சத்குரு:

குருபூஜை என்பது வெறும் பூ, பழம், தேங்காயை அர்ப்பணிப்பது அல்ல - இது தெய்வீகத்தை நோக்கிய ஓர் அழைப்பு, அப்படிப்பட்ட அழைப்பை உருவாக்கும் ஒரு சூட்சுமமான முறை இது. தியானத்திற்கும் சடங்கிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. தியானம் என்பது முழுக்க முழுக்க உங்களது சொந்த விஷயம் - அது உங்களுக்கு மட்டுமானது. ஆனால் ஒரு சடங்கில் நாம் தீவிரமாக பங்கேற்கும் போது, அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு ஒரே விஷயத்தை அனுபவிக்க முடியும். ஒரு சடங்கை முறையாக செய்யும்போது, அது எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும் ஒரு உயிரோட்டமான, அற்புதமான கருவியாக இருக்க முடியும். ஒரு சடங்கை செய்வதற்கு நேர்மை, ஈடுபாடு மற்றும் அரவணைத்துக் கொள்ளும் தன்மை அவசியம். நேர்மையும், அரவணைத்துக் கொள்ளும் தன்மையும் இல்லாத சூழலில், மக்கள் அதை பல வழிகளில் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக சமூகத்தில் நேர்மையும் அரவணைக்கும் தன்மையும் குறைவாக இருப்பதால், இதில் பெரிய ஆபத்தும் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நான் எங்கிருந்தாலும் சரி, அங்கு வந்தாக வேண்டும் என்கிற விதத்தில் நீங்கள் குருபூஜையை செய்ய வேண்டும். அங்கு வருவதை தவிர எனக்கு வேறு வழியே இருக்கக்கூடாது.

குருபூஜை என்பது ஒரு கருவி, ஒரு குறிப்பிட்ட முறை. இது ஏதோ நன்றி சொல்லும் ஒரு சடங்கு அல்ல. ஆமாம், அதில் ஒருவிதமான நன்றி உணர்வு இருக்கிறதுதான், ஆனால் அது அதைப்பற்றியது மட்டுமே அல்ல. இயற்கையாகவே சில சக்திகளைத் தன்னை நோக்கி ஈர்க்கக்கூடிய, குறிப்பிட்ட ஒரு புனிதமான சக்தி வடிவ அமைப்பை (energy geometry) உருவாக்கும் ஒரு வழி இது. நான் எங்கிருந்தாலும் சரி, அங்கு வந்தாக வேண்டும் என்கிற விதத்தில் நீங்கள் குருபூஜையை செய்ய வேண்டும். அங்கு வருவதை தவிர எனக்கு வேறு வழியே இருக்கக்கூடாது. உங்களை நீங்களே தேர்வுகள் அற்றவராக ஆக்கிக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

மகாபாரதத்தில் நடந்த ஒரு மிக அழகான கதை

இது மகாபாரதத்தில் நடந்த ஒரு மிக அழகான கதை. ஒருநாள் கிருஷ்ணர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரின் மனைவி ருக்மணி பரிமாறிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் மொத்த உலகத்தின் பொறுப்பையும் தானே சுமந்து கொண்டு இருப்பதால், அவர் வீட்டிற்கு வருவதே மிக அபூர்வம். அவருக்கு அடிக்கடி உணவு பரிமாறும் வாய்ப்பு அவர் மனைவி ருக்மணிக்கே கிடைப்பதில்லை. அதனால் உணவு பரிமாறும் பாக்கியத்தை போற்றி மதித்தாள்.

பாதி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென கைகளை கூட சுத்தம் செய்து கொள்ளாமல் எழுந்து புறப்பட்டார். ருக்மணி “தயவுசெய்து, உணவை முழுவதும் சாப்பிட்ட பின் போகலாம்” என்றாள். அதற்கு கிருஷ்ணர் “வேண்டாம், என்னுடைய பக்தருக்கு பிரச்சனை. நான் போக வேண்டும்” என்று சொன்னார். கதவு வரை சென்ற கிருஷ்ணர், ஒரு கணம் அங்கே நின்றார். திரும்பி வந்து உட்கார்ந்து உணவை சாப்பிடத் துவங்கினார். ருக்மணி கேட்டாள், “உங்கள் பக்தருக்கு என்ன ஆச்சு?” அவர் சொன்னார், “அவன் காட்டில் உட்கார்ந்து கொண்டு என் பெயரை மந்திரமாக சொல்லியபோது, நல்ல பசியில் இருந்த ஒரு புலி அவனை நெருங்கியது. இவன் முழுமையான ஈடுபாட்டுடன் தன்னுள் முழுமையாக மூழ்கி கிருஷ்ணரை அழைத்துக் கொண்டிருந்ததை கிருஷ்ணர் பார்த்தார். அதனால், புலி நெருங்கியதும், உடனடியாக கிருஷ்ணர் எழுந்து புறப்பட்டார்.

அவர் தொடர்ந்து சொன்னார், “நான் வாசல் வரை போன போது, அந்த முட்டாள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கல்லை எடுத்துக்கொண்டான். அதனால் அவனே அவனை காப்பாற்றி கொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்” என்றார். இது தான் சுயமாக தேர்ந்தெடுக்க முடியாமல் இருப்பதன் சக்தி. இதுதான் தேர்வுகள் அற்ற தன்மையின் சக்தி.

குருபூஜையை எவ்விதத்தில் செய்ய வேண்டும்?

குருபூஜை என்பது உங்களை நீங்களே முழுமையாகத் தேர்வுகள் அற்றவராக ஆக்கிக்கொள்வதற்கான ஒரு கருவி. இந்தச் சடங்குகள் எல்லாமே அதுதான் - நீங்கள் உங்களை ஒரு செயலுக்கு அர்ப்பணித்துக்கொண்டு, துளியும் தேர்வுகள் அற்றவராக ஆக்கிக்கொள்கிறீர்கள். நீங்கள் அப்படி இருக்கும்போது, குருவுக்கு கூட எந்த தேர்வும் இருக்காது. தெய்வீகத்திற்குக் கூட உங்களைத் தவிர வேறு வழியில்லை என்ற விதத்தில் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இதிலிருந்துதான், பல யோகிகளும் வேறுவேறு விதங்களில் இப்படிச் சொன்னார்கள், "எனக்குத் துணையாக இருப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் தேர்வு சிவனுக்குக் கிடையாது." எனக்கு வேண்டுமானால் அவரை இழப்பதற்கான தேர்வு இருக்கிறது, ஆனால் அவருக்கு எந்தத் தேர்வும் இல்லை. நீங்கள் எப்போதும் அவரை அப்படித்தான் வைத்திருக்க வேண்டும், ஏனென்றால் எந்த முட்டாளாவது தெய்வீகத்தை இழப்பதை ஒரு தேர்வாக நினைப்பானா என்ன? மூளையில் ஒரேயொரு செல் மட்டுமே இருப்பவன்தான் அப்படி நினைப்பான். உங்களுக்கு மூளையில் இரண்டு செல்கள் இருந்தால்கூட, அவரை ஒரு துணையாக இழப்பது என்பது நிஜமாகவே ஒரு தேர்வு அல்ல - அது சுத்த முட்டாள்தனம் என்பதை நீங்கள் தெளிவாகப் பார்ப்பீர்கள்.

குருபூஜை அப்படிப்பட்ட ஒரு கருவிதான். நீங்கள் அதை எந்த விதமாக செய்ய வேண்டும் என்றால், அந்த அழைப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் - அவருக்கு வேறு வழியே இருக்கக்கூடாது. அவர் அங்கு இருந்தாக வேண்டும். நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களில் கூட இதுபோன்ற சக்தியை நீங்கள் உருவாக்கினால், சாதனாவின் பலன் பல மடங்காக பெருகும்.

குறிப்பு:

குருபூஜை வகுப்பு பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.