குழந்தைகள் யோகா கற்கவேண்டுமா? கற்கவேண்டும் என்றால் என்ன பயிற்சிகள் கற்கவேண்டும், எந்த வயதில் கற்கத் துவங்கவேண்டும்? குழைந்தகளுக்கான யோகா குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.

குழந்தைகள் எந்த வயதில் யோகா கற்கவேண்டும்?

Question: இதை நான் என் ஒன்பது வயது மகளுக்காக கேட்கிறேன். இந்த வயதில் அவளை நான் யோகாவிற்கு அறிமுகப்படுத்தலாமா? அதன்மூலம் அவள் வெகுசீக்கிரத்தில் இந்தப் பாதையில் செல்லத் தயாராக முடியுமா?

சத்குரு:

யோகா என்பது உங்களை வாழ்க்கையிலிருந்து தூரமாக எடுத்துச்செல்வது கிடையாது. இது வாழ்க்கையுடன் உங்களுக்கு ஆழமான ஈடுபாடு கொண்டுவருவது. அப்படியானால் எப்போது துவங்கவேண்டும்? அறுபது வயதிலா? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக துவங்கவேண்டுமல்லவா?

சாதாரணமாக ஏழு வயது சரியான வயதாகக் கருதப்படுகிறது, ஆனால் நீங்கள் ஒன்பது வயதுவரை காத்திருந்துள்ளீர்கள். அதனால் இப்போதே துவங்கிவிடலாம். ஒரு குழந்தைக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், அதிலிருந்து புத்திசாலித்தனமாக தேர்வு செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவேண்டும். இந்த வாய்ப்பை அவர்களுக்கு நீங்கள் வழங்காவிட்டால், அவர்கள் உலகில் என்னென்ன விஷயங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறார்களோ அவை மட்டுமே உலகில் உள்ளன என நம்பும் விதமாக மூளைச்சலவை செய்யப்படுவார்கள். குளிர்பானமா அல்லது பீட்சாவா என்றுதான் அவர்களால் தேர்வு செய்யமுடியும், அவர்கள் தேர்ந்தெடுக்க வேறெதுவும் இருக்காது!

சிறுவயதிலேயே சரியான விஷயங்களுக்கு குழந்தைகள் வெளிப்படுத்தப்படுவது மிகவும் முக்கியம். உள்ளிருந்து வேலைசெய்யும் விஷயங்களுக்கு அவர்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும், ஏனென்றால் உலகில் நம்மைச் சுற்றிலும் நாம் செய்யும் ஏற்பாடுகளை ஓரளவிற்குத்தான் விரும்பியபடி நம்மால் அமைத்துக்கொள்ள முடியும். உங்கள் நல்வாழ்வு வெளிசூழ்நிலையை சார்ந்ததாக, அதற்கு அடிமைப்பட்டதாக இருக்கும் வரையில், நல்வாழ்வு தற்செயலாகவே அமையும். ஏனென்றால் எவருக்கும் வெளி சூழ்நிலைகள் மீது 100% ஆளுமை கிடையாது. அதோடு மக்கள்தொகை அதிகரிக்கும் விதத்தைப் பார்த்தால், அடுத்த தலைமுறையினரால் எவ்விதமான ஏற்பாடுகளை வெளிசூழ்நிலையில் செய்துகொள்ள முடியுமென்பது கேள்விக்குறியாக மாறுகிறது. 2050ம் வருடத்திற்குள் நாம் 960 கோடி மக்களாகிவிடுவோம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ நான் விரும்பமாட்டேன். ஆனால் உங்கள் மகள் இங்கு இருக்கப்போகிறாள், அதனால் பிழைப்பிற்கு அவளுக்கு சில விசேஷமான திறமைகள் தேவைப்படும். அப்போது வாழ்க்கை சுலபமானதாக இருக்காது.

இதை கற்பனை செய்து பாருங்கள், இப்போது இருக்கும் அதே இடத்தில் 35% அதிகமாக மக்கள் வசித்தால் உங்கள் அனுபவத்தில் எப்படி இருக்கும்? மிகவும் நெருக்கமாக நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு யோகா தெரிந்திருக்க வேண்டும். அப்போது நீங்கள் விரும்பிய விதத்திலெல்லாம் உடலை வளைத்து உட்கார்ந்துகொள்ளலாம், அப்படி எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் சௌகரியமாகவே உணர்வீர்கள்! எந்த நிலையில் உடலை வைத்திருக்கலாம் என்பதை முடிவுசெய்ய உங்களுக்கு வாய்ப்பிருக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கல்விமுறையின் அங்கமாக யோகா மாறும் என்று நம்புகிறேன். இவ்வருடம், சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷாவின் செயல்பாடுகளின் ஒரு அங்கமாக, 25,000 பள்ளிகளிலுள்ள 3 கோடி குழந்தைகளுக்கு சக்திவாய்ந்த எளிய யோகப்பயிற்சிகளை வழங்கிடும் முயற்சியில் இறங்கினோம்.

குழந்தைகள் எப்படிப்பட்ட யோகப் பயிற்சிகளைக் கற்கலாம்?

Question: குழந்தைகளுக்கென குறிப்பிட்ட யோகப்பயிற்சிகள் உள்ளதா?

சத்குரு:

ஆறு ஏழு வயதான பிறகு குழந்தைகள் செய்யக்கூடிய எளிய யோகப்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவர்களுக்கு சில யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்படக் கூடாது, இது மிகவும் முக்கியம். சில இடங்களில் குழந்தைகளுக்கு பத்மாசனா கற்றுத்தரப்படுவதை நான் கவனிக்கிறேன். அது அவர்களுக்கு கற்றுத்தரப்படக் கூடாது. எலும்புகள் வளர்ந்துகொண்டு இருக்கும் சமயத்தில், அது மென்மையாக இருக்கும்போது, எலும்பமைப்பின் மீது அழுத்தம் ஏற்படுத்தும் உடல்நிலைகளில் அமர்வது எலும்புகளை வளையச்செய்யும்.

யோகா கற்றுத்தருபவர்கள், குழந்தைக்குப் பொருந்தும் யோகாவைத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரின் தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப யோகா கற்றுத்தரப்பட வேண்டும். வயதில் பெரியவர்களுக்கு கற்றுத்தரப்படும் அனைத்தும் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படக் கூடாது. வயதில் பெரியவர்களுக்கும் கூட, குடும்ப சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான யோகா கற்றுத்தருகிறோம். துறவிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் யோகா கற்பிக்கப்படுகிறது. அனைவருக்கும் ஒரேவிதமாக கற்றுக்கொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.

குழந்தைகளுக்கு என்ன யோகா கற்றுத்தருவது?

Question: குழந்தைகளுக்கு யோகாவை எப்படி அறிமுகப்படுத்துவது? இளம் வயதிலிருந்தே யோகாவிற்கான தாகத்தை குழந்தைகளுக்குள் எப்படி விதைப்பது?

சத்குரு:

சப்தங்கள் மீது ஆளுமை கொண்டுவரும் நாதயோகா உள்ளது. ஒரு குழந்தை யோகா கற்கத் துவங்குவதற்கு இது மிகவும் எளிமையான மென்மையான வழி. உடல் மற்றும் மனதின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் இது வழிவகுக்கிறது. ஆறு அல்லது ஏழு வயதில் கற்கக்கூடிய யோக நமஸ்காரம் போன்ற பயிற்சிகளும் உள்ளன. குழந்தைகளுக்கும் எல்லா வயதினருக்கும் உபயோகமான உப-யோகா பயிற்சிகளும் உள்ளன.

குழந்தைகள் இது வழங்கும் பலன்களை கண்கூடாகக் காணும்போது, பலபேர் மத்தியில் திறமையளவில் அவர்களை இது ஒருபடி மேலே வைப்பதை அவர்கள் கவனிக்கும்போது, இயல்பாகவே யோகாவின் அடுத்தடுத்த நிலைகளை நாடுவார்கள். அவர்கள் வளரவளர, அவர்களுடைய யோகாவும் வளரவேண்டும்.

ஆசிரியர் குறிப்பு:

இலவச உப-யோகா பயிற்சிகளை இணையம் மூலமாக இங்கே கற்றுக்கொள்ளலாம். இந்த எளிய 5-நிமிடப் பயிற்சிகள், ஆரோக்கியம், ஆனந்தம், அமைதி, அன்பு, வெற்றி மற்றும் உள்நிலை நலனுக்கான ஆற்றல்மிக்க கருவிகளாய் விளங்குகின்றன.

குழந்தைகளுக்கான ஈஷா யோகா நிகழ்ச்சி

குழந்தைகளுக்கான ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றிய விபரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இந்நிகழ்ச்சி பற்றிய ஒரு பதிவு இங்கே.

குழந்தைகளுக்கான ஈஷா யோகா கோடைக்கால வகுப்பு

கடந்த வருடத்தில் நடந்த குழந்தைகளுக்கான ஈஷா யோகா கோடைக்கால வகுப்பு பற்றிய ஒரு பதிவு இங்கே.

குறிப்பு: வயது வரம்பு 9-12

முதல் குழு: மே 9-13
இரண்டாம் குழு: மே 10-14
மூன்றாம் குழு : மே 12-16
நான்காம் குழு: மே 16-20
ஐந்தாம் குழு: மே 17-21
ஆறாம் குழு: மே 18-22

பதிவு செய்ய:
பெயர்: சதீஸ் பாண்டு
அலைபேசி:+919444310771