FILTERS:
SORT BY:
சுற்றியுள்ள சூழலை இனிமையாக மாற்ற, உங்களுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை. உங்கள் உடலையும், மனத்தையும், சக்திநிலையையும் இனிமையாக வைத்துக்கொள்வது நூறு சதவிகிதம் உங்கள் பொறுப்புதான்.
வசந்தம் பூத்துக் குலுங்கும் வேளையில்தான் ஹோலி பண்டிகை வருகிறது. வண்ணமயமான, அன்புமயமான, குதூகலமான ஆட்டத்துடன் உங்கள் உயிரோட்டத்தை கொண்டாடும் தருணம் இது.
வாழ்க்கைக்கான மூலப்பொருட்கள் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு என்ன உருவாக்குவது என்பது உங்கள் கையில் இருக்கிறது.
உங்களுக்குள் நீங்கள் நிசப்தமாக ஆகிவிட்டால், கற்பனை செய்து பார்க்க முடியாத விதத்தில் வாழ்க்கையை உணர்வீர்கள் - அதன் முழு ஆழத்தில் உணர்வீர்கள்.
உடல், புத்தி - இதன்படி மட்டுமே நீங்கள் போனால், வாழ்க்கை ஒரு சர்க்கஸ் போலதான் இருக்கும். தெய்வீகத்தின் புத்திசாலித்தனம் உங்கள் வாழ்க்கையை வழிநடத்தும் போது, வாழ்க்கை ஒரு நடனமாக ஆகிவிடும்.
காலபைரவர் மரணத்தைப் பற்றியவர் மட்டுமல்ல — அவர் காலத்தைப் பற்றியவர். அடிப்படையாக, உங்கள் காலத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கையின் தரம் அமைகிறது.
நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால், தெளிவாக உணர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது.
நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களை வருத்தப்பட வைக்க யாரோ ஒருவர் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இன்றோ, உங்களை சந்தோஷப்பட வைக்க யாரோ கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. மனித அனுபவங்களுக்கு எல்லாம் மூலம் நமக்குள்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது.
பூக்களுக்கு வாசம் போலதான் மனிதர்களுக்கு அன்பும்.
உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எதுவாக இருந்தாலும், துன்பப்பட எந்த ஒரு காரணமும் இல்லை. எதுவுமே இல்லாமல் வந்தீர்கள், அதனால் எப்போதும் லாபத்தின் பக்கம்தான் இருக்கிறீர்கள்.