கேள்வி : எனது கனவுகளை நிகழச்செய்வதற்கு, சில தருணங்களில் நான் சில விதிகளை உடைக்கத் தேவையுள்ளது. ஆனால் என் பெற்றோர் அல்லது என் அன்புக்குரியவர்களுக்கு அவமதிப்பையோ அல்லது அவமரியாதையையோ உண்டாக்கி அதைச் செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஒரு கீழ்ப்படியும் மகளாகவும் இருந்துகொண்டு, ஆனால் அதே நேரம் எனக்கான விதிகளின்படி வாழும் ஒரு சுதந்திரமான பெண்ணாக நான் எப்படி இருக்கமுடியும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்குரு:

எனக்கு விருப்பமானதைச் செய்ய விரும்புகிறேன், அதை அனைவரின் ஒப்புதலுடனும் செய்ய விரும்புகிறேன், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு விரும்பவில்லை என்றுதானே கூறுகிறீர்கள். ஆனால் வாழ்க்கை அப்படி நிகழ்வதில்லை. உண்மையிலேயே நாம் விரும்புவதைச் செய்யவேண்டும் என்றால், அதற்கான விலை ஒன்று உண்டு. இதுதான் வாழ்க்கையின் இயல்பு... நீங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் ஒரு விலை அல்லது வரி செலுத்தவேண்டியுள்ளது. அது எவ்வளவு அல்லது அதன் அளவு என்ன என்பது, உங்களது கருத்து எந்த அளவுக்குப் புரட்சிகரமானது என்பதைப் பொறுத்தது.

“எனக்கு அதைச் செய்ய விருப்பம்தான், ஆனால் என் அப்பா, அம்மாதான்...” என்று நினைப்பதே யதார்த்தமாக இல்லை. இந்த உலகத்திற்குள் உங்களை அவர்கள் கொண்டு வந்ததற்கு நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். அதைத்தாண்டி, புகார் கூறாதீர்கள். உங்கள் தந்தையும், தாயும் அவர்களுக்கு தெரிந்ததை மிகச்சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்திருப்பதைவிட மேலான ஏதோஒன்றை நீங்கள் அறிந்திருப்பதாக நம்பினால், முதலில் நீங்கள் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய வேண்டும்தானே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் விரும்புவதைச் செய்வீர்கள், ஆனால் அதற்காக எந்த விலையும் இருக்கக்கூடாது என்றால், அப்படிப்பட்ட வாழ்க்கை எங்கும் இல்லை – இங்கு மட்டுமில்லை, எங்குமே இல்லை.

ஆனால் ஒருவேளை நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை அவர்களால் உணர முடியவில்லை என்றால், அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். இப்போது சூழ்நிலை, நீங்கள் விரும்புவதைச் செய்வதற்கு நீங்கள் எந்தளவு தயாராக இருக்கிறீர்கள் என்ற நிலைக்கு வந்து சேர்கிறது. அவர்களையும் மீறிக்கொண்டு செல்லுமளவுக்கு அது தகுதியானதுதானா? ஆம், என்று நீங்கள் முடிவு செய்தால் – அதற்கான விலை என்னவாக இருந்தாலும், எப்படியாவது நீங்கள் அதைச் செய்துவிட விரும்புகிறீர்கள் என்றால் – நீங்கள் செய்யலாம், ஆனால் அதற்கொரு விலை இருக்கும். நீங்கள் விரும்புவதைச் செய்வீர்கள், ஆனால் அதற்காக எந்த விலையும் இருக்கக்கூடாது என்றால், அப்படிப்பட்ட வாழ்க்கை எங்கும் இல்லை – இங்கு மட்டுமில்லை, எங்குமே இல்லை.

நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.