சாதனா பாதை - பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள் செய்யும் அற்புதம்
எண்ணற்ற துறவிகளும், குருமார்களும் வாழ்ந்திருந்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையம், இயற்கையாகவே பிரவாகிக்கும் சக்தியால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பல வடிவங்களும், வெளிகளும் உள்நிலை வெளிப்பாடு மற்றும் வளர்ச்சிக்கான தேடுதலில் உள்ளவர்களுக்கான ஒரு தனித்துவமிக்க தீவிரமான இடமாக இருக்கிறது.

32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலத்தில் 7 மாதங்கள் தங்கி இருக்கிறார்கள்.
தன்னியல்பான ஆனந்தம்
"பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குள் நிகழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஒரு விஷயத்தை உணரமுடிகிறது. என் வரையறைகளைக் கடப்பதற்காக நான் ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தால், என்னிடமிருக்கும் பற்பல குறைபாடுகளும் தானாகவே விழுந்துவிடுகின்றன. இங்கிருந்து வீட்டுக்குத் திரும்பியதும், மற்றவர்கள் செய்யும் எல்லாவற்றைக் குறித்தும் பெரிதும் வருத்தம் கொள்வேன். ஆனால் ஆசிரமத்துக்குள் எனக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுப்பதில், என்னைச் சுற்றிலும் மற்றும் எனக்குள்ளும் நிகழும் சிறிய விஷயங்களையும் மதிப்பானதாக உணர்கிறேன்” – வைஷாக், 22, பெங்களூரூ
ஆசிரமத்தின் பல்வேறு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள்
A consecrated space experientially reminds you that there is much more to life than you think. #SadhguruQuotes pic.twitter.com/8hCfv4Mjym
— Sadhguru (@SadhguruJV) November 27, 2018
“ஆசிரமத்தில் வாழ்வது மேற்கூறிய வாசகத்தை எனக்கு மெய்ப்பித்துள்ளது. இங்கு வருவதற்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களைப் பற்றி நான் படித்துத்தான் அறிந்திருந்தேன் என்பதுடன் ஓரளவுக்கு சந்தேகமும் கொண்டிருந்தேன். ஆனால் இங்கு கடந்த 5 மாதங்களாகத் தங்கியிருந்ததில், இப்போது என் மனம், உடல் மற்றும் உணர்ச்சிகள் மீது இந்த வெளிகள் ஏற்படுத்தியிருக்கும் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தின் அனுபவத்தை நான் எனக்குள் உணர்ந்திருக்கிறேன்.
இங்கிருக்கும் பிரதிஷ்டை செய்யப்பட்ட பல்வேறு சக்திவெளிகள் அனைத்தும் வளர்ச்சியூட்டுவதாகவும், உற்சாகமூட்டுவதாகவும் இருக்கின்றன. நான் சோகமாக உணர்ந்தபோதெல்லாம், தேவியின் முன்பு அமர்ந்திருப்பது என்னை ஆறுதல்படுத்தியுள்ளது; எனக்குள் இருந்த பதற்றத்தை தியானலிங்கம் அமைதிப்படுத்தியுள்ளது. பிரதட்சணம் செய்வது என் மனதின் ஓயாத பேச்சை நிறுத்துவதற்கு எப்போதும் உதவிசெய்து, அதன் விளைவாக என்னை அதிக தீவிரமும், மனக்குவிப்பும் கொள்வதற்கு வழிநடத்துகிறது. சூரிய குண்டத்திற்கு அருகில் சாதனா செய்வதற்கு நான் மிகவும் விரும்புகிறேன்; அங்கே நீர்வீழ்ச்சியாகக் கொட்டும் தண்ணீரின் ஒலி என்னை முழுமையான அசைவின்மைக்கு இட்டுச் செல்கிறது. ஆதியோகி ஆலயத்தில் உச்சாடணம் செய்வது என்னை எப்போதும் கண்ணீரில் மூழ்கடிப்பதாக இருக்கிறது; கிரியா மற்றும் ஆசனங்களுக்கான எனது விருப்பத்திற்குரிய இடம் அது. முத்தாய்ப்பாக, பிக்ஷா ஹாலில் உச்சாடணம் செய்வது சிலிர்க்கச் செய்யும் ஒரு உன்னத அனுபவமாக இருக்கிறது.
Subscribe
இத்தகைய அனுபவங்கள் என்னை மென்மேலும் உணர்வதற்கு பேராசைகொள்ளச் செய்துள்ளது…….” – பூனம், 23, மும்பை
அருளில் நனைந்தேன்
“தியானலிங்கத்தில் அமர்ந்திருப்பது எனது தலைக்குள் கேட்கும் இரைச்சலை அடக்குகிறது. சூரியகுண்டத்தில் மூழ்கி எழுவது முற்றிலும் வித்தியாசமான ஒரு நிலையில் எனக்கு சக்தியூட்டுகிறது.” – ஜெயகணேஷ், 24, ஹைதராபாத்
“ஆதியோகி யோகேஷ்வர் லிங்கத்திற்கு அருகில் அமர்ந்திருந்தால், என் மனதில் ஓடிக்கொண்டிருப்பது என்னவாக இருந்தாலும், அதை நான் ஒட்டுமொத்தமாக தூக்கி வீசிவிடுகிறேன்; அங்கே என்னால் மணிக்கணக்காக அமர்ந்திருக்க முடிகிறது.” – அபின்ஸ், 28, பெங்களூரூ
“பல தருணங்களில் எந்த முயற்சியும் இல்லாமல் கண்களை மூடிய நிலையில் தியானலிங்கத்தில் நான் அமர்ந்திருக்க நேர்ந்துள்ளது. எந்த ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட வெளிகளில் நான் இருக்கும்போதும், என்னுடைய உணர்வில் நேரம் இறக்கை கட்டிப் பறப்பது போலத்தான் இருக்கிறது!” – முனீர், 29, பைலர், ஆந்திரப்பிரதேசம்
“தியானலிங்கத்தில் அமர்ந்திருப்பதுதான் என் வாழ்க்கையிலேயே சிறந்த அனுபவம்… அந்த அசைவின்மை… வேறெங்கும் அதை நான் உணர்ந்தது கிடையாது.” – ஷ்வேதா, 26, வாரணாசி
நான் கலந்துகொண்ட வகுப்புகள் மற்றும் நான் செய்த செயல்கள் அனைத்தும் நிச்சயமாக என் உடல் பலத்தினால் அல்ல; அது அந்த சக்திவெளியின் காரணத்தினால் மட்டுமே நடந்தேறியது, அதில் சந்தேகமே இல்லை.” – குந்தா, 22, ஹைதராபாத்
அனைவருடனும் இணைந்து சாதனா செய்வது
“அனைவருடனும் சேர்ந்து சாதனா செய்வது எனக்கு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. மாலை நேரங்களில் நான் தனியாக ஷாம்பவி செய்யும்போது, அது சாதாரணமாக இருக்கிறது. ஆனால் காலையில் மற்ற பங்கேற்பாளர்களுடன் ஆசனங்களுக்குப் பிறகு ஷாம்பவி செய்யும்போது, நான் சக்தியூட்டப்பட்டதாக, மிக நன்றாக உணர்கிறேன். அந்த இடமே தீவிரமான அதிர்வுகளுடன் சக்திமிக்கதாக இருப்பதை காலை வேளைகளில் என்னால் உணரமுடிகிறது.
இங்கு வருவதற்கு முன்பு, பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வெளி என்றால் என்ன என்பதற்கு நான் அதிக முக்கியத்துவம் தரவும் இல்லை, அதைப் பொருட்படுத்தவும் இல்லை. இப்போது அது நிச்சயமாக மாறியுள்ளது. சூரியகுண்டம் அப்படிப்பட்டதொரு இடமாக இருக்கிறது – அது எனக்குள் உடனடியாக தீவிரத்தை ஏற்படுத்துகிறது. நான் மந்தமாக உணர்ந்தால், அங்கே சென்று 10-15 நிமிடங்களுக்கு அந்த நீரில் மூழ்கியிருந்த பிறகு, முற்றிலும் சக்தியோடும், உற்சாகமாகவும் திரும்புகிறேன். ஒட்டுமொத்தமாக, நான் இங்கே வருவதற்கு முன்பு இருந்த சக்தி நிலைக்கும், இப்போது நான் இருப்பதற்கும் ஒப்பிடவே முடியவில்லை.” – ராம்நாத், 21, ஹைதராபாத்
ஒரு சீன தேசத்தவரின் கண்ணோட்டம்
“சீனாவில், உடாய் மலை போன்று சில மலைகள் மற்றும் கோவில்களுக்கும் கூட, நேர்மறை சக்தி இருக்கிறது. ஆனால், சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சக்திவாய்ந்த வெளிகளைப்போன்று வேறெந்த இடமும் சீனாவில் இல்லை. ஆசிரமத்தில் வாழ்ந்திருப்பது சொர்க்கத்தில் வாழ்வதைப்போன்று உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் சமநிலையுடனும், சலனமில்லாமலும், அதிக தியானத்தன்மை, அமைதி மற்றும் ஆனந்தம் நிரம்பிய நபராகியுள்ளேன். சாதனாவும், தன்னார்வ செயல்பாடுகளும் அதிகரித்துள்ளபோதும், உறக்கம் மற்றும் உணவுக்கான தேவை குறைந்துள்ளது. ஆசிரமத்தின் சக்திநிலை என்னை உயரிய நிலைக்கு எடுத்துச்செல்கிறது.” - சான் கோ, 32, குன்மிங், சீனா
முதல் சுவாசத்திலேயே வீட்டிற்கும், ஆசிரமத்துக்கும் இடையிலான வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தது
“சமீபத்தில் எனது சகோதரியின் திருமணத்தை முன்னிட்டு நான் வீட்டுக்குச் சென்றிருந்தேன். முதல் நாளிலேயே, நான் சாதனா செய்யத் துவங்கியவுடன், என் முதல் சுவாசத்திலேயே, அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், உணவின் முதல் கவளத்திலேயே அதில் உப்பு இல்லாததை உணருவதைப் போன்று இருந்தது. அந்த வகையில், சாதனாவின் ஒட்டுமொத்த அனுபவத்துக்கும் உண்மையிலேயே ஆசிரமம் கூடுதல் சுவை ஊட்டுகிறது.” – ப்ரயாக், 27, மோர்பி, குஜராத்
“ஆசிரமத்தில் மூன்று மாதங்கள் தங்கியிருந்த பிறகு, ஒரு அவசரத்தின் காரணமாக நான் இரண்டு நாட்கள் வீட்டிற்குச் செல்லவேண்டியிருந்தது. நான் இங்கு திரும்பி வந்துவிட வேண்டும் என்று எவ்வளவு உந்துதலை உணர்ந்தேன் என்பது தெளிவாக நினைவிருக்கிறது. அங்கு செல்வதற்கு முன்பு, ஆசிரமத்தில் நான் உணர்ந்த அமைதியான உணர்வு மற்றும் ஆனந்தத்தை அனேகமாக சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொண்டேன் என்று தோன்றுகிறது. நீளும் பொழுதுகளை உள்ளடக்கிய பதினெட்டு வருட நீண்ட தொழில் முனைப்பு, அதிகமான பயணங்கள், அழுத்தம் நிறைந்த சூழல்கள் எல்லாமே என்னை சோர்வடையச் செய்துவிட்டன. ஆனால், இங்கே ஆசிரமத்தில் இருப்பது எனக்கு அளவற்ற சக்தியை, தெளிவை, அசைவின்மையை கொடுத்துள்ளதில், மீண்டும் புத்துணர்வுடன் உலகத்திற்குள் புதிதாக பிரவேசிப்பதாக உணர்கிறேன்.” – சத்யநாத், 38, விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம்
“வீட்டில், தினமும் சாதனா செய்வதை ஒரே சீராக வைத்திருப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அதிகாலையில் எழுவதற்கு நான் ஏன் அவ்வளவு சோம்பலாகவும், மந்தமாகவும் உணர்ந்தேன் என்பது எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்து மாதங்களில், சாதனா பாதையின் வழிகாட்டுதலின் காரணமாக, நான் அதிகாலை 3:30 மணிக்குக் கண்விழித்து சாதனாவை எளிதாகச் செய்கிறேன். நாள் முழுவதும் நான் சுறுசுறுப்பாக இருப்பதிலும், எனக்குத் தேவையான உறக்கத்தின் அளவிலும் எனது உணவுப் பழக்கங்கள் எப்படி முக்கிய பங்காற்றுகின்றன என்பதை உணர்கிறேன். சன்னிதியின் அருள் வெளியில் சாதனா செய்வதில் நான் பெரும் பலன் அடைந்துள்ளேன் – அங்கே நான் அதிகமான மனக்குவிப்புடனும், அதிகமான ஈடுபாட்டுடனும் இருக்கிறேன்.” – அங்குஷ், 26, ஹைதராபாத்
பெருந்திரளான ஞானமடைந்த மனிதர்களை உருவாக்குதல்
சத்குரு: மேம்பட்ட மனிதர்களின் தலைமுறையை நீங்கள் உருவாக்க விரும்பினால், இந்த விதமான வெளிகள் உங்களுக்குத் தேவைப்படுகிறது. இல்லையென்றால், தற்செயலாகவோ அல்லது தனிப்பட்ட உந்துசக்தியாலோ மட்டும் யாரோ ஒருவர் ஏதோ ஒன்றாக உருவாகலாம், ஆனால் உன்னதமான மக்களின் ஒரு தலைமுறையை நீங்கள் உருவாக்கமாட்டீர்கள். இந்தக் கலாச்சாரம் ஞானத்தின் பெருவெளியையும், ஞானமடைந்தவர்களின் பெருவெளியையும் உருவாக்கியது. ஒரு பெருவாரியான மக்கள் கூட்டம் இடையறாமல் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களால் தொடப்படுவார்களேயானால், மனிதர்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு முழுமைபெற்ற உணர்வுடனும், வாழ்வை ஒத்த தன்மையுடன், அதன் இயல்பான வழியில் பார்ப்பவர்களாக, அனைத்திற்கும் மேலாக, பூரண வளர்ச்சியடைந்த மனிதர்களாக மலர்ச்சி அடைவார்கள்.”ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதைக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது திறக்கப்பட்டுள்ளது.