சத்குரு: இந்திய பின்னணியில் இருந்து வரும் மக்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும். இவரைப் பற்றிய வரலாற்று அம்சங்களுக்குள் நான் போகவில்லை. 

சத்ரபதி சிவாஜியின் புகழ்

ஒரு ராஜா இருந்தார். அவருடைய பெயர் சத்ரபதி சிவாஜி மஹராஜ். சிவாஜி ஒரு பெரிய ராஜா, மஹாராஜா. அவர் மக்கள் மத்தியில் ரொம்பவே மரியாதையை சம்பாதித்திருந்தார். அவருடைய நிர்வாகத்திறன், அவருடைய வீரம், அவருடைய தைரியம், அதோடு அந்த காலத்தில் அவருடைய போர் உத்தி, இதற்காக அவர் மிகவும் மதிக்கப்பட்டார். குறிப்பாக மகாராஷ்டிர மக்களால் மதிக்கப்பட்டார். 

பொதுவாக மக்களுக்கு அவருடைய போர் உத்திகளைப் பற்றி தான் தெரியும். அதைப் போற்றி பாராட்டுவார்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம் அவருடைய நிர்வாகத்திறன் தான்.

சிவாஜி இன்றைக்கும் நமக்கு மதிப்பானவர். ஏனென்றால் அவர் அரசாண்ட விதம் அப்படி. மிக முதிர்ந்த ஞானம் மிகுந்த நிர்வாகமாக நடத்தினார். அவருடைய நிர்வாகத்திறன் பற்றி குறைவான மக்களுக்குத்தான் தெரியும். பொதுவாக மக்களுக்கு அவருடைய போர் உத்திகளைப் பற்றி தான் தெரியும். அதைப் போற்றி பாராட்டுவார்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம் அவருடைய நிர்வாகத்திறன் தான். மிகவும் மேன்மையான ஒரு நிர்வாக முறையை தன் ராஜ்ஜியத்தில் செயல்படுத்தினார். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பிச்சை எடுத்துவந்த சிவாஜியின் குரு… 

சத்ரபதி சிவாஜி, Chhatrapati Shivaji in Tamil

அவருக்கு ராமதாஸ் என்கிற குரு இருந்தார். ஒருநாள் சிவாஜி தன்னுடைய அரண்மனையுடைய மாடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர், தன்னுடைய குரு வீடுவீடாக பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பிச்சை எடுப்பதைப் பார்த்தார். அப்போது அவர் நினைத்தார், "என்னுடைய குரு எதற்காக வீதிவீதியாக பிச்சை எடுக்கிறார்?" நான் ஒரு ராஜா. என்னுடைய குரு வீதியில் பிச்சை எடுக்கக்கூடாது. அவர் வேறுமாதிரி இருக்க வேண்டும். அவர் தன்னுடைய உதவியாளரான பாலாஜியை அழைத்து, ஒரு ஓலையை எழுதி அனுப்பினார். இதை என்னுடைய குருவுடைய காலடியில் வைத்துவிட்டு வா. அவரும் அதை எடுத்து போய் குருவுடைய காலடியில் வைத்தார். ராமதாஸ் அதை கையில் எடுத்துப் பார்த்தார், பார்த்ததும் புன்னகைத்தார்.

மறுநாள் அவர் அரண்மனைக்கு வந்தார். அந்த ஓலையில் சிவாஜி இப்படி எழுதியிருந்தார். “என்னுடைய ராஜ்ஜியம் முழுவதையும் உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னுடைய ராஜ்ஜியத்தையும் என்னையும் வைத்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.”

சிவாஜியின் கைகளில் பிச்சைப் பாத்திரம்

சத்ரபதி சிவாஜி, Chhatrapati Shivaji in Tamil

ராமதாஸ் கேட்டார், "இப்போது உன்னுடைய ராஜ்ஜியத்தையே விட்டுவிட்டாய். என்னிடம் கொடுத்துவிட்டாய். இப்போது என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறாய்? அதற்கு சிவாஜி சொன்னார்,

"சத்குருவே நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். நீங்கள் என்னுடைய சத்குரு. நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன். நான் விரும்புவதெல்லாம், உங்களிடம் இருந்து உங்களுக்கு சேவை செய்ய வேண்டும், அவ்வளவுதான் எனக்கு வேண்டும்." 

அப்போது ராமதாஸிடம் இன்னும் ஒரு பிச்சை பாத்திரம் இருந்தது. அவர் இதை எடுத்துக்கொள் என்றார். இருவரும் வீதிவீதியாக பிச்சை எடுத்தார்கள். அரசரும் குருவும் போனார்கள். மக்கள், குரு அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, ஏதோ பிச்சைக்காரர் என்று நினைத்து, ஏதோ வழக்கமாக கொடுப்பதைக் கொடுத்தார்கள். இப்போது அரசரே வந்திருக்கிறார், அவருக்கு பெரிய மரியாதையோடு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்தார்கள். 

இந்தக் காலத்தில்தான் பிச்சைக்காரர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு சமைத்த உணவு, மிச்சமான உணவு என்று எல்லாவற்றையும் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தக் கலாச்சாரத்தில், அந்தக் காலத்தில் அப்படி செய்யவே மாட்டார்கள். அவர்கள் சமையல் பொருட்களைத்தான் கொடுப்பார்கள். அரிசி, பருப்பு இதுபோல. அதை வைத்து அவர்கள்தான் உணவை சமைத்து சாப்பிட வேண்டும்.

சத்ரபதி சிவாஜியின் காவிக்கொடியின் பின்னணி

சத்ரபதி சிவாஜி, Chhatrapati Shivaji in Tamil

தங்களுடைய பிச்சை எடுக்கின்ற நேரம் முடிந்ததும், அவர்கள் ஆற்றங்கரைக்கு போனார்கள். அங்கே குரு அன்றைக்கு கிடைத்த உணவுப் பொருட்களை வைத்து ஏதோ எளிமையான உணவை சமைத்தார். அவர் சாப்பிட்டு முடித்த பிறகு மிச்சம் இருந்ததை, அரசர் சிவாஜி, அப்போது அவர் ராஜா இல்லை, அவர் சாப்பிட்டார். பிறகு அவர்கள் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இருந்தார்கள்.

சிவாஜி புன்னகையோடு, "வெறும் 24 மணி நேரத்தில் என்னை பிச்சைக்காரனாக மாற்றிவிட்டீர்கள். என்னை இன்னும் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.

அதற்கு ராமதாஸ் சொன்னார், அதற்கு 'கிரோ' என்று பெயர். அப்படியென்றால் ஒரு சிறிய காவித் துணி. அவர், தான் அணிந்திருந்த அந்த காவித் துணியை எடுத்து அதை சிவாஜியிடம் கொடுத்து, "இதை உன்னுடைய கொடியாக பயன்படுத்தி ராஜ்ஜியத்திற்கு திரும்பிப் போய் ஆட்சி செய். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது உன்னுடைய ராஜ்ஜியம் இல்லை. அது உன்னுடையது கிடையாது. அது உனக்கு சொந்தமில்லை என்று தெரிந்திருந்தால், உன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக மக்களுக்கு செயலாற்றுவாய். அப்படித்தான் நீ ஆட்சி செய்ய வேண்டும்" என்றார்.

அதனால் சிவாஜி எப்போதும் காவித் துணியை அல்லது காவிநிற கொடியை தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகுந்த ஞானத்தோடு முடிந்த அளவு சிறப்பாக நிர்வகித்தார்.

அருளோடு வாழ்வதன் முக்கியத்துவம்

நான் ஏன் இந்த கதையை உங்களுக்கு சொல்கிறேன் என்றால், சிவாஜி மக்கள் மனதில் உயர்ந்தார். இந்த நாட்டு மக்களுடைய இதயத்திலும் மனதிலும் வாழ்கிறார். ஏனென்றால் அவர் அருளோடு வாழ்ந்தார். அவர் பல போர்கள் புரிந்தார், ஆனால் முழு சமநிலையோடு இருந்தார். கோபப்படவில்லை, வெறுப்பாக இல்லை, எதிலும் தொலையவில்லை. என்ன தேவையோ அதை அப்படியே செய்தார்.

அருள்தான் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பெரிய சக்தி. எப்போது அருள் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைகிறதோ, அப்போது சிறு சிறு விஷயமும் வேறுமாதிரி ஆகிவிடும். நான் எப்படி அருளை பெறக்கூடியவராக ஆவது? அருள் என்றால் எங்கிருந்தோ, ஏதோவொரு திசையில் இருந்து வருவது என்று இல்லை. புவியீர்ப்பு சக்தி இருப்பது போலவே, அருளும் இருக்கிறது. ஆனால் இன்னும் பெரிய பரிமாணத்தில் இருக்கிறது. ஏனென்றால், புவியீர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தான் வேலை செய்யும். அருள் படைத்தலுக்கு அடிப்படையாக இருக்கிறது. ஆனால் உங்கள் தனிப்பட்ட தன்மையுடைய திடமான சுவர்கள் இருந்தது என்றால், நீங்கள் அருள்பெற திறந்தவராக இருக்கமாட்டீர்கள். நீங்கள் பற்று இல்லாத நிலைக்கு வந்தால், மெதுவாக உங்கள் சுவர்கள் கரைந்துபோகும். அப்போது அருள் பெருகும். உங்களிடம் இருக்கின்ற அனைத்தும் அருளைப் பெருக்கும்.