சத்குரு: காரைக்கால் அம்மையார் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? 700 வருஷத்துக்கு முன்னால் நீங்கள் வந்திருந்தால், ‘கோட்’ (மேல்சட்டை) எல்லாம் கிடையாது. Toyoto (டொயோடோ) கிடையாது. காட்மாண்டுவிற்கு பறந்து வர முடியாது. நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். காரைக்காலில் இருந்து அவர் அப்படியே நடந்து வந்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஏதோ கொஞ்சம் அரிசி, பருப்பு சேர்த்து, ஒரு மூட்டை கட்டி, சும்மா அப்படியே வந்தார்கள்.
நீங்கள் அப்படியே காரைக்காலில் இருந்து மணலில் நடந்து வரவேண்டும். (சிரிக்கிறார்கள்) எப்படி இருக்கும்? ம்... எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்க முடியுமா? அப்படியே சிவ, சிவ, சிவான்னு உச்சரித்துக்கொண்டே சும்மா நடந்தே வந்துவிட்டார்கள். கைலாயத்தை நெருங்கி வந்தப்பிறகு, அவருடைய உணர்வில், அந்த பூமியே சிவனுடைய உடல் மாதிரி அதிர்ந்தது.
கைலாய மலை, Kailash
கைலாய மலை, Kailash

காரைக்கால் அம்மையார் (Karaikal Ammaiyar in Tamil) தலையால் நடந்தது ஏன்?

ஐயோ, சிவன் உடல் மேல் எப்படி கால் வைப்பது என்று, அவர் தன் காலை தரையில் வைக்கவில்லை. இரண்டு கைகளையும், தலையையும் உபயோகித்து அப்படியே ஐம்பத்து ரெண்டு கிலோமீட்டர் நடந்தார். அதனால் காலணி (பூட்ஸ்) போட்டு நடக்க முடியவில்லை. கை மற்றும் தலையை உபயோகப்படுத்தி, இந்த அம்மா தனியாக வந்தார்களோ அல்லது யாரோ நான்கு பேருடன் சேர்ந்து வந்தார்களோ நமக்கு தெரியவில்லை. ஆனால் வெறும் கை, தலை உபயோகப்படுத்தி இந்த பிரதட்சணம் பண்ணினார்கள். ஏனென்றால், அந்த வளையமே சிவனின் உடல் மாதிரி அதிர்வு இருக்கின்றது. அந்தமாதிரி சக்தி அங்கு இருக்கின்றது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.