வாலு பசங்கள கூல் ஆக்கலாம்!
'லீவு விட்டாலும் விட்டாங்க இவங்க அட்டகாசம் தாங்கல... ஒரு மாசம் இந்த வாலுப் பசங்கள எப்படித்தான் சமாளிக்கறது..?' ஊரெங்கும் இதே புலம்பல்தான் கேட்கிறது. இந்த வாலுப் பசங்கள எப்படி கூல் ஆக்குறது? இங்கே ஒரு வழி இருக்கு...
'லீவு விட்டாலும் விட்டாங்க இவங்க அட்டகாசம் தாங்கல... ஒரு மாசம் இந்த வாலுப் பசங்கள எப்படித்தான் சமாளிக்கறது..?' ஊரெங்கும் இதே புலம்பல்தான் கேட்கிறது. இந்த வாலுப் பசங்கள எப்படி கூல் ஆக்குறது? இங்கே ஒரு வழி இருக்கு...
லீவு விட்டாச்சா இனி இவங்கள வச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியல! எனப் புலம்பிக்க் கொண்டிருந்த மல்லிகா,
"ஏன்... எதாவது சம்மர் க்ளாஸ்ல சேத்துவிட வேண்டியதுதான...?!" என ஆலோசனை வழங்கிய கனகாவிடம்
லீவுன்னா அவன பெட்லயிருந்து எழுப்புறதே பெரியபாடு, இதுல அது வேறயா...? என அலுத்துக் கொண்டாள்.
"ஏய்... இப்பதான் ஞாபகம் வருது ஈஷா யோகா பத்தி என்னோட ஃபரண்டு ஒருத்தி சொல்லிட்டிருந்தா..." என்று சொல்லிய கனகாவின் கண்களில் 100 வாட்ஸ் பிரகாசம்.
ஆமா இவங்கள வச்சுகிட்டு நாம எங்க யோகா கத்துக்கிறது...? என டல்லடித்தாள் மல்லிகா.
"அட பயப்படாத க்ளாஸ் நமக்கில்ல, பசங்களுக்கு..."
"நிஜமாவா சொல்ற"
"இது ஈஷா சில்ரன்ஸ் க்ளாஸ் (குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்பு)"
இப்போதுதான் மல்லிகாவுக்கு கொஞ்சம் சந்தோஷம் எட்டிப்பார்த்தது.
"எப்படியோ ஒரு மாசம் அவங்களோட இம்சையிலிருந்து தப்பிச்சா சரி"
"ஹலோ க்ளாஸ் எட்டு நாள்தாம்மா" என்று கனகா தகவலளிக்க, மீண்டும் டல் மல்லிகாவானாள்.
‘வெறும் எட்டு நாள் கிளாஸ்தானா? அதுல என்ன பெருசா கத்துக் குடுத்துடப் போறாங்க. எனக்கு ஒரு மாசம் இவங்கள பிழிஞ்சு எடுக்கற மாதிரி ஒரு கிளாஸ் வேணும். இல்லன்னா அடங்க மாட்டாங்க. சரி! இந்த எட்டு நாள் ஒரு தற்காலிகத் தீர்வா இருக்கட்டும்."
ஒருவழியாக மல்லிகாவும் கனகாவும் தங்கள் பிள்ளைகளை ஈஷா யோகா வகுப்பில் சேர்த்தனர்.
முதல்நாள் மாலை வாசலிலேயே காத்துக் கொண்டிருந்த மல்லிகா, மகள் பவானியை வழி மறித்தாள்.
Subscribe
“என்னம்மா அங்க என்ன கத்துக் கொடுத்தாங்க?“
பவானி எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள்.
அடுத்தநாள் காலை பவானி, மல்லிகா எழுப்பாமலே தானாகவே எழுந்து வகுப்பிற்கு கிளம்பினாள்.
"இந்தாம்மா காபி" என மல்லிகா ஆற்றிக்கொண்டிருக்க,
"காபி எனக்கு வேண்டாம். சீக்கிரம் கிளம்புமா க்ளாஸுக்கு டைம் ஆச்சு" என்ற பவானியைப் பார்த்து, "இது நம்ம பொண்ணுதானா" என ஒரு கணம் திகைத்துப் பார்த்தாள் மல்லிகா.
ஆர்வத்தினால் கனகாவுடன் மல்லிகாவும் 'அப்படி அங்க என்னதான் சொல்லித் தர்றாங்கனு பாப்போம் வா' என இருவரும் கிளம்பினர்.
'இப்படித்தான் உட்காரணும் இப்படித்தான் செய்யணும் அதையெல்லாம் செய்யக் கூடாது' என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை.
‘நீங்கள் நல்ல மனிதனாக வளர வேண்டும்' என்ற எந்த போதனையும் இல்லை.
அன்பு என்ற ஒரே கருவியைக் கொண்டு அங்கே உள்ளே என்ன மாயம் நடக்கிறது.
ஜன்னல் வழியாக மல்லிகாவும் கனகாவும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கே எல்லாம் குதூகலமான முகங்கள், ஆட்டமும் பாட்டமுமாய் துள்ளி குதித்துக் கொண்டிருந்த இவர்களைப் பார்த்த மல்லிகாவுக்கும் குதிக்க வேண்டும் என்று கால்கள் துடித்தன.
அன்றிலிருந்து மல்லிகாவும் கனகாவும் க்ளாஸை தினமும் வெளியிலிருந்து கேட்கத் துவங்கினர்.
8 நாட்கள் வகுப்பு முடிந்தவுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றவுடன் கிடுகிடுவென குட்டிகள் மேடையை நோக்கி வந்தனர்.
மைக் அளவு உயரம் கூட இல்லாத இந்த வாண்டுகள் எழுந்து நின்று, மைக் பிடித்து பேசும் அளவிற்கு தன்னம்பிக்கையும் தைரியமும் இந்த 8 நாள் வகுப்பு அவர்களுக்கு அளித்திருக்கிறது.
“நானு எங்கம்மாவுக்கு ஃபிரிட்ஜ் க்ளீன் பண்ணி கொடுத்தேன். “இதைக் கேட்டு எல்லாரும் சிரித்தனர். 'அட நீ ஃபிரிட்ஜ் சைஸ் கூட இல்லயே!'
உடனே இன்னொரு சிறுவன் ஓடி வந்து மழலை மாறாத குரலில், “எங்கம்மாவும் அப்பாவும் சண்டை போட்டாங்களா... நான் அவங்கள் சேத்து வைக்கப் போறேன்” என்றதும் அனைவரும் வியந்தே போனார்கள்.
இது கூட பரவாயில்லை. இன்னொரு குழந்தை எழுந்து “இந்த பூமியை காப்பாத்த நான் ஏதாவது செய்தே ஆகணும். நான் 1000 மரங்கள் நடப் போகிறேன்,” என்றதும் அங்கே பலத்த கரவொலி!
“நான் முன்னெல்லாம் என் தங்கச்சியை அடிப்பேன். இனிமே அடிக்கவே மாட்டேன்” என்றதும் அங்கிருந்தவர்கள் குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்ளவே ஆசைப்பட்டனர்.
8 நாட்களில் இவ்வளவு பெரிய மாற்றத்தை உங்களால் எப்படி கொண்டு வர முடிந்தது என்ற கேள்வியுடன் ஆசிரியரை அணுகினார் மல்லிகா.
ஆசிரியர் “கண்டிப்பா நான் ஒண்ணும் இங்க கத்துக் கொடுக்கல அவங்க கிட்ட இருந்து தான் நான் நிறைய கத்துக் கிட்டிருக்கேன்.
அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கம் இன்றி திறந்த மன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சக்தியும் வேகமும் பெரியவர்களிடம் கிடையாது. அவங்க எல்லாம் கலகலன்னு நல்லா இருக்காங்க. குழந்தைகளுக்கு எது தேவை என சரியான புரிதலுடன் சத்குரு இந்த கருவியை உருவாக்கியுள்ளார்.
அவர்களுக்குள்ளே ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து அவர்கள் கற்பனைத்திறனை வளர்க்கும் விதமாக சத்குரு இந்த வகுப்பு வடிவமைத்துள்ளார்.
இங்கே இவர்களுக்கு சில ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது இவர்களை நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஆற்றலோடும் செயல்பட உதவி புரிகிறது. உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்து செயல்படவும், மேம்படவும் இந்த பயிற்சி துணை புரிகிறது. மேலும் இவர்களது நினைவாற்றல், மனக்குவிப்புத்திறன் முடிவெடுக்கும் திறன் போன்றவை அதிகரிக்கிறது,” என்று சொல்லி முடித்தார்.
மல்லிகா மட்டுமல்ல தற்போது தமிழகத்தில் பல இடங்களிலும் நடந்து வரும் சிறுவர்களுக்கான ஈஷா யோகா பயிற்சியினால் அனைத்து பெற்றோர்களும் இவர்களது மாற்றத்தை கண்டு வியந்து போகிறார்கள்.
இந்த வகுப்பில் இந்த 8 நாட்களில் ஒரு நாள் கூட ஒரு குழந்தை கூட தாமதமாக வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்க வீட்டில வாலுப் பசங்க இருக்காங்களா..?!
குழந்தைகளுக்கான ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.