ஆசனம்' அல்லது 'யோகாசனம்' என்ற சொல் பொதுவாக உடலை முறுக்கிக் கொள்வதாகவோ, தலைகீழாக நிற்பதாகவோதான் மக்களால் கருதப்படுகிறது. ஆனால், யோக சூத்திரங்களை வகுத்த பதஞ்சலி முனியோ 'ஆசனம்' என்றால் ease-firm என்கிறார்; அதாவது சுகமாகவும் ஸ்திரமாகவும் இருப்பது. ஆசனம் குறித்த இதுபோன்ற இன்னும் சில உண்மைகளை சத்குருவின் மூலம் அறிய தொடர்ந்து படியுங்கள்!

கடந்த வாரம் பாரம்பரிய ஹடயோகா பகுதியில், அங்கமர்தனா பற்றி பார்த்தோம். இந்த வாரம், யோகாசனங்களைப் பற்றி பார்க்கலாம்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஆசனம்" என்றால் "உடல்நிலை" என்று பொருள். நாம் எவ்விதம் உட்காருகிறோம், நிற்கிறோம், நம் கைகளின் நிலை என எல்லாமே ஒரு ஆசனம்தான். எனவே எண்ணற்ற ஆசனங்கள் உள்ளது. எந்த உடல்நிலை உங்களை ஒரு உயர்ந்த வாய்ப்புக்கு இட்டுச் செல்கிறதோ, அதற்கு யோகாசனா என்று பெயர். அடிப்படையில் 84 யோகாசனங்கள்தான் உண்டு. இவை, ஒரு மனிதன் தன் உச்சநிலையை அடைவதற்கான 84 வழிமுறைகள் ஆகும்.

இவை அனைத்தும் எளிமையாக இருப்பதைப் பற்றியது.

பதஞ்சலி முனிவர், தன் யோக சூத்திரத்தில், "சுகம், ஸ்திரம், ஆசனம்" என்கிறார். எந்த நிலையில் உங்களால், சௌகரியமாக, நிலையாக இருக்கமுடியுமோ அதுதான் உங்கள் ஆசனா. அப்படியென்றால், உங்கள் உடல், மனம் ஒருவித சௌகரியத்திலும், சக்தி என்பது முழு அதிர்விலும், சமநிலையிலும் உள்ளது.
அப்படியிருக்கும்போது, நீங்கள் இயற்கையாகவே தியான நிலையில் இருப்பீர்கள். ஆசனா என்பது, இயற்கையான தியான நிலைக்கு வர ஒரு தயார்படுத்தும் படிநிலை. எனவே, ஒருவிதத்தில், ஆசனா என்பது, தியானம் செய்ய சக்திவாய்ந்த வழிமுறை.

ஆசனங்கள், உடற்பயிற்சி இல்லை என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். பொருள் உடலுக்கு அதீத அளவிலான நினைவு கட்டமைப்பு உண்டு என்பதை யோகிகள் புரிந்துவைத்துள்ளனர். இந்த பிரபஞ்சம் ஒன்றுமில்லாத தன்மையிலிருந்து ஆரம்பித்து, இந்த கணம் வரை நடந்த அனைத்துமே இவ்வுடலில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசனங்கள் செய்யும்போது, அந்த நினைவுப் பெட்டகத்தை திறந்து, வாழ்க்கையை அதன் உச்ச நிலையை அடைவதற்கு நாம் மறு உருவாக்கம் செய்கிறோம். இது ஒரு சூட்சுமமான, விஞ்ஞானபூர்வமான வழிமுறை - அதே சமயத்தில் ஒரு வெடிக்கச்செய்யும் அனுபவம்கூட.
1
2

ஒரு ஆசனம் போதுமானதே!

'ஹடயோகா' என்பது, முழுமையான பலன்களைத் தரக்கூடிய ஆசனங்களை உள்ளடக்கியுள்ளது. ஆதற்காகத் தனியொரு ஆசனாவின் பலனை நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது. நிறைய யோகிகள் ஒரே ஒரு ஆசனாவில்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதற்கு "ஆசனாசித்தி" என்று பெயர். இந்த நிலையில், உடல் ஒரு சௌகரியமான நிலைக்கு வந்துவிடும். இந்த பிரபஞ்சத்தின் வடிவியலுக்கு, உங்கள் உடலை இணங்கச் செய்வதற்குத்தான் இது. உங்கள் உடலை சரியாக வைக்கக் கற்றுக்கொண்டால், இந்த பிரபஞ்சத்தையே நீங்கள் உங்களுக்குள் இறக்குமதி செய்யமுடியும்; இதுதான் யோகா. சரியான நிலையில் நீங்கள் உட்கார்ந்தால், உங்களுக்கு என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ, அது உங்களுக்குள்ளே இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


அடுத்த வாரம்...

அடுத்த வார பாரம்பரிய ஹடயோகா பகுதியில், பூத சுத்தியைப் பற்றி பேசும் சத்குரு, நம் உடலின் அடிப்படையான பஞ்ச பூதங்களின் தன்மை குறித்தும் நாம் அவற்றைத் தூய்மை செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார்.

வகுப்பைப் பற்றிய விபரங்களுக்கு