எளிமையான இந்த வாழைப்பழம் இப்பிரபஞ்சத்தில் ஓர் விசித்திரமான வித்தியாசமான பழம் என்பது உங்களுக்குத் தெரியுமா?! உண்மையைச் சொல்வதானால், தாவரவியலின் அடிப்படையில் வாழைப்பழம் கொட்டையில்லா பழமாகும் மற்றும் வாழைமரம் மரம் வகையை சார்ந்தது அல்ல உலகின் மிகப்பெரிய மூலிகை வகை.

7000ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது. ஆண்டிற்கு பத்து லட்சம் கோடி வாழைப்பழங்கள் உட்கொள்ளப்படுகின்றன. இந்த சத்தான பழம் உலகின் அனைத்து இடங்களிலும் நம் சாப்பாடு தட்டில் இடம் பிடித்துவிட்டது, அதுவும் நல்ல காரணத்திற்காக. வாழைப்பழம் சாப்பிடுவதன் பயன்கள் என்னென்ன என்பதை படித்தறியுங்கள்.

#1. “தினமும் ஓர் வாழைப்பழம் மருத்துவரைக் காண தேவையிருக்காது”

உங்களுக்கு தெரியுமா பழைய ஆங்கிலத்தில் 'பழம்' என்றாலே 'ஆப்பிளை' தான் குறிக்குமென்று? சீரான உணவு பழக்கத்திற்கு பழங்களை தவிர்க்கமுடியாது என்ற நிலை ஆகிவிட்டது. அதுவும் வாழைப்பழம் மிக எளிதாக கிடைப்பதால் உலகில் மிக அதிகமாக சாப்பிடும் பழமாக உள்ளது. வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது. மேலும், பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதோடு, நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றை வாழைப்பழம் வழங்குகிறது.

புத்தம் புதிய கனிந்த பழங்கள் உண்பதை நம் யோகிகளும் சித்தர்களும் பாரம்பரிய மருத்துவர்களும் பன்னெடுங்காலமாக பரிந்துரைத்து வந்துள்ளனர். இந்த வலைப்பதிவில், பழங்கள் உண்பது எப்படி நம் உடலுக்கும், மூளைக்கும் அற்புதமான விஷயங்களைச் செய்யும் என்பதையும் இந்த உலகிற்கு நன்மையாக அமையும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.

ஈஷா யோக மையத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு வேளை உணவிலும் வாழைப்பழங்கள் ஓர் அங்கமாக இருக்கும். உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல வகையான வாழைப்பழங்களில், மையத்தில் வழங்கப்படும் பொதுவான சில வகைகள் இங்கே:

  • கிராண்ட் நைன்
  • கர்பூரவள்ளி
  • நேந்திரன்
  • பச்சநதன்
  • பூவன்
  • செவ்வாழைப்பழம்
  • ரஸ்தாலி
  • ரோபஸ்டா
  • மலை வாழைப்பழம்

#2. பெருங்குடலை சுத்தமாக வைத்து ஆரோக்கியத்தை உறுதிசெய்யுங்கள்

ஆயுர்வேதத்தில், பொதுவான ஆரோக்கியத்திற்கு சுத்தமான பெருங்குடல் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளதால் வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட பின்வரும் லிங்கில் உள்ள கட்டுரையில், சீரான குடல் இயக்கம் ஆரோக்கியமான செரிமான இயக்கத்திற்கான ஒரு அடையாளமாக இருப்பது பற்றியும், வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தடுக்கும் விதம் குறித்தும் விவரிக்கிறது. ஒழுங்கற்ற குடல் இயக்கம் உங்கள் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. பெருங்குடல் சுத்தமாக இருப்பதன் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தாலும், இன்றைய உலகின் பதப்படுத்தப்பட்ட உணவு முறையில் இது பெரிய சவாலாக உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் உள்ளது. மேலும், மலச்சிக்கலை சரிசெய்யும் தன்மையும் உள்ளது. பச்சை வாழைப்பழம் (பச்சை வாழை வகை) இதற்கு ஏற்றது, ஏனெனில் அதில் resistant starch எனப்படும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இது கரையாத நார் போல செயல்பட்டு குடல் இயக்கத்தை சிறப்பாக வைக்கிறது.

#3. வாழைப்பழம் உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும்!

உங்களுக்கு வாழைப்பழத்தின் சுவை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். வெளிச்சூழ்நிலை விஷயங்களான நம் உணவு பழக்கம், மூளையின் வேதியியலில் தாக்கம் உண்டாக்கி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் உணர்வுகளை எப்படி அது உருவாக்குகிறது என்பதற்கான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் உள்ளன. வாழைப்பழத்தில் செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் (ரத்தத்தில் உள்ள முக்கிய உட் சுரப்பி நீர்) உள்ளது. இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கும். வைட்டமின் B6 ன் சத்தான மூலமாகவும் இது உள்ளது. மேலும், மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழிசெய்கிறது. 2008ம் ஆண்டில் (தி பிரிட்டிஷ் ஜார்னல் ஆப் நியூட்ரிஷன்) ஆங்கிலேய ஊட்டச்சத்து இதழில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில், அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவினால் மனச்சோர்வின் அறிகுறி, பதற்றம் இவற்றிலிருந்து பங்கேற்பாளர்கள் விடுபடமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. டாக்டர் கரோலின் லோங்மோர் அவர்களின் கருத்துப்படி பாலாடைக்கட்டி, மனச்சோர்வுக்கும் குறைந்த அளவிலான செரோடோனுக்கும் தொடர்புள்ளது மற்றும் பாலாடைக்கட்டி, வாழைப்பழம் போன்ற அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் நம் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த முடியும். அவர்கள் வாரத்திற்கு நான்கு வாழைப்பழம் சாப்பிடுவதை பரிந்துரை செய்கிறார்கள்.

அடுத்த முறை நீங்கள் சோர்வாக இருக்கும்போது, பேரிச்சம்பழம் வாழைப்பழ கூழை பருகுங்கள். பேரிச்சையின் அற்புதமான இயற்கையான இனிப்பும், புத்தம்புதிய வாழைப்பழமும் சேர்ந்து உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#4. நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் வாழைப்பழம்

இன்றைய சவாலான நேரங்களில் சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை தருகிறது. வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த உணவு வகையை சேர்ந்தது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாகிறது.

ஆராய்ச்சியாளர்கள் சொல்வதாவது, நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, போதுமான அளவு புரதச்சத்து, அத்தியாவசியமான அமிலங்கள் மற்றும் குறைந்தது 11 வைட்டமின்களும் தாது சத்துகளும் இணைந்து செயல்படுகின்றன. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது: இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம். இது மேலும், ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.

தினசரி அளவில் தேவையான 11 சதவிகிதம் வைட்டமின் சி சத்தை ஒரு வாழைப்பழம் கொடுக்க முடியும். இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய அவசியமானது - நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அடித்தள கட்டம். ஆனால் மிகப்பெரிய காரணம், ஏன் வாழைப்பழம் நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆதரவாக உள்ளதென்றால் அதில் உள்ளடங்கியுள்ள அதிக அளவிலான வைட்டமின் B6. உடலின் நோய் எதிர்ப்பு திறன் செயல்பட, புரதங்கள் உற்பத்தி செய்திட வைட்டமின் B6 அவசியமானது. ஒரு நடுத்தர (சராசரி) அளவிலான வாழைப்பழத்தில் 30 சதவிகிதம் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ள வேண்டிய வைட்டமின் B6 உள்ளது.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பழுத்த வாழைப்பழங்களை நாடுங்கள். 2009ம் ஆண்டில் புட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ல் பிரசுரிக்கப்பட்ட ஆய்வின்படி, ரத்தத்தில் வெள்ளை அணுக்களை மேம்படுத்த, பழுத்த வாழைப்பழங்கள் எட்டு மடங்கு சிறந்தது, பழுக்காத வாழைப்பழங்களை விட.

#5. இதயம் காக்கும் வாழைப்பழம்

பொட்டாசியம் நம் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு தேவையான மினரல் கனிம எலெக்ட்ரோலைட் ஆகும். அது இது ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றும் இதய செயல்பாடு, திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது. பொட்டாசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உட்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட காரணமாகிறது. பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவற்றின் செயல்திறன், ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைநிற்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என காட்டுகின்றன.

பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது.

banana

#6. மாதவிலக்கு பிரச்சனையில் உதவும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும். அதுபோலவே இதிலுள்ள இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம். கொஞ்சம் வாழைப்பழங்களை உண்பதால் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அளவை திறன்பட சமன்செய்ய முடியும். பொட்டாசியம் உடலில் நீர் தங்கியிருக்கும் தன்மையை தடுக்கிறது, இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 சிவப்பு ரத்த அணுக்களை தயாரிக்கிறது, இது மாதவிடாய் காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது.

#7. நுண்ணுயிர் கலந்த உணவிற்கு ஓர் சிறந்த மூலம்

வாயுத்தொல்லையினால் சங்கடமா? உங்கள் உணவை ஜீரணிக்க சிரமப்படுகிறீர்களா? இது உணவு செரிமானத்திற்கு தேவையான குடல் நுண்ணுயிர் குறைபாட்டினால் இருக்கலாம். நம் உடலில் 40 ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் இருக்கின்றன, பெரும்பாலானவை நம் குடலில்தான் வாழ்கின்றன. மொத்தமாக அவை குடல் நுண்ணுயிர்க்கட்டு என்று அறியப்படுகிறது. இவை நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல, வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த அற்புதமான உணவு. இவை குடல் நுண்ணுயிர் செழித்து வளர சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன. அதிக அளவிலான ரெசிஸ்டண்ட் மாவுச்சத்து, குறிப்பாக பச்சை வாழை வகையில் உள்ளது. சிறு குடல் அதை உறிஞ்சுவதில்லை, மாறாக அப்படியே பெருங்குடலுக்கு சென்றுவிடுகிறது. அங்கு நுண்ணுயிர்கட்டுக்கு அவை உணவாகவும், எரிபொருளாகவும் இருந்து அவை வளருவதற்கு உதவுகின்றன.

#8. உடற்பயிற்சிக்கான சரியான உணவு

ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் 12மி.கி. கோலைன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைட்டமின் பி வகையைச் சேர்ந்த கோலைன், உடலில் கொழுப்பை சேமித்து வைக்கும் மரபணு மூலக்கூறுகளில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது. வாழைப்பழத்தில் உள்ள இந்த அதிக நார்ச்சத்து ஒருவர் குறைவாக சாப்பிட வழிவகுக்கும் விதமாக சாப்பிட்ட ஒரு திருப்தியை தருகிறது. நீண்ட தூரம் ஓடுபவர்கள் (மாரத்தான்) மற்றும் இதர உயர் சகிப்புத்தன்மை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அதில் நல்ல மாவுச்சத்து உள்ளது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது. இது எளிதாக ஜீரணமாகக்கூடிய சர்க்கரை, உடலுக்கு தேவையான சக்தியை நேரடியாக கொடுக்கும். கட்டுடல்காரர்கள் (பாடி பில்டர்ஸ்) மிகவும் விரும்புவது வாழைப்பழங்களை! ஏனெனில், நம் உடலில் செல்கள் கொழுப்பை கிரகித்துகொள்வதைக் குறைக்கக்கூடிய பெக்டின் என்ற சத்தின் நேரடி மூலமாக வாழைப்பழங்கள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கனிந்த பழங்கள் இதற்கு சிறந்தவை. ஏனென்றால், இதில் அதிக அளவில் வேகமாக ஜீரணிக்கும் இயற்கையான சர்க்கரை உள்ளது.

#9. வலுவான எலும்புகளுக்கு வாழைப்பழங்கள்

ஆரோக்கியமான எலும்புகளைப் பற்றி யோசிக்கும்போது, மனதுக்கு வரும் முதல் விஷயம் கால்சியம் சத்து. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில், தினசரியளவில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தில் ஒரு சதவிகிதம்தான் உள்ளது. ஆனால், அது நம் உடலில் கால்சியம் சத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள உதவும். ஒரு முக்கியமான அறிவியல் ஆய்வின்படி, வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலில் கிரகித்துக்கொள்ள வேண்டிய கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து நம் எலும்புகளுக்கு நல்லது. அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவை உட்கொள்ளும் மக்களுக்கு ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தி அதிகம் இருக்கும், இது வலுவான எலும்புகளுக்கு வழிவகுத்து ஆஸ்டியோபொரோஸிஸ் போன்ற எலும்பு பாதிப்பினை குறைக்கிறது என்பது ஆய்வுகளின் முடிவில் தெரியவருகிறது.

#10. வாழைப்பழங்கள் எளிதாக கிடைக்கும்

இதுதான் வாழைப்பழங்களைப் பொருத்தவரை மிகப்பெரிய நல்ல விஷயம்! வாழைப்பழங்கள் கிட்டத்தட்ட உலகின் அனைத்து சந்தைகளிலும் மலிவான விலையில் கிடைக்கும். வாழைப்பழத்தின் கனத்தத் தோல், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேறு சில பாதிப்பு தரும் ரசாயனங்கள், மென்மையான மற்றும் சுவையான உள் சதைப்பற்றை மாசுபடாமல் காக்கிறது. மேலும் பல இடங்களுக்கு எளிதாக எடுத்துச்சென்று சேர்க்க முடிகிறது. சுலபமாக கிடைக்கும் தன்மையும், பல்வேறு பலன் தரும் பழமாக இருப்பதும் இணைந்து இதை ஓர் மிகச்சிறந்த சிற்றுண்டியாக்குகிறது. பயணத்தின்போது வெறும் இரண்டு அல்லது மூன்று நடுத்தர அளவிலான வாழைப்பழங்கள் எளிதான மற்றும் நிறைவான உணவாக இருக்கும். பழக்கூழில் சேர்க்க ஓர் அற்புதமானது. வாழைப்பழங்கள் பேக்கிங் உணவுகள் செய்வதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. பேக்கிங் உணவுகளில் இவை முட்டைக்கு மாற்றாக இருந்து, அதில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. சாக்லேட் பீனட் போன்ற பேக்கிங் செய்யாமல் தயாராகும் உணவு பதார்த்தங்களிலும் இவை சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனவே எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்கள் உணவில் வாழைப்பழத்தை சேர்த்து, சிறப்பான பலனை அனுபவியுங்கள்… ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை தனதாக்கிக்கொள்ளுங்கள்!

ஆசிரியர் குறிப்பு: இனிப்பை விரும்பும் நபரா நீங்கள்? உங்கள் வாழைப்பழங்களில் மேலும் இனிப்பு சேர்க்க அதை தேனில் நனைத்து உண்ணுங்கள். மேலும் தேனின் பலன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்