தமிழ்நாட்டில் அப்பூதியடிகள் என்று ஒரு பக்தர் இருந்தார். அவருக்கு நேரடியாக சிவனை தெரியாததால், சிவனுடைய ஒரு பக்தரை வழிபட ஆரம்பித்தார். திருநாவுக்கரசர் சிவனுடைய மிகப்பெரிய பக்தர். அதனால், செல்வந்தராக இருந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை சிவனுடைய உருவமாக பாவித்து வழிபட ஆரம்பித்தார்.

எல்லாவற்றுக்கும் திருநாவுக்கரசர் பெயர் வைத்த அப்பூதியடிகள்!

அவர் நிறைய தான தர்மங்கள் செய்தார். எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசரின் பெயரை வைத்தார். கிராமத்தில் ஒரு குடிநீர் தொட்டி கட்டினார், அதற்கும் திருநாவுக்கரசர் பெயர். கவனிப்பாரற்ற பசுக்களுக்கு மாட்டு கொட்டகை கட்டினார், அதற்கும் திருநாவுக்கரசர் பெயர். ஒரு கோவில் கட்டினார், திருநாவுக்கரசர் கோவில்.

அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர்.

அவருக்கு நான்கு மகன்கள், அவர்களுக்கும் திருநாவுக்கரசர் 1, திருநாவுக்கரசர் 2, திருநாவுக்கரசர் 3, திருநாவுக்கரசர் 4 என்று பெயர்.

இவர் பக்தர்!

அவர்களை தர்க்கத்திற்குள் அடக்க முடியாது. ஒருநாள் நெற்றியில் திருநீரோடு சிவபக்தர் போன்ற தோற்றத்தோடு ஒருவர் வந்தார். அவர் வந்து ஊரில் ஒருவரிடம், "ஏன் இதற்கு திருநாவுக்கரசர் தொட்டி என்று பெயரிடப்பட்டிருக்கிறது" என்று கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார், "அப்பூதியடிகள் திருநாவுக்கரசருடைய மிகப்பெரிய பக்தர், அதனால் அவர் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்று பெயர் வைக்கிறார். அவருடைய நான்கு குழந்தைகளுக்கும் திருநாவுக்கரசர் என்றுதான் பெயர். அவர் வீட்டிற்கும் திருநாவுக்கரசர் பெயர்தான், அவருக்கு எல்லாமே திருநாவுக்கரசர்."

இதைக் கேட்ட அந்த மனிதர், "நான் அவரை சந்திக்க முடியுமா? அவர் எங்கே வாழ்கிறார்?" என்று கேட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எங்கே என்பதை மக்கள் சொன்னார்கள். அவரும் அப்பூதியடிகளின் வீட்டிற்கு போனார். அப்பூதியடிகள், காலையில் வீட்டில் சமையல் முடிந்ததும் எப்போதும் வீதிக்கு வந்து காத்திருப்பார். யார் வந்தாலும் அவர்களிடம், "எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பார்.

யார் அந்த வழியாக போனாலும், "என் வீட்டிற்கு வந்து சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பார். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம். அதனால், அவர் வெளியே காத்துக் கொண்டிருந்தார்.

சிறுவனைத் தீண்டிய நாகம்

இந்த சிவபக்தர் அங்கே வந்தார். இன்றைக்கு வீதியில் ஒரு சிவபக்தர் வந்திருப்பதை பெரும் பாக்கியமாக அப்பூதி அடிகள் கருதினார். அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பிறகு தன்னுடைய நான்கு மகன்களையும் அழைத்து, திருநாவுக்கரசர் 1, திருநாவுக்கரசர் 2, திருநாவுக்கரசர் 3, திருநாவுக்கரசர் 4 என்று அறிமுகப்படுத்தினார். அவருடைய மனைவியும் வந்து ஆசிபெற்றார்.

பிறகு அவருக்கு சாப்பாடு பரிமாற தயாரானார்கள். தன்னுடைய மூத்த மகனை தோட்டத்திற்கு அனுப்பி, சாப்பிடுவதற்கு ஒரு வாழை இலையை அறுத்துவர சொன்னார். அந்தப் பையன் வாழை இலையை அறுக்கப் போனார். இன்னும் சுருண்டு இருக்கின்ற அந்த தலைவாழை இலையை பிரித்தார்.

விசேஷமான ஒரு விருந்தினர் வந்தால், ஏற்கனவே விரிந்த வாழை இலையை அவர்கள் எடுக்கமாட்டார்கள். இன்னும் சுருண்டு இருக்கின்ற வாழை இலையில் உணவு பரிமாற விரும்புவார்கள். அவன் அந்த இலையை வெட்ட நினைத்தான். அந்த இலையை வெட்டியபோது, அதிலிருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்து அவன் கழுத்தில் கொத்திவிட்டது.

வீட்டை நோக்கி ஓடி வந்த அந்த பையன், தோட்டத்திலேயே விழுந்துவிட்டான். அவனைத் தேடி அம்மா வந்தபோது, "என்னை ஒரு பாம்பு கொத்திவிட்டது" என்று சொன்னான்.

பிறகு வாயில் நுரை தள்ளி மயங்கிவிட்டான்.

தடையில்லாமல் தொடர்ந்த உபசரிப்பு

மனைவி மனமுடைந்து, கணவனை அழைத்தார். அப்பூதியடிகள் வந்து பார்த்தார், ஆனால் நடந்தது தெரிந்தால், அந்த சிவபக்தர் நம் வீட்டில் சாப்பிடமாட்டார், அவரை உபசரிக்கவே முடியாமல் போய்விடும். அதனால் ஒரு பாயை எடுத்து, பையன் மீது போட்டு மூடி தோட்டத்திலேயே வைத்துவிட்டார்.

மனைவியிடம், "நீ உன்னுடைய துக்கத்தை எந்தவிதமாகவும் வெளிப்படுத்தக்கூடாது. முதலில் நாம் அவருக்கு உணவு பரிமாற வேண்டும். அவர் போன பிறகு நாம் செய்ய வேண்டியதை பார்த்துக்கொள்ளலாம்" என்று சொன்னார்.

மனைவியும் ஒத்துக்கொண்டார். அவர்கள்போய் எல்லாவற்றையும் தயார்செய்து அவருக்கு பரிமாறப் போனார்கள். அவரோ, "குடும்பம் முழுவதும் அவரோடு சேர்ந்து சாப்பிட வேண்டும்" என்று சொன்னார். பிறகு அவர் உங்களது மூத்த மகன் எங்கே என்று கேட்டார். அதற்கு அப்பூதியடிகள், "இல்லை, அவன் வெளியே போயிருக்கிறான், நாம் சாப்பிடுவோம்" என்று சொன்னார்.

அதற்கு அவர், "இல்லை, பையன் எங்கே? நீங்கள் எதையோ மறைப்பது போல் தெரிகிறது," என்று சொன்னார்.

அப்பூதியடிகள், "மறைப்பதற்கு எதுவும் இல்லை, நாம் சாப்பிடலாம்" என்று சொன்னார்.

வந்திருப்பது யார் என அறிந்த தருணம்

ஏன் உங்களது நான்கு மகன்களுக்கும் திருநாவுக்கரசர் என்று பெயர் வைத்தீர்கள் என்று சிவனடியார் கேட்டார்.

உடனே அப்பூதியடிகளுக்கு கோபம் வந்துவிட்டது. “நீங்கள் எப்படி இந்த கேள்வியைக் கேட்கலாம்? திருநாவுக்கரசர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் சிவனுடைய உருவமானவர். நீங்கள் இப்படியெல்லாம் பேசக்கூடாது.” என்றார். அதற்கு அவர், "நான்தான் திருநாவுக்கரசர்" என்று சொன்னார். பிறகு எல்லோரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.

பிறகு திருநாவுக்கரசர், "உங்களது பையனுக்கு என்ன ஆனது?" என்று கேட்டார். அதற்கு அவர், "அவனை பாம்பு கடித்துவிட்டது, ஆனால் உங்களை உபசரிப்பதில் குறை இருக்கக்கூடாது. நீங்கள் நன்றாக சாப்பிட்டு கிளம்ப வேண்டுமென்று விரும்பினோம்" என்றார்.

விஷம்நீங்கி உயிர்த்தெழுந்த மகன்

அதுவும் அவர்களுக்கு இவர்தான் திருநாவுக்கரசர் என்று தெரிவதற்கு முன்பாக. அவர்  சும்மா வீதியில் போகின்ற ஏதோ ஒரு பக்தர் என்று நினைத்தபோதே. பிறகு திருநாவுக்கரசர் சொன்னார், "இப்படி செய்யாதீர்கள், பையனை இங்கே கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.

அவருடைய ஒரு சித்தியைப் பயன்படுத்தி, அந்த பையனின் உடலில் ஏறிய விஷத்தை முறித்து, அவனை உயிர்ப்பித்தார்.

அவருடைய ஒரு சித்தியைப் பயன்படுத்தி, அந்த பையனின் உடலில் ஏறிய விஷத்தை முறித்து, அவனை உயிர்ப்பித்தார்.

அவர்களுக்கும் ஆசி கொடுத்துவிட்டு கிளம்பினார். இவர்கள் எல்லாம் வேறுவிதமான மக்கள். அவர்கள் முற்றிலும் மாறுபட்ட மக்கள். அவர்கள் இந்த உலகத்தை சேர்ந்தவர்களே இல்லை. அவர்கள் ஒரே ஒரு காலினை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் வழிகளும், வாழ்ந்த விதங்களும், அவர்கள் எந்த மாதிரி சக்தியோடு வாழ்ந்தார்கள் என்றும் பார்த்தால், அது முழுவதும் வேற்றுலகத்தைப் போலவே இருந்தது.