கேள்வி: நமஸ்காரம் சத்குரு. ஒரு க்ளோன் மனிதரால் ஆன்மீகத்தன்மை அடையமுடியுமா?

சத்குரு: அதற்கு நீங்கள் என்னவென்று பெயரிட்டாலும், உயிரோட்டத்துடன் இருக்கும் ஒரு மனித உடலைத்தானே உற்பத்தி செய்கிறீர்கள்? அதாவது, அது எல்லா மூலக்கூறுகளையும் கொண்ட ஒரு உயிர் செயல்முறையாக இருக்கிறது. இன்னமும் பெண்களால் குழந்தையைச் சுமக்க இயலும்போது, ஒரு பரிசோதனைக்கூடத்தில் நீங்கள் ஏன் இலட்சக்கணக்கான டாலர்களை வீணாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. இது எனக்கு நியாயமாகத் தோன்றவில்லை, அதைப் பற்றித்தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண் கருவுறுவதில் உள்ள அழகு!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தைகளை உருவாக்குவதற்கு ஒரு இனிமையான வழி இருக்கிறது. சோதனைக்குழாய்கள், குடுவைகளில் இருந்தெல்லாம் நீங்கள் வெளியில் வருமளவுக்கு அதனை ஆபாசமாகவும், அசிங்கமாகவும் நீங்கள் செய்யவேண்டியதில்லை – நிச்சயமாக இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், ஒரு பெண்ணானவள், குழந்தைக்கு உடலை மட்டும் தருவதில்லை, அவள் குழந்தையை உருவாக்குகிறாள், அவள் குழந்தையை எப்படி உருவாக்குகிறாள் என்பது முற்றிலும் அவள் எப்படி இருக்கிறாள் என்பதைச் சார்ந்திருக்கிறது. இந்த தேசத்தில், இதன்பொருட்டு அவர்கள் விரிவான கவனம் எடுத்துக்கொள்ளும் ஒரு வழக்கத்தை நீங்கள் பார்க்கவேண்டும். 

ஒரு சில கவர்ச்சிகரமான (ஈர்ப்பான) விஷயங்களை எப்படி செய்வது என்று நாம் அறிந்திருக்கும் காரணத்தால் நாம் செய்யக் கற்றுக்கொள்ளும் அனைத்தையும் நாம் செய்தாக வேண்டும் என்று இல்லை.

ஒரு பெண் கருவுற்றதும், அவள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், அவள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, அவள் யாருடைய முகத்தைப் பார்க்கவேண்டும், யாருடைய முகத்தைப் பார்க்கக்கூடாது என்று ஒவ்வொரு படியும் வரையறுக்கப்படுகிறது, ஏனென்றால் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தாக்கம் உண்டு. நீங்கள் அதற்கு ஒரு உடலை மட்டும் அளிக்கவில்லை. நீங்கள் ஈனும் அந்த மனிதரின் தன்னுணர்வையும் சேர்த்தே செதுக்குகிறீர்கள் (உருவாக்குகிறீர்கள் - வார்க்கிறீர்கள்). இதனை இனப்பெருக்கம் என்ற ரீதியில் சிந்திக்காதீர்கள்.

குளோனிங் அவசியமா?

 Cloning in Tamil, குளோனிங்

நீங்கள் அடுத்த தலைமுறை மக்களை உருவாக்கிக்கொண்டிருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் உலகம் எப்படி இருக்கும் என்பது தற்போது உங்களது உடலில் தீர்மானிக்கப்படுகிறது – அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. அந்த விதமாகத்தான் அது கையாளப்பட வேண்டும். ஒரு சில கவர்ச்சிகரமான (ஈர்ப்பான) விஷயங்களை எப்படி செய்வது என்று நாம் அறிந்திருக்கும் காரணத்தால், நாம் செய்யக் கற்றுக்கொள்ளும் அனைத்தையும், நாம் செய்தாக வேண்டும் என்று இல்லை. இந்த பூமி மீது இதுதான் அழிவிற்கான மூலக்காரணமாக உள்ளது. 

நாம் இன்னமும் இளமையில் இருக்கும் காரணத்தால், எதை எல்லாம் செய்யும் திறமை நமக்குள்ளதோ அவை அனைத்தையும், நாம் செய்யவேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு மனிதகுலமாக, நமது மனங்களில் இன்னமும் நாம் முதிர்ச்சி அடையாமல் இருக்கிறோம். “என்னால் செய்யமுடிகின்ற அனைத்தையும் நான் செய்யவேண்டும்” – இது தேவையில்லை. நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, எது தேவை மற்றும் எது தேவையில்லை என்று முடிவெடுக்கும் திறன் நமக்கு இருக்கவேண்டும்.

நீங்கள் என்ன க்ளோனா?