துயரம் நிறைந்தவராக மாறியிருப்பீர்கள். அவர்களுக்கே தெரியாவிட்டாலும் சிலர் "பிரபஞ்சம் கடவுள் படைத்தது" என்று கூறுவார்கள்.

இளமைக்காலம் என்பது உங்கள் நிலைத்தன்மையை பரிசோதித்து பார்க்கும் வயது அல்ல, இந்த பருவத்தில் நிலையற்ற தன்மையைக்கூட எப்படி சமாளிப்பது என்று உங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு ஆன்மீக வழிமுறைகள் தேவைப்படும்.

இந்த உலகில் இளைஞர்கள் என்றாலே "தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைபவர்கள்" என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. ஆனால் நீங்கள் உங்களுக்கு "எது எனக்கு தெரியுமோ அது தெரியும், எது எனக்கு தெரியாதோ அது எனக்கு தெரியாது" என்று இருங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் உங்கள் மரணப்படுகையில் இருக்கும்போது கூட உங்களுக்கு பல விஷயங்களை பற்றி தெரியாமலே இருக்கலாம், அது பரவாயில்லை என்று நினைப்பீர்களா? ஏனெனில், பலரும் தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாத்தீகர் கூட தன் வாழ்நாள் முழுவதும் கடவுளே இல்லை என்று கூறிவிட்டு, மரணம் அவர்களை நெருங்கும் தருவாயில், அதற்கான விடையை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், ஆன்மீக பாதை என்பது கேள்விகளை கொண்டாடுவது, வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது என்று நமக்கு தெரியும். எப்படி நம்மை உயர்த்திக்கொண்டு அந்த சந்தேகங்களுக்கு விடை காணுவது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அதன் மீது ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கக்கூடாது.

 

பலரும் நம்பிக்கையை தவறாக புரிந்துகொள்கின்றனர். "கடவுள் அங்கே இருக்கிறார், எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்" என்று நம்புகின்றனர். ஆனால் அப்படி ஒன்று இதுவரையில் நடக்கவேயில்லை. நீங்கள் எதையும் நன்றாக கையாண்டால், அது உங்களுக்கு நன்றாக வேலை செய்யும், இல்லையென்றால் இல்லை, அவ்வளவுதான். ஒரு நிலையற்ற தன்மை நிலவும் இந்த வாழ்க்கையில், நீங்கள் எல்லாவற்றையும் மிகச்சரியாக செய்தாலும் கூட நாளை காலை இறக்கக் கூடும், அதற்கு வாய்ப்பு உள்ளது.

நிலையற்ற தன்மையுடன் ஒரு நடனம்

ஒரு உண்மையான உணர்வது உங்களுக்குள் உருவாக்க முயற்சிக்கையில், நீங்கள் உங்கள் எல்லைகளை குறைக்க ஆரம்பிப்பீர்கள்.

நிலையற்ற தன்மையை நிலையற்றதாகவே கையாளுவதற்கு உங்களைச் தயார் செய்துகொள்ள வேண்டும். நிலையற்ற தன்மையை தவறாக உணர்ந்து அதில் நம்பிக்கை வைத்து ஒரு கருத்தியலை உருவாக்கக்கூடாது. ஒரு உண்மையான உணர்வது உங்களுக்குள் உருவாக்க முயற்சிக்கையில், நீங்கள் உங்கள் எல்லைகளை குறைக்க ஆரம்பிப்பீர்கள்.

மக்கள் தங்களையும், தங்கள் பகுதியையும் சுருக்கிக்கொள்ளும்போது இந்த நிலையற்ற தன்மை மேல் ஒரு உறுதி உண்டாகும். இப்போது நீங்கள் ஒரு அறைக்குள்ளே வசிக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம், அங்கு நடப்பதில் 90 சதவிகிதம் நீங்கள் நினைப்பது போல நடக்கும், ஒரு பத்து சதவீதம் வேறு விதமாக இருக்கும். கரப்பான்பூச்சிக்கூட அதன் விருப்பப்படி தான் செயல்படுகின்றன. நீங்கள் உங்கள் அறையை தாண்டி உங்கள் நகரம் வரை விரிவடையும்போது, நீங்கள் நினைப்பது 50 சதவிகிதம்தான் நிறைவேறும். எப்போது அது இந்த உலகம் அளவிற்கு விரிவடைகிறதோ அப்போது நீங்கள் நினைப்பதில் ஒரு பத்து சதவீதம்தான் நிறைவேறும், பாக்கி 90 சதவீதம் உங்கள் விருப்பப்படி இருக்காது.

இந்த இளம் வயதில்தான் உங்கள் உடலை ஆன்மீக பயிற்சிகள் மற்றும் ஆத்ம சாதனைகள் மூலம் தயார் செய்துகொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உங்கள் வாழ்க்கை கொடுக்கும் அறிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முற்படும்போது, உங்கள் உடலும் மனமும் தடையாக அதற்கு இருக்கக்கூடாது.

நீங்கள், இது நிரந்தரமற்ற நிலைதான் என்ற மனநிலையோடு அதனோடு நடனமாட கற்றுக்கொண்டால் மட்டுமே, நீங்கள் ஒரு பெரிய வாழ்வை வாழ்வீர்கள். இல்லையென்றால், எல்லாவற்றிலும் இது நிலையானதா, இது நிலையானதா என்று தேடியே ஒரு சிறிய வாழ்க்கையைதான் வாழ்வீர்கள். இதனால் அனைத்து வாய்ப்பையும் இழப்பீர்கள். இளமைக்காலம் என்பது உங்கள் நிலைத்தன்மையை பரிசோதித்து பார்க்கும் வயது அல்ல, இந்த பருவத்தில் நிலையற்ற தன்மையைக்கூட எப்படி சமாளிப்பது என்று உங்களை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு உங்களுக்கு ஆன்மீக வழிமுறைகள் தேவைப்படும்.

வாழ்க்கை தரும் வாய்ப்புகளுக்கு தயாராவது

நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறேன். ஒரே இடத்தில் இரண்டு இரவுகள் தங்கினால் அது பெரிய விஷயம். என் உடல் நெடுந்தூர பயணம், தூக்கமின்மை என அனைத்தையும் சமாளித்துகொள்ளும். என்னுடைய பயண அட்டவணையை இளைஞர்கள் கூட சமாளிப்பது கடினம். அப்படி இருந்தும் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடிகிறது என்றால், அதற்கு என் 25 வருட சாதனாக்கள்தான் காரணம். அதுதான் இன்னும் என்னை பிடித்து வைத்து மற்றவர்களை விட நன்றாக செயல்பட வைக்கிறது.

உங்கள் உடலும் மனமும் உங்கள் அனைத்து விருப்பங்களையும் எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்க வேண்டும். உங்கள் மனநிலை, நீங்கள் விரும்பியது விரும்பாதது, உங்கள் உடல் பிரச்சினைகள், உங்கள் முதுகுவலி, தலைவலி இவை அனைத்தும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைவேற்ற நினைக்கும் செயல்களை நிறைவேற்ற விடாமல் தடுக்கும். அது நல்லதல்ல.

பெரும்பாலான மக்களுக்கு, அவர்களின் உடலும் மனதுமே அவர்களின் வாழ்க்கையில் கிடைக்கும் அறிய வாய்ப்புகளை இழக்க செய்கிறது. அதுவே அவர்களின் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு திறக்கும்போது அவர்களை கீழே பிடித்து இழுக்கிறது. அறிய வாய்ப்புகள் நமக்கு தினமும் கிடைக்காது. உங்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க விஷயங்களை நிறைவேற்ற சில காலம் எடுக்கும், அப்படி நிறைவேற்ற போகும் சமயத்தில், ஒரு உதாரணத்திற்கு உங்களுக்கு நாற்பது வயது நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் உடலும், மனமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பின் அதனால் என்ன பயன் இருக்கப்போகிறது?

அநேகமாக அறுபது முதல் எழுபது சதவிகிதம் மக்கள் இதன் கீழ்தான் அடங்குவார்கள். ஒரு நல்ல வாய்ப்பு வரும்போது, அதை கைப்பற்ற அவர்களின் உடலும், மனமும் ஒத்துழைக்காது. நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடனும், தீவிரத்துடனும் இருக்கும் பட்சத்தில், ஒரு அருமையான வாய்ப்பு உங்களை நோக்கி வரும்போது, அதை பயன்படுத்திக்கொள்ள உங்களுக்கு போதிய வலிமை இருக்க வேண்டும். அந்த தருணத்தில் நீங்கள் விழிப்புடன் இல்லாவிடில் கிடைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும். வெற்றி தோல்விக்கு உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்த இளம் வயதில்தான் உங்கள் உடலை ஆன்மீக பயிற்சிகள் மற்றும் ஆத்ம சாதனைகள் மூலம் தயார் செய்துகொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உங்கள் வாழ்க்கை கொடுக்கும் அறிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முற்படும்போது, உங்கள் உடலும் மனமும் தடையாக அதற்கு இருக்கக்கூடாது. இவை இரண்டும் உங்கள் வாழ்க்கை படகின் துடுப்பாக இருக்க வேண்டுமே தவிர, நங்கூரமாக மாறி உங்களை நிறுத்தி வைக்கக்கூடாது.

sgtamapp