சூத்திரங்களின் அர்த்தம்

சத்குரு: சூத்திரம் என்ற சொல்லுக்கு, கயிறு அல்லது நூல் என்பது பொருள்.. இந்தச் சொல்லானது யோக சூத்திரங்கள் மற்றும் சிவ சூத்திரங்கள் போல, செய்முறை அல்லது அடிப்படையான ஒன்று என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்படுகிறது, இதில் உள்ள விஞ்ஞானத்தை பார்ப்போம். எனது கையில் ஒரு நிமிடம் நான் பிடித்திருந்த செம்புத் தகடு ஒன்றை, அதன் பிறகு நீங்கள் தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சிறிது உணர்வுடையவர் என்றால், அது முற்றிலும் வித்தியாசமான முறையில் அதிர்வதை நீங்கள் உணர்வீர்கள்.. ஆனால் ஒரு தகட்டினால் இந்த சக்தியை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இதே செம்பு உலோகத்தை வேறுவிதமாக வடிவமைத்திருந்தால், அது அதிர்வுகளை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ளும்.. வடிவத்துக்கும், பயன்படுத்தப்படும் பொருளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது.  

படைப்பிலிருப்பவற்றின் அடிப்படையான வடிவமைப்பை நவீன விஞ்ஞானம் அடையாளம் காண ஆரம்பித்துள்ளது. உதாரணத்திற்கு, பாய்ந்தோடும் நீர்த்தடங்கள் உருவாக்கும் வடிவங்களுக்கும், ,பாலைவனத்தின் மணலில் உருவாகும் வடிவங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. ஒரு நதி எப்படிப் பாய்கிறது என்பதற்கும் ,மனித உடலமைப்பு எப்படி உருப்பெறுகிறது என்பதற்கும் இடையிலும் கூட ஒரு நேரடியான தொடர்பு உள்ளது. படைப்பிலிருக்கும் எல்லாவற்றின் அடிப்படை வடிவமைப்பும் ஒரேமாதிரி இருக்கிறது.. அவைகளின் சிக்கலான மற்றும் நுட்பமான விஷயங்களில் மட்டும்தான் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுகின்றது. சில வடிவங்களால் மற்றதைவிட அதிகநேரம் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. இதன்படி பார்த்தால், ஒரு நீள்வட்டம் சிறந்த வடிவமாக இருக்கிறது. மிகச்சரியான ஒரு நீள்வட்ட வடிவம், ஐந்து முதல் பத்தாயிரம் வருடங்களுக்கு சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும், இதுமனித உணர்வில் எல்லையற்றது.

சக்தியை சேமித்துவைப்பதற்கான பொருட்கள்

பலவகையான பொருட்களை நாம் சக்தியூட்டமுடியும் – பட்டுத்துணி அதற்கான ஓர் உதாரணம். லிங்கபைரவி சன்னிதியில் ஒரு குறிப்பிட்ட முறையில் சக்தியூட்டப்பட்ட சேலையை நீங்கள் அணிந்துகொண்டால், அது உங்களை முற்றிலுமான ஒரு பரவச நிலையை அடையச்செய்யும், சிறிது காலம் அது லிங்கபைரவி சன்னிதியில் வைக்கப்பட்டதே இதற்குக் காரணம். பட்டு, தூய பருத்தி, மற்றும் செம்பு ஆகியவை, சக்தியைத் தக்கவைத்துக்கொள்வதில் மிகவும் சிறந்தவை. பாதரசம் மிகச்சிறந்தது. ஆனால் போதிய நிலையிலான சாதனா இருந்தால் மட்டுமே பாதரசத்தைப் பயன்படுத்தவேண்டும்.

ஒரு நூலை, சூத்திரமாகமாற்றுவதுஎது?

sadhguru-wisdom-article-sutra-more-than-thread-linga-bhairavi-thread

பருத்தி நூல் சக்தியை சேமித்துவைப்பதற்கான ஒரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் அது சாதாரணமாகக் கிடைப்பது, மலிவானது என்பதுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அது மிக நன்றாகச் செயல்படுகிறது. சக்தியை உள்வாங்கும் அதன் திறனை மேம்படுத்துவதற்காக, மஞ்சள் போன்ற குறிப்பிட்ட மற்ற பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம்

மஞ்சளின் முழுமதிப்பு மற்றும் மஞ்சளின் மந்திரவித்தையை நவீன சமூகங்கள் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அதன் ஒரஅம்சம், செரிமான மண்டலத்திலிருந்து சிறியளவிலான கிருமித் தொற்றுகளை நீக்குகிறது, மேலும், ஒரு குறிப்பிட்ட அளவு மஞ்சளும் நெய்யும் சருமத்தைப் ஒளிவீச வைக்கிறது. அழகை மெருகூட்டக்கூடிய மஞ்சளின் இயல்பினால் மட்டும் ஒளிரவில்லை. ஒளி உடலை மஞ்சள் தூய்மைப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம் உள்ளிருந்து மட்டும் செயல்படுவதில்லை. உங்களது நோய் எதிர்ப்பு மண்டலம் உங்களைச் சுற்றி நீங்கள் உருவாக்கும் சக்தி அடுக்கையும் சார்ந்திருக்கிறது. உங்களைச்சுற்றிலும் ஒருவகையான அதிர்வை மஞ்சள் உருவாக்குகிறது, ஒளி உடலின் இயல்பை மாற்றுகிறது, முகத்தை ஒளிரச் செய்கிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சளின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அதன் வழியே சிரமம் இல்லாமல் சக்தியைக் கடத்த முடியும். சக்தியை கிரகித்துக்கொள்ளும் ஒரு நூலின் திறனை மஞ்சள் மேம்படுத்துகிறது.. மஞ்சள்தான் ஒரு நூலை சூத்திரமாக உருவாக்குகிறது. நோக்கத்தைப் பொறுத்து, பலவகையான சூத்திரங்களை நம்மால் உருவாக்க முடியும். அதை எளிமையான வழிகளில் அல்லது அதிநவீன வழிகளில் செய்யமுடியும். நோக்கத்திற்கு ஏற்றவகையில் செயல்படுவதற்காக, ஒருகுறிப்பிட்ட முறையில் அதைத் தயாரிக்கவேண்டும். உதாரணத்திற்கு ஒரு மங்கல சூத்திரம் என்பது இரண்டுபேரை இணைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மங்கல சூத்திரத்தின்முக்கியத்துவம்

sadhguru-wisdom-article-sutra-more-than-thread-linga-bhairavi-mangalya-bala-sutra

இந்தியாவில், திருமணம் நடத்துவதன் பின்னணியில் ஒரு முழுமையான விஞ்ஞானம் இருந்தது. இரண்டுபேருக்குத் திருமணம் செய்யப்படுவது என்பது இரு குடும்பங்கள் அல்லது இரண்டு உடல்களின் பொருத்தம் என்பதாக மட்டும் இல்லாமல், இருவருக்கும் இடையில் ஒரு ஆழமான சக்திநிலையிலான பொருத்தமாகப் பார்க்கப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் திருமணம் செய்யும் இருவரும் திருமணநாளன்று வர சந்திக்காமலே கூட இருந்திருப்பார்கள். ஆனால் அது ஒரு பொருட்டாக இருந்ததில்லை ,ஏனென்றால் இருவரிடமும் பொருந்தக்கூடிய விஷயங்களை, அவர்களைக்காட்டிலும் நன்றாக அறிந்திருந்த வேறொருவரால் பொருத்தம் பார்க்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

தம்பதிகள் இணையும்போது மங்கலசூத்திரம் தயார் செய்யப்பட்டது. "மங்கலசூத்திரம்” என்றால் "மங்கல நாண்என்பது பொருள். இந்த மங்கலநாண் தயார் செய்வது ஒரு விரிவான அறிவியல் சார்ந்தது. சில பருத்தி இழைகளை எடுத்து, அதற்குக் குங்குமம் மற்றும் மஞ்சள் பூசி, குறிப்பிட்ட வகையில் சக்தியூட்டப்பட்டது இந்த மங்கல நாண் எப்படித் தயார்செய்யப்படுகிறது என்றால்,அது கட்டப்பட்டுவிட்டால், அவர்களின் வாழ்நாள் முழுதும் மற்றும் அதைக் கடந்தும் செயல்பட்டது. ஒரே தம்பதியினர் பல பிறவிகள் இணைந்திருப்பதற்கு விழிப்புணர்வுடன் தேர்வு செய்த சூழல்களும் இருந்துள்ளன. ஏனென்றால் இருவரையும் உடல் நிலையில் அல்லது உணர்ச்சி நிலையில் மட்டுமல்லாமல், அவர்களை ஒன்றாக இணைப்பதற்கான வழிகளைப் பயன்படுத்தினர். தம்பதிகளின் நாடிகள் (சூட்சும சக்தி ஓட்டங்கள்) இணைத்துக் கட்டப்பட்டன.

உடல், மனம், மற்றும் உணர்ச்சியின் நிலையில் நீங்கள் என்ன செய்தாலும், அது மரணத்துடன் முடிந்துபோகிறது. ஆனால் சக்திநிலையில் நீங்கள் செய்வது நீடிக்கிறது. இதில் மறுபரிசீலனை செய்யும் கேள்வியே எழவில்லை, ஏனெனில் என்ன செய்யவேண்டும் என்று அறிந்தவர்களால், மிகவும் ஆழமான ஏதோஒன்று, மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இணைத்துக் கட்டப்பட்டது. இன்றைக்கும்கூட என்ன செய்யவேண்டும் என்று அறியாதவர்களால், அதே செயல்முறை செய்யப்படுகிறது. அதற்கு அர்த்தம் ஏதும்இல்ல ஏனென்றால் அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞானம் காணாமல் போயிருக்கிறது.

மங்கல சூத்திரத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட வழியில் இரண்டு உயிர்களை இணைத்துக் கட்டினார்கள். இந்தச் சூழலில், அந்த இரண்டுபேரும், "இவர் என்கணவராகவோ அல்லது மனைவியாகவோ இருக்கவேண்டுமா, வேண்டாமா?” என்று சிந்திக்கும் கேள்விக்கே இடமில்லை. இந்தக் கேள்வி எழுவதில்லை. உறவு நிலைதொடர்கிறது. இது மரணத்துடன் கூட முடிந்துப்போவதில்லை. இந்தியாவில் இப்படிப்பட்ட பலதம்பதிகள் உள்ளனர். அவர்களுள் யாரேனும் ஒருவர் இறந்தால், அடுத்தவர் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, ஒரு சிலமாதங்களுக்குள் தனது இணையைப் பின்தொடர்கிறார். ஏனெனில் அவர்களின் சக்திநிலைகள் இணைத்துக் கட்டப்பட்டதுதான் இதற்குக் காரணம். இரண்டு மனிதர்கள் ஒருவராக வாழும் அளவுக்கு நீங்கள் வேறொரு மனிதருடன் பிணைக்கப்பட்டிருந்தால், அதுவாழ்வதற்கான அற்புதமானவழி. அது ஒரு உச்சபட்ச சாத்தியம் இல்லை, ஆனால் அது வாழ்வதற்கான ஒரு அழகானவழியாக இருக்கிறது.

வெவ்வேறு நோக்கம், வெவ்வேறு தயாரிப்புமுறை

மற்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்கு, நாம் விரும்பும் விதத்தில் செயல்படுவதற்கு, ஒரு புத்திசாலியான நூலாக அது இருக்கவேண்டியுள்ளது. இதற்கு சில உதாரணங்கள் - ஆதியோகி ஆலயத்தில் உள்ள ஆதியோகி லிங்கத்தைச்சுற்றிலும் ஒருசூத்திரம் (நூல்) உள்ளது. லிங்கபைரவிக்கு நாம் சூத்திரம் (நூல்) அகற்றியுள்ளோம். ஆனால் தியானலிங்கத்தில் வனஸ்ரீயை சுற்றி சூத்திரம் (நூல்) உள்ளது அது அவ்வப்போது மாற்றப்படுகிறது. இவையெல்லாம் வெவ்வேறு முறையில் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரணமான முறையில் ஒரு சூத்திரம் தயார்செய்வதற்கு ஒருகுறிப்பிட்ட காலம் ஆகிறது – சில நேரங்களில் முப்பது முதல் நாற்பதுநாட்கள் எடுக்கிறது. அவை உடனடியாக செய்யப்பட வேண்டுமென்றால், அதற்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு உயிர்சக்தியை செலவிடத் தேவைப்படுகிறது.

 

சில வருடங்களுக்கு முன்னர், நான் பிரயாணத்தில் இருந்தபோது ஒரு குறிப்பிட்ட சூழலில், வழக்கமான முன்னேற்பாடுகள் செய்துகொள்ளாமல், நான் சில சூத்திரங்கள் தயார்செய்ய வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு அது என்னைப் பாதிக்காமல் இருப்பதற்குத் தேவையான செயல்களை எனக்கு நான் செய்துகொள்ளவில்லை. அடுத்த நாள் என்னால் நடக்கவே முடியவில்லை, இது என் வாழ்க்கையில் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. ஒரு ராட்சத ராட்டினத்தில் அல்லது ரோலர் கோஸ்டரில் என்னை ஏற்றினாலும், அல்லது என்னைச் சுழற்றிச் சுற்றினாலும் . எந்த இடத்திலும் மயக்கம் ஏற்படாத நான் அன்றைக்குத் தள்ளாடினேன். ஏனென்றால், முன்னேற்பாடு இல்லாமல், உடனடியாக நான் சூத்திரம் உருவாக்க வேண்டியிருந்ததே இதற்குக் காரணம்.
 
அடிப்படையில் சூத்திரம் என்பது ஒரு தொடர்புக்கான ஊடகம். நாம் வேறு ஒரு பொருளைபயன்படுத்த முடியும் ஆனால் ஒரு நூல் எளிதானது என்பதுடன், தயார்செய்வதற்குக் கையடக்கமாகவும் இருக்கிறது. அது நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாகவும், போதுமானகாலம் நீடித்திருக்கவும் செய்கிறது. ஒருவர் ஆறுமாத காலம் சாதனாவில் இருக்கிறார் என்றால், அவருக்குக் குறிப்பிட்ட விதமான சூத்திரம் அணிவிக்கப்படும். ஒருவரை மூன்று வருட கால சாதனாவில் ஈடுபடுத்தினால், அவருக்கு வேறுவகையான சூத்திரம் அணிவிக்கப்படும் ஏனெனில் அது மூன்று வருடம் நீடிக்கவேண்டும். இல்லையெனில் ஒரு நூல் மட்டுமே போதுமான காலம் நீடிக்காது என்றால், நீண்டகாலம் நீடிக்குமாறு அதனுடன் வேறுசில பொருட்களை நாம் சேர்ப்போம்.

சூத்திரம் என்பது உடலை போன்று, பொருள் தன்மையான அடித்தளம் மட்டும்தான் – சக்தி என்பது வேறு. யோகத்தில், படைப்பின் தன்மையாக இருக்கின்ற உடலை ஒரு அடித்தளமாக மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். உங்கள் உடல்கூட ஒரு அடித்தளம் மட்டும்தான். அதுவே உண்மையான ஒன்று அல்ல. அந்த விதமாகத்தான் ஒட்டுமொத்த பிரபஞ்சம் உருவாக்கப்படுகிறது.. இருப்பினும், நவீன சமூகங்களில், முற்றிலும் பொருள் தன்மையான, சில அளவுகோள்களை நிர்ணயம் செய்துள்ளோம்,. அதனால் நாம் பிரபஞ்சம் முழுவதையும் பொருள் தன்மைக்குள் வரையறுக்க முயற்சிக்கிறோம்.

சிவன்எப்படிவீரபத்திரனைஉருவாக்கினார்

சிவன் ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தி, எப்படி ஒரு மனிதரை உருவாக்கினார் என்பதற்கு, யோக மரபில் ஒரு சம்பவம் உள்ளது. சிவனின் முதல் மனைவியாகிய சதியின் தந்தை தட்சண், ஒருமுறை வேள்வித் தீ வளர்த்து, யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். சதி அங்கு இருந்தார், ஆனால் சிவன் அங்கு இல்லை. இந்த யாகத்தின்போது தட்சன் சிவனை அவமதித்து பேசினார். அவமானத்தை தாங்க முடியாமல் சதி வேள்வித் தீக்குள் சென்றுவிட்டார். சதிக்கு அவர்கள் ஏற்படுத்திய அவமதிப்பின் காரணமாக, அவர் தன்னையே நெருப்புக்கு இரையாக்கியது சிவனுக்குத் தெரியவந்த போது, அவர் மிகுந்த கோபம் கொண்டு அவரது சடாமுடிகளுள் ஒன்றைப் பிடுங்கி ஒரு கல்லின் மீது ஓங்கி வீசியதில், வீரபத்ரன் என்ற ஒரு மறைஞான வீரன் உயிர்வரப் பெற்றான்.

சிவன் அவனைக் கட்டவிழ்த்துவிட்டார், அதனால் வீரபத்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று யாகத்தில் கலந்துகொண்டு சதியின் மரணத்தைத் தடுப்பதற்கு எதையும் செய்யாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெட்டி வீழ்த்தினான். சிவன், "என் மனைவி நெருப்பில் நடந்தாள். அதைத்தடுத்திருக்க வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை நீங்கள் அங்கு அமர்ந்து வேடிக்கைதான் பார்த்தீர்கள்" என்று கூறியதுடன் மேலும் அவர் தொடர்ந்துவராக, "நீங்கள் ஒவ்வொருவரும் இறக்கவேண்டும்," என்றார். வீரபத்ரனும் தட்சணை கழுவிலேற்றினான்.

பலவகையான சூத்திரங்கள்

சிவன் அவரது முடியைப் பயன்படுத்தி வீரபத்ரனை உருவாக்கினார். சூத்திரம் இயற்கையானதாக, அதன் தன்மை மாறாமல் இருந்து, மஞ்சள் மற்றும் ஈரப்பதத்துடன் இருந்தால், ஒரு சில நொடிகளில் அதை உங்கள் உடலின் ஒரு பகுதியாக உருவாக்கமுடியும். சூத்திரம் என்பது எதையும் ஒன்றாக இணைக்கும் ஒரு நூலாக இருக்கின்றது.

பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் ஒரு நூல் மட்டும்தான். இந்த நூலைக் கையாள்பவர்களின் திறனைப் பொறுத்து மண் (உருண்டைகள்) மணிகள், முத்துக்கள், வைரங்கள் அல்லது அவர்களின் உயிர் சக்தியை அதனுடன் இணைக்கலாம். ஒரு நூலுடன் பலவற்றைக்கோர்க்க முடியும். உடலின் எந்த பாகத்தின் மீது நூலைக்கட்ட வேண்டும் என்பதைப் பொறுத்து – உங்கள் இடை அல்லது கழுத்தை சுற்றிக் கட்டுவதாக இருக்கலாம் – அது வித்தியாசமாகவும், அதிக விரிவான முறையிலும் தயார்செய்யப்பட வேண்டும் கையை சுற்றிக்கட்டப்படும் சூத்திரம் மிக எளிமையானது, ஏனெனில் அது மிகவும் பிரத்யேகமான மற்றும் வரம்புக்குட்பட்ட நோக்கம் கொண்டது. அதற்குமேலும் விரிவான நோக்கம் இருந்தால், அதிக விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ஜடப்பொருட்களின் புத்திசாலித்தனம்

ஜடப்பொருட்கள் என்று அழைக்கப்படுபவை கூட ஒரு குறிப்பிட்ட முறையில் செயல்படுகின்றன. ஒரே மாதிரியான விதையை வெவ்வேறு இடங்களில் விதைத்தீர்கள் என்றால், மண்ணின் தரம், சூழல், மற்றும் எத்தனையோ பலகாரணங்களுக்கு ஏற்றாற்போல .அது வளர்ந்து, வித்தியாசமான பலன் அளிக்கிறது. மண் ஜடப்பொருளாக இருக்கலாம், ஆனால் அதற்கென்று குணாதிசயங்கள் உள்ளன. அது எப்படி செயல்பட விரும்புகிறதோ அப்படி செயல்படுகிறது.

ஜடப்பொருட்களுக்கு வேறொரு விதமான புத்திசாலித்தனம் இருக்கிறது. நவீன சமூகங்கள் புத்திசாலித்தனத்தை, காரண அறிவு மற்றும் சிந்திக்கும் திறன் என்றே புரிந்துகொள்கிறது. ஆனால் உண்மையில் சிந்திக்கும் திறன் மூலம் உங்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. உங்களது உடலில் இயற்கையாக என்ன நிகழ்கிறது என்பது சிந்தனைத் திறனுக்கும் அப்பாற்பட்டது, ஆனால் நாம் இந்த புத்திசாலித்தனத்தை அடையாளம் கண்டுகொள்வதில்லை. புத்திசாலித்தனம் என்றால் குறிப்பிட்ட விதமான என்ணங்கள் மட்டும்தான் என்று நாம் நினைத்துக்கொள்கிறோம்... சூத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயல்படும் வகையில், நம்மால் உருவாக்கக்கூடிய ஒரு புத்திசாலியானநூல்.

ஆசிரியர்குறிப்பு :

அபய சூத்திரம் - தேவி அபயசூத்திரம் என்பது பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு பருத்திநூல். அதனை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும்போது, அது ஒருவரின் பயத்தைப்போக்கவும், விருப்பங்களை நிறைவேற்றவும் உறுதுணையாக இருக்கும். பெண்கள் அதை இடது மணிக்கட்டிலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் அணிவார்கள். இதனை குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு அணிந்திருக்க வேண்டும். இதன் முடிச்சை அவிழ்ப்பதன் மூலம் அல்லது நெருப்பில் வாட்டுவதன் மூலம் அவிழ்க்கலாம். அதன்பிறகு ஈரமான மண்ணில் புதைத்து விடலாம் அல்லது அதனை எரித்து அந்த சாம்பலை தொண்டைக் குழியிலிருந்து கீழே நெஞ்சுக்குழி வரை பூசிக்கொள்ளலாம்.

சர்ப்ப சூத்திரம் - சுருண்ட பாம்பின் வடிவத்திலுள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட செம்பு மோதிரம், சர்ப்ப சூத்திரமாகும். ஓர் உலோக மோதிரத்தை, குறிப்பாக தாமிரத்தால் ஆன ஒன்றை மோதிர விரலில் அணிவதென்பது, உடலை உறுதிப்படுத்துகிறது. மேலும், ஒரு சாதகருக்கு சாதனாவிற்கான அல்லது ஆன்மீக செயல்முறைக்கான அடிப்படை ஆதரவை வழங்குகிறது. முறையான சாதனாவுடன் சர்ப்ப சூத்திரத்தை அணிவது, வாழ்க்கையின் சூட்சும பரிமாணங்களுக்கான ஒரு திறவுகோலாக மாறும்.