இப்படி சாக்லேட் சாப்பிடுவது நல்லது! (Chocolate Benefits in Tamil)
சாக்லேட் என்றதும் நம் உணர்வில் ஒரு இனிப்பு வந்துவிடுகிறது. குழந்தைகளுக்கோ குதூகலம் தொற்றிக்கொள்கிறது. ஆனால், சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் பலவித ஆரோக்கிய குறைபாடுகள் வரும் என்ற ஒரு அச்சத்தில் நம்மில் பலரும் அதனைத் தவிர்த்துவரும் நிலையில், சாக்லேட் பற்றி சத்குரு வெளிப்படுத்தும் இந்த பார்வை, நம் கண்ணோட்டத்தை மாற்றுவதாக உள்ளது.
Subscribe
சங்கரன்பிள்ளை இதைப் பார்த்தார். வாவ்! மூன்று வரமா? அதனால் கேட்டார், "எனக்கு ஒரு சிவப்பு கலர் ஃபெராரி கார் வேண்டும்." உடனே அந்த மணல்மீது சிவப்பு நிறத்தில் பளபளக்கின்ற ஒரு ஃபெராரி கார் நின்றது. அந்த பூதம், "கேள் கேள், இரண்டாவது கேள்" என்று சொன்னது. சங்கரன்பிள்ளை, "எனக்கு 10 மில்லியன் டாலர் பணம் வேண்டும் என்றார். உடனே 10 மில்லியன் புத்தம் புதிய டாலர் நோட்டுகள் ஃபெராரி பின்சீட்டில் வந்துவிட்டது. அந்த பூதம், "கேள், மூன்றாவது என்ன?" என்று கேட்டது. சங்கரன்பிள்ளை, "பெண்கள் தவிர்க்க முடியாமல் என்னை விரும்புவது போல நான் ஆகவேண்டும்" என்று சொன்னார். உடனே சங்கரன்பிள்ளை ஒரு சாக்லேட் டப்பாவாக மாறிவிட்டார். அதனால், அது உங்களுக்கு அவ்வளவு பிரியமானதாக இருப்பதால், அதற்கு பங்கம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை.
சாக்லேட் ஏன் பிரச்சனையாகிறது?
நான் சாக்லேட்டால் ஆனவன், நான் உங்களுக்கு டார்க் சாக்லேட் போன்று தெரியவில்லையா? சாக்லேட், அதுவே தீங்கு விளைவிக்கக் கூடியது இல்லை. துரதிருஷ்டவசமாக நீங்கள் அதோடு அளவுக்கு அதிகமாக சர்க்கரையை எடுத்துக்கொள்கிறீர்கள், அதனால்தான் அது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு இவ்வளவு பிரச்சனை வருவது, அவர்கள் அதிகமாக எடுத்துக்கொள்கின்ற சர்க்கரையினால்தான்.
சர்க்கரை குறைவான சாக்லேட்
நீங்கள் வெறும் சாக்லேட்டை சாப்பிட்டால், அது ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகிறது, அது மிக வினோதமான வகையில் தூண்டுதலை ஏற்படுத்துகின்ற ஒரு உணவுப்பொருள். அதனால் நன்மைகள் இருக்கிறது. உங்கள் மூளை அதனால் நன்றாக வேலை செய்யலாம், உண்மைதான். நீங்கள் கொக்கோ எடுத்துக்கொண்டால் உங்கள் மூளை இன்னும் கொஞ்சம் நன்றாக வேலை செய்யும். இவ்வளவு சர்க்கரையோடு சாப்பிடும்போது இல்லை. சர்க்கரை எல்லாவற்றையும் கெடுத்துவிடுகிறது.
நீங்கள் வெறும் கொக்கோ எடுத்துக்கொண்டால், நீங்கள் கொக்கோ விதைகளை மென்று சாப்பிட்டால், அதன் சுவை புரிந்துவிட்டது என்றால், அது நன்றாக இருக்கும். அந்த சாக்லேட் கொக்கோ விதைகளை நீங்கள் சாப்பிட்டால், அது மிக மிக நல்லது.
மிளகும் கொக்கோவும்
மிளகு... கருப்பு மிளகிற்கும், கொக்கோ விதைகளுக்கும் ஒரே மாதிரியான குணம் இருக்கிறது. இந்தியாவில் தேனையும் குறுமிளகையும் கலந்து பலவிதமான பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவோம். மக்களுடைய பல பிரச்சனைகளுக்கு இதை பயன்படுத்தினால், அற்புதமான பலன்களை தரும்.
கொக்கோவிற்கும், அந்த காட்டம் இல்லாமல் அதேபோன்று ஒரு தன்மை உண்டு. 100% சாக்லேட்டும் கிடைக்கிறது. ஆனால் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால், இது கசக்கும். நீங்கள் சர்க்கரை இல்லாமல் சாப்பிட முடிந்தால் நல்லது. இல்லையென்றால், மிகக் குறைவான சர்க்கரையோடு என்றால் பரவாயில்லை. ஆனால், பொதுவாக கடையில் கிடைக்கின்ற சாக்லேட்டில் சர்க்கரை மிக அதிகம்.