கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளெங்கும் பரவிவருவதால், உலகம் இந்த வைரஸை கையாள்வதில் திணறிவருவதோடு அதன் பரவலை நிறுத்த பெரிதும் முயற்சித்து வருகிறது. வலிமையான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளவர்களால் கொரோனா வைரஸ் தாக்கத்தை சிறப்பாக கையாள முடியும் என்பதை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இயற்கையாகவே குறிப்பிட்ட காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகளை சத்குரு நம்முடன் பகிர்கிறார்.

சத்குரு: வைரஸ்கள் நம் வாழ்வில் குறுக்கிடுவது என்பது ஒன்றும் புதிதல்ல. நாம் உண்மையில் கடலளவுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களினுள்தான் வாழ்கிறோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த குறிப்பிட்ட வைரஸ் நம் உடலமைப்புக்கு புதியது, எனவே நம் உடல் அதனுடன் போராடுகின்றது. நாம் தேவையான நோயெதிர்ப்பை உருவாக்கி அதைக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருக்க முடியும். இதற்காக நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. இவை கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்து என்று அர்த்தமல்ல, ஆனால் இந்த எளிய விஷயங்களை கடைபிடிக்க முடிந்தால், ஆறு முதல் எட்டு வார காலத்திற்குள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியானது சில சதவீதங்கள் அதிகமாக இருக்கும். உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்காமல் இந்த சூழ்நிலையை நீங்கள் கடந்துசெல்ல வேண்டிய வழி இதுதான்.

1. வேம்பு

நீங்கள் ஒவ்வொரு நாளும் காலை சாதனாவிற்கு முன்னதாக, வெறும் வயிற்றில் எட்டு முதல் பத்து வேப்பிலைகளை வாயில் போட்டு, அதனை மென்றபடி வாயில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வாயில் அதனைத் தொடர்ந்து வைத்திருப்பது நல்ல பலனளிக்கும் என்பதால், அது மிகவும் முக்கியமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை வாயில் மென்றபடி வைத்திருங்கள். அதை கழுவவோ அல்லது விழுங்கவோ வேண்டாம், அது வாயில் இருக்கட்டும். அதனுடனே உங்கள் சாதனாவைச் செய்யுங்கள்.

2. மஞ்சள்

தினமும் காலையில் மஞ்சளை உட்கொள்ளுங்கள். நீங்கள் வேறெதையும் சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தது ஒரு மணிநேரம் வயிற்றில் மஞ்சள் இருக்க அனுமதிக்கவும். இது உங்களுக்கு அதிசயங்களை நிகழ்த்தும். ஆர்கானிக் மஞ்சளாக இருந்தால் நல்லது.

3. மஹா வில்வ இலைகள்

raw mango health benefits

மேற்குத் தொடர்ச்சி மலையில் மஹா வில்வ இலைகள் கிடைக்கின்றன. நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து இலைகளை காலையில் சாப்பிட்டால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

4. நிலவேம்பு கஷாயம்

ஈஷா யோக மையம் சார்பாக தொண்டாமுத்தூர் பகுதி பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட கிராமப்புற மக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் தயாரித்து, விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இந்த பகுதிகளில் எந்தவொரு பாசிட்டிவ் நோயாளியும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சமூக விலகலை சிறப்பாக கடைபிடிப்பதும், அன்றாடம் வழங்கப்படும் நிலவேம்பு குடிநீருமே காரணம் என நாம் அறிகிறோம்.

சக்தி வாய்ந்த ஒன்பது மூலிகைகளின் சாறு கொண்டு தயாரிக்கப்படுகின்ற நிலவேம்பு கஷாயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது.

உங்களுடைய உள்ளூர் சித்த மருந்துக் கடை அல்லது ஆயுர்வேத மருந்துக் கடையில் இது வில்லைகளாகவும் பொடியாகவும் நிச்சயமாகக் கிடைக்கும். ஆன்லைனில் ஈஷா ஷாப்பி மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

5. சூடான பானங்கள்

ஒரு நாளைக்கு நான்கைந்து முறை சூடான நீரைக் குடிக்கவும். இது வெறும் சூடான நீராக இருக்கலாம் அல்லது நீங்கள் அதில் சிறிது கொத்தமல்லி அல்லது புதினாவை சேர்க்கலாம் அல்லது ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது சிறிது எலுமிச்சை சாறு கூட சேர்த்து, அதை குடிப்பதை வழக்கமாக்கலாம்.

வைரஸ் தொற்றுகளைத் தவிர்ப்பதற்கு உதவும் 4 நோய் எதிர்ப்பு ஆற்றல் பானங்கள்

6. இந்திய நெல்லிக்காய்

இது நெல்லிக்காய் சீசன்… கன்னட மக்களுக்கு பெட்டாட் நல்லிகாய் என்றால் தெரியும். இது மிகப்பெரிய கோல்ஃப் பந்து அளவிலான நெல்லிகாய் அல்ல. அதெல்லாம் கலப்பின நெல்லிக்காய்கள்தான், வேறு எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் அது பரவாயில்லை! மற்றபடி, மலைகளில் வளரும் சிறிய அளவிலான நெல்லிக்காய் நல்லது. நீங்கள் ஒரு நெல்லிக்காயை இடித்து, அதில் சிறிது உப்பு போட்டு வாயில் மெல்லுங்கள். ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை அதை உங்கள் வாயில் வைத்திருக்க வேண்டும், ஏனெனில் அது அங்கு மிகவும் சிறப்பான விதத்தில் செயல்படுகிறது.

7. நெல்லிக்காயுடன் தேன் மற்றும் மிளகு

நெல்லிக்காயுடன் கருப்பு மிளகு அல்லது பச்சை மிளகை லேசாக உடைத்து முந்தைய நாள் இரவே தேனில் ஊற வைக்கவும். ஒருநாளைக்கு மூன்று முறை மூன்று ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். நீங்கள் வெறும் வயிற்றில் இதனை சாப்பிடுவது நல்ல பலனை தரும். நீங்கள் இதைச் செய்தால், நான்கு முதல் எட்டு வாரங்களில், உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம்.

8. பச்சை மாங்காய்

இது மாம்பழ சீஸனின் தொடக்கமாகும். மாம்பழங்கள் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டாம், மாங்காய்களை அப்படியே சாப்பிடுங்கள். இது கொரோனா வைரஸுக்கு ஒரு தடுப்பு மருந்து அல்ல, ஆனால் இது நோயெதிர்ப்பு சக்தியை சிறிது அதிகரிக்கும்.

9. பாரம்பரிய லேகியங்கள்

ஜீவ லேகியம் அல்லது சவன்ப்ராஷ் போன்ற பாரம்பரிய லேகியங்கள் நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக கட்டமைக்கின்றன. உங்கள் வீட்டில் வயதானவர்கள் அல்லது அறுபது வயதைத் தாண்டியவர்கள் இருந்தால், அவர்கள் சவன்ப்ராஷ் எடுத்துக்கொள்வது நல்லது.

10. கவசம்

கவசம் என்று அழைக்கப்படும் ஒன்றை நாம் உருவாக்குகிறோம். இது ரச வைத்தியம் அல்லது இந்திய ரசவாதத்தின் விஞ்ஞானத்தைக் கொண்டு செய்யப்படுகிறது. மேலும், இதை உங்கள் கை மணிக்கட்டில் அணியும் வகையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செய்யப்படுகிறது. அவை வெவ்வேறு அளவுகளிலும் வருகின்றன, எனவே நீங்கள் விரும்பினால், அதை உங்கள் கணுக்காலுக்கு மேல் தசையிலும் அணியலாம். இது நிச்சயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு புனிதமான விஷயமாகும்.

ஈஷா லைஃபில் விரைவில் வரவிருக்கிறது!

11. பிருத்வி ப்ரேம சேவா

பெரும்பாலான மக்கள் இறந்த பிறகுதான் மண்ணுடன் ஒரு தொடர்பை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், நீங்கள் உயிருடன் இருக்கும்போதே மண்ணுடன் ஒரு தொடர்பை வளர்ப்பதென்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, இப்போது இந்த வைரஸ் நம்மைச் சுற்றியிருக்கும்போது. இதனை நாம் பிருத்வி ப்ரேமா சேவா என்று அழைக்கிறோம். அதாவது மண்ணுடன் மிகவும் அன்பான விதத்தில் ஈடுபாடுகொள்வது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் இந்த வகையான தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கான உங்கள் திறன் பெரிதும் மேம்படும். நீங்கள் உயிருடன் இருந்தால் மட்டும் போதாது; நீங்கள் உறுதியுடன் வாழ்வது முக்கியம்.

உங்களிடம் ஒரு சிறிய தோட்டம் இருந்தால் நீங்கள் அங்கு இதனைச் செய்யலாம் அல்லது வேறொருவரின் தோட்டத்தில் தன்னார்வத் தொண்டு செய்யலாம். அவர்கள் இலவசமாக உழைப்பைப் பெறுவார்கள். ஆனால், அவர்கள் அதிகமாகப் பெறுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்; நீங்கள் மண்ணுடன் சிறப்பாக இணைந்திருப்பதால் உங்கள் உடல் செயல்படும் விதத்தில் ஒரு பிரமாதனான மாற்றத்தை ஏற்படுத்தும். ஒவ்வொருவரும் இதை எங்காவது பயன்படுத்த வேண்டும் - குறைந்தபட்சம் தெருக்களை சுத்தம் செய்யுங்கள் அல்லது மண்ணுடன் ஏதாவது செய்யுங்கள்! உங்கள் கைகளை மண்ணில் போடுவது மிகவும் முக்கியமானது. ஒருவேளை நீங்கள் மண்ணில் பணியாற்றுவதை யாரேனும் பார்ப்பது உங்கள் மீதான தவறான பிம்பத்தை உருவாக்கும் என நீங்கள் நினைத்தால், ஒரு மண் குளியல் செய்யலாம்! ஆம், அதுவும் ஒரு வழிதான்.

12. உடலில் உஷ்ணத்தை உருவாக்க மந்திர உச்சாடனம்

“யோக யோக யோகேஷ்வரயா” மந்திரம் என்பது சமத் பிராணன் அல்லது உஷ்னாவை உடலமைப்பில் உருவாக்குகிறது. உஷ்னா மற்றும் ஷீத்தா என்று குறிப்பிட்ட தன்மைகள் உள்ளன, இது ஆங்கில மொழியில் வெப்பம் மற்றும் குளிர்ச்சி என மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால், அது துல்லியமான அர்த்தமல்ல. அது ஓரளவிற்கு பொருள் தந்தாலும், அது துல்லியமான அர்த்தமல்ல. நீங்கள் போதுமான சமத் பிராணனை உருவாக்கி, உடலமைப்பில் உஷ்னாவை உருவாக்கினால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சிறப்பாக செயல்படும். இந்த மந்திரம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வலிமையை உருவாக்கும், ஏனெனில் இது வெப்பத்தை உருவாக்குகிறது.

சாதனாவை பெறுவதற்கான லிங்க் இங்கே

இது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையல்ல, இது ஒரு தடுப்பும் மருந்தும் அல்ல. "நான் மந்திரத்தை உச்சாடனம் செய்தேன், அதனால் நான் சென்று பொறுப்பற்ற காரியங்களைச் செய்ய முடியும்" – என்று நினைத்தால் அது அப்படி வேலை செய்யப் போவதில்லை. உங்கள் உடலமைப்பை வலுப்படுத்த நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு செய்யக் கூடிய விஷயம் இது. இதன்மூலம் அடுத்த வைரஸ் வரும்போது, அதைக் கையாள நீங்கள் இன்னும் கொஞ்சம் மேம்ப்பட்ட விதத்தில் இருக்கலாம்.

13. “ஈஷா கிரியா” பயிற்சி செய்யுங்கள்

நாம் செய்துள்ள அடிப்படை தவறு என்னவென்றால், “நான்” என்பதற்கும் “என்னுடையது” என்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நினைப்பது. நான் சேகரிப்பது என்னுடையது, நாம் இப்போது அதை மறுக்கவில்லை, ஆனால், அது நானாக இருக்க முடியாது. இந்த ஆடை தான் "நான்" என்று சொன்னால், எனக்கு ஏதோ நேர்ந்து விட்டதாக அர்த்தப்படும். இதேபோல், இந்த உடலும், நான் வெளியில் இருந்து சேகரித்த இந்த மனதின் உள்ளடக்கங்களும் - எனக்குத் தெரிந்தவை, தெரியாதவை என எல்லாமே நானே என்று சொன்னால், அதில் பிரச்சினை இருக்கிறது. இதுதான், தினசரி உங்கள் வாழ்க்கையை அழிக்கிறது. ஆனால், இதுபோன்ற நெருக்கடி தருணங்களில், இது ஒரு கூடுதல் வலிமையுடன் வெளிப்படலாம். இதற்காக நம்மிடம் ஒரு எளிய தீர்வு உள்ளது: ஈஷா கிரியா, எது நீங்கள், நீங்கள் இல்லை என்பதை பிரிக்கும் எளிய வழி. அனைவருக்கும் இது இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. எது நான், எது நான் இல்லை என்பதை நீங்கள் உங்கள் விழிப்புணர்வில் கொண்டுவந்தால், இதுபோன்ற சவாலான தருணங்களை எதிர்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

14. சிம்ம க்ரியா பயிற்சி

சிம்ம க்ரியா என்பது ஒரு எளிய யோகப் பயிற்சி. இது சக்தி சலனா க்ரியா போன்ற வேறெந்த சக்திவாய்ந்த பயிற்சியையும் செய்யாதவர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். சிம்ம க்ரியா நுரையீரல் திறனை மேம்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு நீங்கள் இதை பயிற்சி செய்ய முடிந்தால், அப்போது திடீரென்று ஒரு நாள் உங்களால் அதைச் செய்ய முடியவில்லை என்றால், உங்களுக்கு நிச்சயமாக சில சுவாசப் பிரச்சினைகள் உள்ளது என்று பொருள். இதற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்க வேண்டியதில்லை, அதற்கு வேறு காரணம் கூட இருக்கலாம். உங்களால் அதைச் செய்ய முடியவில்லையென திடீரென்று உணர்ந்தால், நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

15. சாதனாவை தொடர்ந்து செய்யுங்கள்

நாம் உண்மையில் அறிந்த ஒரே விஷயம் என்னவென்றால், இந்த COVID-19 பாதித்தால் சிறப்பான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் உயிர்வாழ்வார்கள், நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த வைரஸைப் பற்றி வேறு எதுவும் நமக்குத் தெரியாது. அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், உங்கள் யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தி மிக சிறப்பாக இருப்பதை உறுதிசெய்யும். இண்டியானா பல்கலைக்கழகம், வர்ஜீனியா பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவப் பள்ளி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஈஷா யோகா பயிற்சிகள் குறித்து ஆய்வுகள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஈஷா யோகா பயிற்சி செய்பவர்களுக்கு அழற்சி, BDNF மற்றும் பிற நிலைகளில் நோயெதிர்ப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதை ஆராய்ச்சி முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. அனைவரும் பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

16. போதுமான உடல் பயிற்சி செய்யுங்கள்

இப்போது மக்கள் வீட்டிலே இருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே உட்கார்ந்து கொண்டு, நாள்முழுவதும் எதையாவது சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ, அவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஒரு எளிய விஷயம் என்னவென்றால், உடலை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருப்பதாகும். இந்த சில வாரங்களை இதற்காகப் பயன்படுத்தி உடலை திறனுடன் வைத்துக்கொள்ள ஒரு நல்ல தருணம் இது. உங்களுக்கு வேறு எதுவும் தெரியாவிட்டால், இருக்கும் இடத்திலேயே ஒரு பதினைந்து நிமிடங்கள் ஜாகிங் செய்யலாம், இதை ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு முறை செய்யலாம் - இவ்வாறு செய்தால் உடலானது சிறப்பாக செயல்படும்.

17. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்

மன உளைச்சல் நிச்சயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும். முழுமையான உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும், இருப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் உடலையும் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான எளிய வழியாகும்.

ஒரு மகிழ்ச்சியான, விவேகமான மற்றும் பொறுப்பான மனிதர் எல்லாவற்றையும் பற்றி மிகவும் சீரியஸாக சிந்திப்பவர்களை விட சூழ்நிலைகளை மிகச் சிறப்பாக கையாள முடியும். குறிப்பாக நீங்கள் பயத்தில் இருந்தால், நீங்கள் முடங்கிப் போகிறீர்கள். உங்கள் உடல் மற்றும் உங்கள் மூளை செயல்படுவது, தேவையான விதத்தில் பதிலளிப்பது என உங்கள் அனைத்து திறன்களும் சரியான நிலையில் இருப்பது மிகவும் முக்கியம்.