ஈஷா தாய்மை நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைகாகவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களின் உடல், மனம் மற்றும் உணர்ச்சி நிலை பிறக்கப்போகும் குழந்தையை பாதிக்கும் என்பதால், நம் பாரத கலாச்சாரத்தில் கர்ப்பிணி பெண்களின் நலம் பேண விரிவான செயல்முறைகள் உருவாக்கப்பட்டன. இந்த கலாச்சார ஞானத்திலிருந்து கர்ப்பிணி பெண்கள், அவர்களின் உடல் மனம் மற்றும் உணர்ச்சி நிலையை ஆரோக்கியமாகவும், விழிப்புணர்வாகவும் வைத்துக்கொள்ள ஈஷா தாய்மை நிகழ்ச்சி உதவுகிறது. இந்த நிகழ்ச்சி தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தையும், ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு முறைகளையும் பற்றி தெரிந்து கொள்ள வழிகாட்டுகின்றது.
Sadhguru on Pregnancy & Motherhood