இந்தியாவில், நதிகள் எப்போதுமே புனிதமானவையாகவே பார்க்கப்படுகிறது. நதிகள், நமது உயிர்நாடியாகவும், தாயாகவும் நமக்கு ஊட்டமளித்து பேணும் அடையாளமாகவும் இருக்கின்றன. இதை நினைவுகூறும் விதமாகத்தான் வரலாற்று சிறப்புமிக்க, ஆகஸ்ட் 15, 1947 அன்று, யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள செங்கோட்டையில் நம் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

சுதந்திரம் தொட்டே நம் நதிகள் வற்றி வருகின்றன

72 வருடங்களை கடந்துள்ள நிலையில் இன்று நதிகள் எதன் அடையாளமாக இருக்கின்றன? கங்கா, யமுனா, காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, பிரம்மபுத்திரா, மற்றும் நர்மதா ஆகிய நதிகள் இப்போது வற்றியிருக்கிறது.

இந்தியாவின் நதிகள் இறந்து கொண்டிருக்கின்றன. இந்த உண்மை மற்றொரு தேசிய அவசரநிலைக்கு அழைப்பு விடுக்கிறது, புரட்சிக்கு ஒரு புதிய காரணம் கிடைத்திருக்கிறது. நாட்டின் நீர் தேவைகளில் பெரும் பகுதியை நதிகள் பூர்த்தி செய்துவரும் நிலையில், நதிகளைப் பற்றி கிடைக்கும் தகவல்கள் நம்மை திடுக்கிட வைக்கிறது:

free-india-of-water-crisis-article-2-river-depletion-since-independence-map

 

உலகில் அதிகமான நீர் பற்றாக்குறை உள்ள நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 1950ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு நபருக்கு 3,000–4,000 கன மீட்டர் தண்ணீர் இருந்தது. இன்று, இது சுமார் 1,000 கன மீட்டராக குறைந்துள்ளது, இதற்கு மக்கள் தொகை பெருக்கம் பெரும் காரணமாகிறது.

மகாத்மா சபர்மதி நதியின் கரையில் நிறுவினார்,இது இப்போது வறட்சிக்கும் வெள்ளத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது. அதிகமான நீர் பயன்பாட்டால் திணறுகிறது. உலக அளவில், நீர் பற்றாக்குறை நிலவும் நதி அமைப்புகளில் முதல் 10 இடங்களில் சபர்மதியும் உள்ளது.

தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவுவதில் ஒரு முரண்பாட்டை பார்க்கிறோம். கிட்டத்தட்ட, கபினி ஆற்றின் கரையிலேயே வசிக்கும் கிராமவாசிகள், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக டேங்கர்கள் மூலம் விநியோகமாகும் தண்ணீரையே நம்பியுள்ளனர். நதியின் வடிநிலப்பகுதியில் இருந்த ஷோலா காடுகள் அழிந்ததாலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மரங்களின் போர்வையை அகற்றுவது கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வழிவகுக்கிறது. இந்திய மக்கள் பலருக்கும், பருவமழைக்காலம் என்பதே ஒரு திகிலான காலமாக மாறியுள்ளது.

வெள்ளம் மற்றும் வறட்சியின் இரட்டை சிக்கல்

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சராசரியாக பெய்யும் பருவமழையின் அளவானது சமீப காலம் வரை அதே அளவில் இருந்தாலும், அதன் பருவகால வரவு மற்றும் பொழியும் முறை பெரிதும் மாறிவிட்டது. சமீப காலமாக வறட்சியும், அதை தொடர்ந்து வெள்ளம் ஏற்படுவதும் இந்தியாவில் மிகவும் சாதாரணமாகிவிட்டது.

மே 2016ல், நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் மக்கள் சாதாரணமாக கங்கை நதிப்படுகையின் மீது நடந்தே கடந்து சென்று கொண்டிருந்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் நாற்பது லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர் . நவம்பர் மற்றும் டிசம்பர் 2015ல் தமிழ்நாடு அதன் மோசமான வெள்ள சீரழிவுகளை சந்தித்தது. அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக,, 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டது.

சுருங்கி வரும் மஜூலி தீவு

அசாமில், பிரம்மபுத்திரா நதியில் அமைந்துள்ள மஜூலி தீவு உலகின் மிகப்பெரிய நதி தீவாகும். பருவமழைக்காலம் துவங்கும் போது, அங்கு வசிக்கும் கிராமவாசிகள், தங்களை இன்னும் ஒரு வருடம் காப்பாற்ற வேண்டும் என்று கடவுளர்களிடம் பிரார்த்தனை செய்வர். நாம் சுதந்திரம் பெற்றதிலிருந்து, வெள்ளத்தின் தாக்கம் அங்கே எதிர்பாராத அளவுக்கு மோசமடைந்து கொண்டே வருகிறது. 1950 ஆம் ஆண்டில், 1,256 சதுர கி.மீ. இருந்த அந்த தீவின் பரப்பளவு, இன்று, கிட்டத்தட்ட பாதியாக சுருங்கி, இப்போது 703 சதுர கி.மீ. மட்டுமே எஞ்சி உள்ளது.

இந்தத் தீவின் நிலப்பரப்பு சுருங்கி வரும் இந்த நிலைக்கு காலநிலை மாற்றம் மற்றும் கட்டுக்கடங்காத காடழிப்பு முக்கிய காரணமாகிறது. இதனால் உலகிலேயே வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படும் பகுதிஉலகிலேயே வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இது உருவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அசாமின் 40% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

மண் அரிப்பின் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலையில் மஜுலியின் இளைஞர்கள் அங்கிருந்து ஹைதராபாத், பெங்களூரு, போன்ற பெரு நகரங்களுக்கும், கேரளாவிற்கும் குடிபெயர்ந்து வருகின்றனர். பாரம்பரியமான வசதியான விவசாய குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் தற்போது மாதத்திற்கு வெறும் 14,000 ரூபாய் சம்பளத்தில் பாதுகாப்பு காவலர்களாக பணிபுரிகிறார்கள்.

பிரம்மபுத்திரா வடிநிலப்பகுதி அதன் 78% மரப்போர்வையை இழந்துள்ளது. இது, உயிர்கள், பயிர்கள் மற்றும் உடைமைகளை இழக்க காரணமாகியுள்ளது. ஒரு விவசாயி இதை நினைவு கூர்கையில், 1972 ஆம் ஆண்டில், திருமணமான புதிதில் நதிக்கரைக்கு செல்ல தனக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும் என்றும் , ஆனால் இப்போது நதி தனது வீட்டு வாசலுக்கே வந்துவிட்டிருக்கிறது என்கிறார்.

மண் அரிப்பு மற்றும் மாறி மாறி வரும் வெள்ளம் மற்றும் வறட்சியின் சுழற்சிகள் நமது உள்ளூரில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு அவநம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. ஏனெனில் நாட்டின் ஒவ்வொரு பெரு நதியும் இதே பிரச்சினையை எதிர்கொள்கின்றது.

மரங்களின் போர்வை, வறட்சி மற்றும் பருவமழையால் வெள்ளம் - எல்லாமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளது. வெள்ளம் மற்றும் வறட்சி என்பது முற்றிலும் தனித்தனி பிரச்சினைகள் போல் தோன்றினாலும், இந்த இரண்டு பேரழிவுகளுக்கும் காரணம் ஒன்றுதான் என்பதே உண்மை. இந்தியாவின் சில முக்கிய நதி அமைப்புகளைப் பற்றி கீழே உள்ள விளக்கப்படம் காட்டுகிறது.

  1. நதி எவ்வளவு வற்றி இருக்கிறது (%),
  2. வடிநிலப் பகுதிகளில் எவ்வளவு மரப்போர்வையை இழந்துள்ளன (%),
  3. மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாயம்,
  4. இந்த நதியை தங்களின் நீராதாரமாக நம்பியுள்ள நகரங்கள்.

நதி

வறட்சியில் உள்ளவை

மரப்போர்வை

இழப்பு

பருவமழையின் காரணமான

வெள்ள ஆபத்து

நதியைநீர் ஆதாரமாக கொண்டுள்ள நகரங்கள்

கங்கா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

44%

78%

ஆம் (தீவிர)

புது தில்லி, கொல்கத்தா, வாரணாசி, அலகாபாத்

காவேரி

40%

87%

ஆம்

சென்னை, பெங்களூரு

கிருஷ்ணா

61%

97%

ஆம்

ஹைதராபாத், விஜயவாடா

நர்மதா

58%

94%

ஆம் (தீவிர)

போபால், வதோதரா

எல்லா நதிகளுமே 75% க்கும் அதிகமாக மரங்களின் போர்வையை இழந்துள்ளன, மேலும் ஒவ்வொரு நதியும் அதிக அல்லது மிக அதிக வெள்ள அபாயத்தில் உள்ளன என்பது மேல் உள்ள விளக்கப்படத்திலிருந்து தெளிவாகிறது. வெள்ளம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை என சுழலும் பிரச்சினைக்கு ஒரே முக்கிய காரணியாக இருப்பது போதுமான அளவுக்கு மரங்களின் போர்வை மற்றும் தாவர வகைகள் இல்லாததுதான்.

இது எப்படி வேலை செய்கிறது? மரத்தின் வேர்கள் மண்ணின் இறுக்கத்தை குறைத்து நுண் துளைகளை ஏற்படுத்துகின்றன.இதனால் மழை பெய்யும்போது மண் எளிதாக தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடிகிறது. இவ்வாறு மண்ணால் பிடித்து வைக்கப்பட்ட இந்த நீர் ஆண்டு முழுவதும் படிப்படியாக நதியில் விடப்படுகிறது. மரங்கள் இல்லாவிட்டால், வெள்ளம் மற்றும் வறட்சியின் அழிவுகரமான சுழற்சி தொடர்ந்து ஏற்படுகிறது.

பருவமழை காலங்களில், மரங்கள் இல்லாமல் மண்ணால் மழைநீரை உறிஞ்சி வைத்துக்கொள்ள முடியாதபோது, அதிகப்படியான நீர் நிலத்தின் மேற்பரப்பில் பாய்ந்து வெள்ளத்தை ஏற்படுத்துகிறது. மழைக்காலம் முடிந்ததும், நதிகளில் நீரோட்டம் தொடர மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நதிகள் வறண்டு போகின்றன.

காடழிப்பு மற்றும் வளர்ச்சி அல்லது திறனற்ற வேளாண்மை காரணமாக குறைந்து வரும் மரங்களால் மழை பெய்யும் தன்மையில் ஒரு சீரற்ற நிலை ஏற்பட்டு, மழைநீர் மண்ணில் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் நிலத்தடி நீர் நிலைமை மோசமாகி வருகிறது. 20 ஆண்டுகளில், இந்தியாவின் 60% நீர்நிலைகள் ஆபத்தான நிலையில் இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும்போது, நீர் அட்டவணை குறைகிறது. அதாவது நதிகளில் சென்றுசேர போதுமான தண்ணீர் மண்ணில் இல்லை.

free-india-of-water-crisis-article-2-river-depletion-since-independence-dryland

இதனால்தான் நதிப் படுகைகளில் கணிசமான மரங்களின் நிழல் போர்வையை பராமரிப்பது முக்கியமான ஒன்றாகிறது.

பாராமுகம் காட்டப்படும் விவசாயிகள் தற்கொலைகள்

 

 

1947 முதல், இந்திய மக்கள் தொகை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் கிடைக்கப்பெறும் நீரின் அளவு அப்படியே உள்ளது. இதற்கிடையில், ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவளிப்பது போல் இந்திய விவசாயிகள் தொடர்ந்து நம் தேசத்திற்கு உணவளித்து வருகின்றனர். ஆனால், விவசாயிகளின் சொந்த கதை நவீன இந்தியாவில் பெரும் சோகமாக மாறி வருகிறது.

1995 முதல் 2013 வரை 296,438 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில், மேலும் 12,360 விவசாயிகள் தங்கள் உயிரை துறந்துள்ளனர். கடந்த காலங்களில் விவசாயிகளை வாழ்க்கையின் விளிம்பிற்கு தள்ளிய காரணங்கள் அன்றை விட இன்று மோசமாகிவிட்டன

விவசாயிகள் வேறு வழியில்லாமல் நகரங்களுக்கு குடிபெயர்கிறார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, உலக வங்கி வெளியிட்ட மேம்பாட்டு அறிக்கையில் 2015 ஆம் ஆண்டளவில், கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையின் 16 மடங்குக்கு சமமாக இருக்கும் என்று கணித்திருந்தது. 2015ம் வந்தது, முடிந்தும் விட்டது. ஆனால் பிரச்சினை முன்னெப்போதையும் விட அபாயகரமாக மாறியுள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், 130 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டிற்கு பயிர்களை விளைவித்து உணவளிக்க இனி யார் மிச்சம் இருக்கிறார்கள்?

நாம் கணிசமான அளவு தாவர வகைகளை நிலத்தில் மீண்டும் கொண்டு வரவேண்டிய நேரம் இது. தாவரங்கள் மற்றும் மரங்களை அதிகரிப்பது இந்தியாவின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையில் பயனளிக்கும் தீர்வாகும். இது நதிகளைவற்றாமல் ஜீவனுடன் வைத்திருக்கும், வெள்ளத்தை கட்டுப்படுத்தும்,வறட்சிக்கு எதிராக போராடும், நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்கும், மழைப் பொழிவை இயல்பாக்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும், மண் அரிப்பைத் தடுக்கும், நீரின் தரத்தை மேம்படுத்தும், மண்ணின் தரத்தை மேம்படுத்தும், மேலும் பல்லுயிரியலையும் பாதுகாக்கும்.

free-india-of-water-crisis-article-2-river-depletion-since-independence-treecover

மரங்களின் பரப்பை அதிகரித்து விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பிற்கு மாற உதவுவது நதிகளுக்கு புத்துயிர் அளிக்க உதவுவதுடன் வாழ்க்கை சுமைகளால் அவதிப்படும் விவசாயிகளின் பொருளாதார திறனை அதிகரிப்பதற்கும் உதவும்.

மக்கள் இயக்கம் துவங்கிவிட்டது: காவேரி கூக்குரல்

free-india-of-water-crisis-article-2-river-depletion-since-independence-sg-rfr-campaign

நதிகளை மீட்போம் இயக்கம் இந்தியாவின் ஜனநாயகக் குரலின் சக்தியைக் காட்டியது. மக்களின் ஏகோபித்த ஆதரவை பதிவு செய்த 'மிஸ்டு கால்கள்' உண்மையான செயலுக்கு களம் அமைத்தன. "நதிகளை மீட்போம் இயக்கம்" தற்போது, விவசாயிகளின் தற்கொலைகளால் வேண்டாத பெயரை பெற்றுள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் ஏற்கனவே களமிறங்கியுள்ளது - அங்கு வாகரி நதிக்கு புத்துயிரூட்ட மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது

இப்போது, காவேரி கூக்குரல் இயக்கம் துவங்கிவிட்டது. தென்னிந்தியாவில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நதி காவேரி. காவேரி டெல்டா என்பது 44 லட்சம் மக்களுக்கு உணவளிக்கும் வளமான நெற்களஞ்சியம். பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் சமூகநல திட்டங்கள் மூலமாக, ஈஷா அவுட்ரீச் இந்த பகுதியில் பெரிய அளவிலான தன்னார்வலர்களின் ஆதரவை நிறுவியுள்ளது. காவேரிக்கு புத்துயிர் ஊட்ட இணைந்துள்ள நிபுணர்களின் நிபுணத்துவத்தையும் அனைத்துதரப்பு மக்களின் ஆதரவுடன் காவேரியை புத்துயிர் ஊட்ட பயன்படுத்த முடியும்.

free-india-of-water-crisis-article-2-river-depletion-since-independence-caca-campaign

காவேரி கூக்குரல் இயக்கம், காவேரி நதியின் வடிநிலப்பகுதிகளில் 242 கோடி மரப்பயிர்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல் கட்டமாக, 73 கோடி மரங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகா முழுவதும் நடப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சூழலியல் மற்றும் பொருளாதாரம் இவ்விரண்டயும் இணைத்து வைக்கிறோம். வேளாண் காடு வளர்ப்பு மூலம், ஒரு விவசாயியின் வருமானம் 5-7 ஆண்டுகளில் 3-8 மடங்கு அதிகரிக்கும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, காவேரி வடிநிலப்பகுதிகளில் மண்ணால் பிடித்து வைக்கப்படும் தண்ணீரின் அளவு சுமார் 40% அதிகரித்திருக்கும்.

காவேரி புத்துயிர் பெறுவது நாட்டின் பிற பகுதிகளுக்கும், உலகின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளிலும், அவற்றின் திசையையே மாற்றியமைப்பதாக இருக்கக்கூடும். ஏனெனில் மரங்களின் போர்வையை அதிகரிப்பதன் மூலம் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் அறிவியல் பெரும்பாலான பகுதிகளுக்கும் பொருத்தமானது.

உங்கள் இதயத்திற்கு கேட்கிறதா?

இப்போதுதான் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு, இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் ஒருமித்து எழுந்து நின்று, சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தார்கள். காந்தியடிகளின் சுதந்திர போராட்ட இயக்கத்திற்கு பெண்கள் தங்கள் தாலியையும் நன்கொடையாக வழங்கிய நெகிழ்வான தருணங்களை சரித்திரம் பதிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்திற்கு துணை நிற்க இளம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை நிறுத்தினர். இளம் வயதினரும், முதியோரும், ஆண்களும் பெண்களும் அந்நிய ஆட்சிக்கு எதிராக வன்முறையற்ற அமைதி முறையில் ஒருமித்து போராட எழுந்தனர். இந்த போராட்டத்தில் காயங்களை சந்திக்கவும், சிறைக்கு செல்லவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

இப்போது இந்திய மக்கள் ஒரு சுதந்திர தேசத்தை அனுபவிக்கிறார்கள். இதன் பொருள், மக்கள் மீது ஒரு பெரிய பொறுப்பு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது: தங்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளில் முதலீடு செய்தல். மக்களின் குரலையும், இந்த தீர்வுகளையும் ஆதரிக்க அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

இதை நாம் எழுதும் நேரத்தில், தனது சுதந்திரத்தைக் கொண்டாட இந்தியா தயாராகி வரும் அதேவேளையில், இந்தியாவில் மற்றுமொரு வெள்ளப்பெருக்கு பேரழிவை ஏற்ப்படுத்தியதில் இறப்பு எண்ணிக்கை 244 பேரை எட்டியுள்ளது. கேரளாவில் மட்டும் 85 பேர் இறந்துள்ளனர்

ஒரு தேசத்தின் விடுதலை என்பது அதன் அரசியல் சுதந்திரத்தை தாண்டி பல அம்சங்களையும் சார்ந்திருக்கிறது. அடிப்படையான. குடிநீருக்கே தினசரி போராட்டமாகவும், ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் வருகையே பயத்தைத் ஏற்படுத்துவதாக இருக்குமானால், எதிர்கால தலைமுறையினர் எந்தளவு சுதந்திரமாக இருந்து விடுவார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தண்ணீர் சுதந்திரத்திற்காக உழைக்க வேண்டிய நேரம் இது, ஒரு தேசமாக எழுந்து நின்று இப்போது நாம் எதிர்கொள்ளும் தண்ணீர் நெருக்கடியில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர இந்தியாவை நம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

CC-ISO-WebBanner-650x120-Tam