புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 10

இன்றைய மேற்கத்திய அணுகுமுறைகொண்ட கல்விமுறையால், அபாயத்தில் இருக்கும் நம் பாரம்பரிய தன்மைகளைக் காக்க ஈஷா வித்யா மாணவர்கள் எதிர்காலத்தில் பணியாற்றுவார்கள். இது எப்படி சாத்தியம்? இந்த பதிவு பதில் தருகிறது!

பகுதி 1 2 3 4 5 6 7 8 9

“நமது சமூகத்தில் நேர்மை சிறக்க வேண்டுமென்றால் நாம் அதனை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது -நமக்குள்ளும் நமது குழந்தைகளிடத்திலும் மற்றும் நம் கல்விமுறையிலும்!” -சத்குரு

கிராமப்புற மக்கள் வாழ்க்கை... நான் கற்பனை செய்ததுபோல் இல்லை!

ஈஷா வித்யாவிற்கு வந்துசென்ற பிறகு கிராமக் குழந்தைகள் மீது நான் கொண்டிருந்த கற்பனை எண்ணம் சிதைந்துபோனது. ஈஷா வித்யாவில் பயிலும் சுமார் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகளின் வாழும் சூழலை நேரில் சென்று பார்த்தபோது, வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் சோர்ந்துபோன கண்களுடனும் செல்வதையும், மெலிந்த தேகத்துடன் இளம்பெண்கள் விறகுகளையும் தண்ணீர் குடங்களையும் தூக்கிச் சுமந்து செல்வதையும், சின்னஞ்சிறு குழந்தைகள் தெருவோரங்களில் சாம்பலை வைத்து பாத்திரங்களை கழுவிக்கொண்டு இருப்பதையும், 6க்கு 6 அடியுள்ள அளவிலான கூரை வீட்ட்டில் எந்தவித வீட்டு உபயோகப்பொருட்களும் இல்லாத நிலையில், ஐந்தாறு குடும்ப உறுப்பினர்கள் ஒரே வீட்டில் வாழ்வதையும் கண்டேன். வறுமையின் கோரமுகத்தின் கொடுமைகளை அங்கே நான் கண்டேன். அங்கு என்னால் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியவில்லை!

ஆனாலும், ஈஷா வித்யாவில் பணிபுரியும் மக்கள் சிலரும் ஈஷா வித்யாவில் படிக்கும் குழந்தைகளும் கண்களில் நம்பிக்கையின் ஒளி பிரகாசிக்க நடந்துசெல்வதையும் காணமுடிகிறது. அதே நேரத்தில், கிராமப்புற தெருக்களில் எப்போது சென்றுபார்த்தாலும், நம்மால் மகிழ்ச்சியற்ற முகங்களுடன் ஒரு குழந்தை இருப்பதை காணமுடிகிறது. “ஏன் இந்த குழந்தை ஈஷா வித்யாவில் சேர்க்கப்படவில்லை?” நான் ஈஷா வித்யா பள்ளி முதல்வரிடம் இதனைக்கேட்டேன். ஒருசில நிமிட இடைவேளைக்குப் பிறகு வேதனையுடன் என்னிடம் கேட்டார், “நம்மிடமுள்ள இந்த வசதியை வைத்துக்கொண்டு எத்தனை குழந்தைகளை நம்மால் ஈஷா வித்யாவில் சேர்த்துக்கொள்ளமுடியும்? நம்முடைய பொருளாதார நிலையில் எத்தனை ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக சேவை மனப்பான்மையுடன் கிடைப்பார்கள்? எத்தனை பேர்களை நம்முடைய இந்த செயல்திட்டத்திற்காக பணியமர்த்திட முடியும்?”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அவர் சொன்னது சரிதான்!

அதன்பின்னர் என்னுடைய புரிதல் மேம்பட்டது. ஈஷா வித்யா என்பது ஏதோ பெருமைக்காக துவங்கப்பட்ட சமூக செயல்பாடு அல்ல என்பதை இப்போது அறிந்துகொண்டேன். இது வறுமையில் வாடும் ஏழைக் குழந்தைகளின் வாழ்வை முன்னேற்றுவதுதான் நாம் கொண்டுள்ள அடிப்படையான பொறுப்பு! மகிழ்ச்சியான கற்றல் சூழலை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் துயரத்தில் உழலாமல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல், தற்கொலை எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாமல் தடுப்பதே நாம் அவர்களுக்காக வழங்கும் பரிசு!

இதைச் செய்துகாட்டுவது நம்முடைய கைகளில்தான் உள்ளது! இதற்காக உதவிபுரியும் ஒவ்வொருவரும் அற்புதம் நிகழ்த்துவார்கள். ஏனென்றால், ஈஷா வித்யாவின் ஆசிரியர்கள், பள்ளியின் மீது அக்கறைகொண்டவர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலரின் அன்பும் அர்ப்பணிப்பும், ஈஷா வித்யாவிற்காக நன்கொடையாக வழங்கப்படும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பையும் பலமடங்கு மதிப்புமிக்கதாய் பரிமாற்றம் செய்கிறது.

கல்வி - வறுமையிலிருந்து வெளியேற, ஒரு டிக்கெட்

சமூக சீர்திருத்தவாதிகளுக்கு கல்வி என்பது மிகப் பெரிய பொருளாதார அம்சம் என்பது நன்றாக தெரியும். இன்று, ஏழை மக்கள் அவர்களின் வறுமை நிலையிலிருந்து வெளிவர வேண்டுமென்றால் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களிடத்தில் கொண்டுசேர்க்கும் விதத்தில் செயலாற்றும் நாட்டிலுள்ள அரசு சாரா தொண்டுநிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு நன்றிகள். இதனால்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை வறுமையிலும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

15 வருடங்கள் பள்ளியில் கழித்தபின் வேலை வாய்ப்பில்லாமல் இருந்தால், கல்வி என்பது நகைச்சுவை ஆகிவிடும்.

இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. சிறப்பான தரம்மிக்க கல்வியையும் அதன் பலனையும் நாம் இன்னும் பெறவில்லை. கல்விக்கொள்கைகளை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால் இந்த நிலை உள்ளது. பற்றாக்குறையான வசதிகள் மற்றும் பணியாளர்கள், விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய காரங்களால் கல்வியை பாதியில்விடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்வியின் தரமும் குறைந்துவிடுகிறது. மாணவர்கள் படித்து பட்டம் பெற்றாலும் கூட பல லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் சூழல் நிலவுகிறது.

ஒரு மாணவனின் கல்விக்காக 15 வருடங்கள் செலவழித்து, பணம்-உழைப்பு ஆகியவற்றை முதலீடு செய்துவிட்டு, அந்த ஏழைக் குடும்பத்திலுள்ள மாணவன் வேலைவாய்ப்பின்றி இருந்தால் அந்த நிலைமை எப்படியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்! 15 வருடங்களை இந்த கல்விமுறைக்காக செலவழித்துவிட்டு, கடைசியில் உங்களுக்கு அதனால் எந்த பலனும் இல்லை என்ற நிலை எத்தகையது என எண்ணிப்பாருங்கள்!

தன் மரபினைப் பற்றியும், தன் மூலத்தைப் பற்றியும் வெட்கப்படும் மாற்றான்களை கல்வி உருவாக்குகிறது.

நம்முன்னே இருக்கும் இரண்டாவது பிரச்சனை கல்விமுறையில் உள்ள அடிப்படையான குறைபாடுகளாகும். பெரும்பாலான பள்ளிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் கல்விமுறை பாரம்பரிய தன்மைகளையும் அடித்தளத்தையும் ஒரு மனிதரிடமிருந்து அகற்றும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த அர்த்தமில்லாத கல்விமுறையின் தன்மை மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆணிவேரினை ஆழமாக வேரூன்றச் செய்வதாக உள்ளது. சமூக அளவிலும் தனிமனித அளவிலும் இந்தியாவைப் போன்று கலாச்சார செழுமைகொண்ட நாடுகளில் இது ஒரு பேரழிவாகும்.

சத்குரு பேசும்போது 120 கோடி பேருள்ள இந்தியாவில், நம் அனைவருக்கும் போதுமான நிலமோ, வளங்களோ அல்லது வானமோ கூட இல்லை என அடிக்கடி சொல்வதுண்டு. மனித வளம் மட்டுமே நம்மிடமுள்ள ஒரே பெரிய வளம். அவர் கூறும்போது, “நாம் இந்தியாவை திறம்படச் செய்யவில்லை என்றால், இந்தியாவை அழியச் செய்துவிடுவோம்.” அதுதான் நிதர்சனமும் கூட! மனித தன்மைக்கு நலம்பயக்கும் அணுகுமுறை இல்லாமல், இயற்கை சார்ந்த பாரம்பரிய தன்மைகளை நம் குழந்தைகளிடத்தில் கொண்டுசேர்க்காமல், நாம் மாபெரும் இலக்குகளை நோக்கி சென்றால், நாம் பெரிய அளவிலான நமது பாரம்பரிய மதிப்புகளைப் பற்றி அறியாத, வேலைவாய்ப்பற்ற இளைஞர் சமூகத்தை எதிர்காலத்தில் உருவாக்கிடக்கூடும்.

ஈஷா வித்யாவின் பங்களிப்பு: பாரம்பரிய மதிப்பீடுகளின் சாரத்துடன் தரமான கல்வி வழங்கப்படுகிறது.

கல்விநிலையில் ஒரு புதுமையான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் ஈஷா வித்யாவைப் போன்ற கல்வி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன. அவர்களின் சமூகம் சார்ந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை பாடத்திட்ட தரத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டதல்ல, பாடத்திட்ட தரத்தில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாத அதே வேளையில், சமூக அமைப்போடும் கலாச்சாரத்தோடும் சிறப்பாக இயைந்து செல்லும் தனிமனிதர்களை உருவாக்கும் தன்மையுடையது அது!

ஏழை மாணவர்கள் தங்களின் முழுமையான திறமையை வெளிக்கொணர்ந்து, சிறப்பாக கல்வியில் முன்னேறி அவர்களின் ஏழ்மையிலிருந்து மீண்டு வருவதற்கும், நமது கலாச்சார மேன்மையை உணர்ந்து சமூகத்தில் மதிப்புமிக்க மனிதர்களாக விளங்குவதற்கும் ஈஷா வித்யா பள்ளி துணைநிற்கிறது. கலாச்சாரத்தின் மதிப்புகளை உணர்ந்துள்ள மனிதர்களை உருவாக்குவதன் மூலம் நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது உறுதிசெய்யப்படும்.

நீங்கள் ஈஷா வித்யாவிற்கு நன்கொடையாளராக அல்லது உதவிபுரிபவராக இருந்தால் நீங்கள் ஒரு மதிப்புமிக்க உருவாக்கத்திற்கு துணைநிற்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!

ஈஷா வித்யாவைப் பற்றி முதல்முறையாக நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள் என்றால், நீங்கள் என்னைப் போல இதில் உங்களது ஒரு பங்களிப்பை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஈஷா வித்யா ஏற்படுத்தும் அற்புத மாற்றத்தின் பயணத்தில் நீங்களும் பங்குபெற உங்களை ஊக்குவிக்கிறேன்.

கிராமப்புற மக்கள் வாழ்க்கை பகுதிக்குச் செல்ல

ஆசிரியர் குறிப்பு:

ஈஷா வித்யா பள்ளிகள் துவக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, "Innovating India's Schooling" என்ற தலைப்பில் நவம்பர் 5, 2016 அன்று கோவை ஈஷா யோக மையத்தில் தேசிய கல்வி மாநாடு நடைபெற்றது. சத்குரு, மாண்புமிகு மனித வளத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கல்வித்துறையில் உள்ள பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு Live Blog செய்யப்பட்டது. அதன் தொகுப்பு இங்கே.

#10YrsOfIshaVidhya