டாக்டர் பிரதாப் ரெட்டி: உடல்நலம் குன்றியிருந்த மக்களுக்கு நீங்கள் செய்த சில சாத்தியமற்ற விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். மருத்துவர்களுக்கும், மருத்துவத்திற்கும் அப்பால், வேறு ஏதாவது ஒரு சக்தி இருக்கிறதா?

சத்குரு: இப்போது நம் உடலின் அளவை வைத்துப் பார்த்தால், நிச்சயமாக இந்த அளவில் நாம் பிறக்கவில்லை. உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் இரண்டு செல்களாக உருப்பெற்று, பின்னர் நீங்கள் ஒரு குழந்தையாக வெளியே வந்தீர்கள், இப்போது பெரிய மனிதராக உள்ளீர்கள். இதெல்லாம் எப்படி நடந்தது? இந்த உடலை உருவாக்கும் அடிப்படை சக்தி எதுவாக இருந்தாலும் - அதாவது இந்த படைத்தலுக்கு மூலமான படைப்பாளர் - ஒவ்வொரு கணமும் உங்கள் உடலுக்குள் செயல்படுகிறார். இந்த உடலின் உற்பத்தியாளர் உள்ளேதான் இருக்கிறார். ஒருவேளை அதை பழுதுபார்க்கும் தேவை ஏற்பட்டால், நீங்கள் உற்பத்தியாளரிடம் செல்ல விரும்புவீர்களா அல்லது உள்ளூர் மெக்கானிக்கிடம் செல்ல விரும்புகிறீர்களா? உங்களுக்கும் உற்பத்தியாளருக்கும் ஒரு தொடர்பு இருந்திருந்தால், நீங்கள் உற்பத்தியாளரிடம் செல்வீர்கள். நீங்கள் அவரிடம் உள்ள தொடர்பை இழந்திருந்தால், உள்ளூர் மெக்கானிக்கை அணுகுவீர்கள். நான் இங்கே மருத்துவ அறிவியலைக் குறைவாக பேசவில்லை. எனவே இந்த உடலை உருவாக்கும் மூலத்துடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், நிச்சயமாக நீங்கள் உடலுக்குள் உருவாகும் ஒவ்வொரு பிரச்சனையையும் நீங்களே கையாளலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மக்கள் தங்கள் சக்தி உடலை சமநிலைப்படுத்தவும், செயல்படுத்தவும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆன்மீகப் பயிற்சி செய்ய தயாராக இருந்தால், அவர்கள் நிச்சயமாக அனைத்து நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

இரண்டு வகையான வியாதிகள் உள்ளன: தொற்று மற்றும் நாள்பட்டவை. வெளிப்புற படையெடுப்பு காரணமாக தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. அதை கையாள நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதைக் குறித்து தியானிக்க அவசியமில்லை! ஆனால் பூமியில் உள்ள 70% வியாதிகள் சுயமாக உருவாக்கப்பட்டவை. சுயமாக உருவாக்கப்பட்டது என்று நான் ஏன் சொல்கிறேன்? ஏனெனில், அது உங்களுக்குள் இருந்து உருவானது.

இந்த உடல் அடிப்படையில் ஆரோக்கியத்தை மட்டுமே உருவாக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின் எப்படி அது உங்களுக்கு எதிராக மாறும்? ஏனென்றால், எங்கோ நீங்கள் அதை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. நீங்கள் இன்னும் கொஞ்சம் அதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு முறையான வழி உள்ளது, ஏனென்றால் இந்த உடலில் உள்ள அனைத்தும் உள்ளிருந்து உருவாக்கப்பட்டது. அது அவ்வாறு இருக்கும்போது, அதை எளிதாக உள்ளிருந்தே சரிசெய்யலாம்.

நீங்கள் உள்ளிருந்து உருவாக்கும் விஷயங்களுக்கு, மருத்துவரிடம் ஓடுவது பயனில்லை. நாள்பட்ட வியாதிகளை நிர்வகிக்க மட்டுமே மருத்துவத் தொழில் உங்களுக்கு உதவ முடியும், அவற்றை ஒருபோதும் முழுமையாக அவர்களால் அகற்ற முடியாது. ஏனென்றால் நீங்கள் அதை உருவாக்கும்போது, அதை அவர்கள் எப்படி அகற்ற முடியம்? ஒவ்வொரு நாளும், நோயைக் கட்டுப்படுத்த அவர்கள் மாத்திரை தருவார்கள், அதேசமயம் நீங்கள் உள்ளிருந்து அதிக நோயை உருவாக்குவீர்கள். அந்த அடிப்படை முறையை நீங்கள் மாற்றாவிட்டால், ஆரோக்கியம் நிகழாது.

ஒரு நாள்பட்ட நோய் என்று வரும்போது, அதற்கான மூலக் காரணம் எப்போதும் சக்தி மட்டத்தில் இருக்கும். உங்களிடம் ஒரு ஸ்தூல உடல் இருப்பது போலவே, ஒரு சக்தி உடல் அல்லது பிராணமயகோஷாவும் உள்ளது. இந்த சக்தி கட்டமைப்பின் மேல் ஸ்தூல பொருட்கள் ஒன்றிணைத்து ஒரு மனித உடலாக உருவாகிறது. உங்கள் சக்தி உடல் பாதிப்படைந்தால் - அதற்கு நீங்கள் வாழும் வளிமண்டலங்கள், நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் வைத்திருக்கும் உறவுகள் அல்லது உங்கள் உணர்ச்சிகள், அணுகுமுறைகள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் காரணமாக இருந்தாலும் - இது இயற்கையாகவே உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக வெளிப்படுகிறது.

யோகாவின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், உங்கள் சக்தி உடல் முழு தீவிரத்திலும் சமநிலையிலும் இருந்தால், நாள்பட்ட நோய் எதுவும் உங்களை அண்டாது. மக்கள் தங்கள் சக்தி உடலை சமநிலைப்படுத்தவும், செயல்படுத்தவும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆன்மீகப் பயிற்சி செய்ய தயாராக இருந்தால், அவர்கள் நிச்சயமாக அனைத்து நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடலாம். யோகா என்பது உற்பத்தியாளருக்கான ஒரு பாதையை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகும், பின் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் பொறுப்பல்ல, அவர்தான் பொறுப்பு.

IYO-Blog-Mid-Banner