சத்குரு:

இந்த கலாச்சாரத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் - துரதிர்ஷ்டவசமாக, இவை அனைத்தும் குழப்பமடைந்து, சீர்குலைந்துவிட்டன – நாம் கடவுள் இல்லாத ஒரு நாடு, நாம் எந்த ஒழுக்கமுறைகளும் இல்லாத ஒரு நாடு. இந்த நாட்டில் ஒழுக்க விதிமுறை இல்லை. நாம் இதே நிலையில் வாழ்ந்துகொண்டு, உண்மையில் நன்றாக வாழ முடிந்தது, ஏனென்றால் சமூகத்தில் மிக உயரிய விழிப்புணர்வு இருந்தது.

இது உங்கள் இயற்பியல், வேதியியல் பாடப்புத்தகம் போன்றது. அவர்கள் பாலியல் பாடப்புத்தகத்தை எழுதினார்கள். உண்மையைக் கூறுவதில் தயக்கம் காட்டவில்லை...

ஒவ்வொன்றையும் அது எப்படி இருந்ததோ அப்படியே பார்க்க முடிந்தது. மக்கள் அவர்களது விழிப்புணர்வால், வெறுமனே வாழும் உணர்வால் ஆளப்பட்டனர் – ஒழுக்கத்தால் அல்ல மற்றும் தண்டனையின் பயத்தால் அல்ல. அப்படிப்பட்ட ஒரு சமுதாயம் இருந்ததால், எதையும் எந்த இடத்திலும் பேச முடிந்தது, எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை, அது வேறு விஷயம். ஆனால் இந்தக் கலாச்சாரம், இந்த தேசம் அப்படித்தான் வளர்ச்சி அடைந்தது.  இந்த மக்கள் திரளை அந்த நிலைக்கு கொண்டுவர ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் உழைப்பு தேவைப்பட்டது.

ஆனால் மெல்ல அது மாறிக்கொண்டிருக்கிறது, ஏனென்றால் இப்போது மேற்கத்திய ஒழுக்கத்தை நாம் உள்வாங்கிக்கொண்டோம், அதில் ஏதோ ஒரு விஷயம் நல்லது, ஏதோ ஒரு விஷயம் கெட்டது, ஏதோ ஒன்று கடவுள், ஏதோ ஒன்று பிசாசு, ஏதோ ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது, ஏதோ ஒன்று தூய்மையானது, ஏதோ ஒன்று தூய்மை இல்லாதது என்று அறிவுறுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட எதுவும் இந்த கலாச்சாரத்தில் இல்லை. வாழ்க்கை எப்படி உள்ளதோ அப்படியே நாம் பார்த்தோம்.

மனித மனதை புரிந்துகொண்ட கலாச்சாரம்

மனதின் இயல்பு, Nature of Mind, குரங்கு, Monkey

உங்கள் வாழ்க்கையில் எதை எவ்வளவு செய்யவேண்டும் என்பது உங்கள் தனிப்பட்ட விருப்பமாக இருந்தது. ஏனெனில் மனித மனதின் இயல்பை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டோம். இந்த மனதுக்கு, ‘இது கெட்டது, அதைப் பற்றி யோசிக்காதே’ என்று நீங்கள் கட்டளையிட்டால், அது மட்டும்தான் மனதின் முழுநேர வேலையாக மாறும். எந்த ஒரு மனதுக்கும், ‘இதைப் பற்றி யோசிக்காதே’ என்று கூறினால், அதையேதான் அது நினைக்கும்.

மனித மனதின் தன்மையைப் புரிந்துகொள்ளாத மக்கள்தான் ஒழுக்கத்தை வாழ்க்கைக்குள் கொண்டுவந்தனர். மனதின் இயல்பைப் புரிந்துகொண்ட இந்த கலாச்சாரத்தில், நாம் எதையும் கெட்டது அல்லது நல்லது என்று ஒருபோதும் கூறவில்லை. ‘இது இப்படி இருக்கிறது’ என்றுதான் நாம் கூறினோம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை, எந்த அளவு செய்கிறீர்கள் என்பது ஒரு தனிமனிதனின் விருப்பம்.

அந்த நபர் எவ்வளவு சாப்பிடுகிறார், இந்த நபர் எவ்வளவு சாப்பிடுகிறார் என்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால் இப்போது, ​​மேற்கத்திய மருத்துவர்கள், நாம் அனைவரும் இவ்வளவு கலோரிகளைச் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள், இது முட்டாள்தனமானது. உடல் அவ்வாறு செயல்படுவதில்லை. நீங்கள் ஒரு கிலோ கிராம் உணவு சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மற்றொருவர் அதேவகையான உணவு, அதே அளவுக்கு ஊட்டச்சத்து கொண்ட உணவைச் சாப்பிடுகிறார் என்றும், நீங்கள் இருவரும் ஒரே உடல் எடையுடன் இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். நீங்கள் இருவரும் ஒரு கிலோ கிராம் உணவை சாப்பிட்டீர்கள் என்றால், அது சரியாக இருக்காது. ஒரு நபருக்கு, இந்த உணவு சரியாக இருக்கலாம். மற்றொரு நபருக்கு, அரை கிலோ கிராம் உணவு மட்டுமே சரியாக இருக்கக்கூடும், இருப்பினும் அவர்கள் இருவரும் ஒரே எடையைக் கொண்டிருக்கிறார்கள். இது கண்கூடானது.

நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். பத்து பேரை உதாரணத்துக்கு எடுத்துப் பாருங்கள். இது ஒரு நிதர்சனம். ஆனால் இப்போது ​​ஆராய்ச்சியாளர்கள் உடல் நிறை உற்பத்தி என்றெல்லாம் கூறுவதுடன், ஒவ்வொருவரும் இந்த அளவு கலோரிகளைச் சாப்பிட வேண்டும், அப்போதுதான் உங்களுக்கு இந்த அளவு சக்தி (ஆற்றல்) கிடைக்கும் என்பதைப் போன்ற எல்லா விஷயங்களையும் உங்களிடம் கூறுகிறார்கள், இது முட்டாள்தனம். குறிப்பாக, நீங்கள் என்கிற தனிமனித பரிமாணம் என்று வரும்போது, ​​​​ஒவ்வொருவரும் இதைச் செய்யவேண்டும், ஒவ்வொருவரும் அதைச் செய்யவேண்டும் என்ற நல்லொழுக்க விதி ஒருபோதும் வேலை செய்வதில்லை. வெவ்வேறு நபர்களின் தேவைகளும் வெவ்வேறானவை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாலுணர்வு தலைக்குள் நுழைந்தது எதனால்?

 Man Thinking About Woman, காமம் குறித்து சிந்திக்கும் மனம்

ஏதோ ஒரு விஷயம் தவறானது, அதைப் பற்றி சிந்திக்கக்கூடாது என்று நாம் கூறியதாலேயே இந்த பூமியில் வக்கிரம் நிறைந்த பல மனிதர்களை நாம் உருவாக்கியுள்ளோம். நீங்கள் உள்ளபடியே அதை அனுமதித்தால், இனப்பெருக்க உறுப்புகள் உங்களின் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருக்கிறது. ஆனால் இனப்பெருக்க உறுப்பில் இருக்கவேண்டிய இயல்பான ஒரு விஷயம், மிகத் திறமையாக மனிதர்களின் தலைக்குள் ஏற்றப்பட்டுள்ளது. இப்போது, ​​பாலுறவு என்பது மக்களின் உடலில் நிகழவில்லை... அது அவர்களின் தலைக்குள் எல்லாநேரமும் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் உடலில் நிகழ்ந்தால், அது ஒரு இயற்கையான செயல்முறை. உங்கள் தலைக்குள் நிகழ்ந்தால், அது ஒரு நோய்தான், இல்லையா?

பாலுறவு உங்கள் உடலின் ஒரு இயற்கையான செயல், நாம் அனைவரும் அதிலிருந்து பிறக்கிறோம். அது குறித்து சரி, தவறு என்று எதுவும் இல்லை. அது நம் வாழ்வின் ஒரு சிறிய அம்சமாக மட்டுமே இருக்கிறது. நாம் அந்த உணர்வை எதிர்த்தால், அது நம் தலைக்குள் இடம் பிடித்துவிடும். அப்போது ஒட்டுமொத்த வாழ்க்கையும் அதைப் பற்றியே இருப்பதுபோல் தெரியும்.

இன்றைக்கு மனித ஆற்றலில் 95 சதவீதம் பாலுறவு அல்லது பணத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்றுதான் நான் கூறுவேன். இவை உங்கள் வாழ்க்கையின் இரண்டு சிறிய அம்சங்கள். ஒன்று உங்கள் பிழைப்பைப் பற்றியது, மற்றொன்று உங்கள் உடலியலின் ஒரு குறிப்பிட்ட அம்சம். இந்த இரண்டு விஷயங்களும் தவறானது என்று யாரோ உங்களிடம் கூறிவிட்ட காரணத்தினாலேயே, இது மிகப்பெரிய விஷயமாகிவிட்டது.

காமசூத்திரம் (KamaSutra in Tamil) எழுதப்பட்டதன் நோக்கம்?

Kamasutra in Tamil, காமசூத்ரா, காமசூத்திரம்

நம்முடைய கலாச்சாரத்தில், பாலுறவை நாம் ஒருபோதும் அந்த விதத்தில் பார்க்கவில்லை, அதனால் ஒருவர் அது குறித்து ஒரு புத்தகம் எழுதினார் – பாலுறவு செயல் நிகழக்கூடிய வெவ்வேறு வழிகள், அதற்கான வெவ்வேறு வகையான உடல் தன்மைகள் மற்றும் இரண்டு வித்தியாசமான தன்மை கொண்டவர்களின் இணக்கம் போன்ற எல்லா நுணுக்கமான விவரங்களையும் எழுதினார்கள். ஏனென்றால் அவர்கள் ஒருபோதும் அது ஆபாசமானது என்ற நோக்கில் நினைக்கவில்லை. உங்களுக்கு புரிகிறதா? வாழ்க்கை எப்படி உள்ளதோ அப்படியே அவர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் இப்போது அதைப் பார்க்கும் கண்களுக்கு, காமசூத்ரா என்பதே ஆபாசத்தின் அங்கீகாரம் என்று தோன்றுகிறது. அது அப்படி அல்ல.

காமசூத்ரா (KamaSutra in Tamil) - பாலியல் பாடப்புத்தகம்

Kamasutra in Tamil, காமசூத்ரா, காமசூத்திரம் 

அவர்கள் மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதைப்போல அதைப் பற்றி பேசுகிறார்கள், ஏனெனில் இது வாழ்வியலின் மற்றுமொரு விஷயம்தான். எல்லாமே அதுதான் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் அதை இன்னுமொரு விஷயமாக மட்டுமே பார்த்தார்கள், எனவே அவர்கள் அந்த மாதிரி எழுதினார்கள். இது உங்கள் இயற்பியல், வேதியியல் பாடப்புத்தகம் போன்றது. அவர்கள் பாலியல் பாடப்புத்தகத்தை எழுதினார்கள். உண்மையைக் கூறுவதில் தயக்கம் காட்டவில்லை... ஆனால் இப்போது, ​​இன்றைய உலகில், ​​மக்கள் தங்களது எல்லா வக்கிரங்களுக்கும் இது ஏதோ ஒருவிதமாக ஆதரவு அளிக்கிறது என்பதைப்போல் பார்க்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள்

1) காமம் அசிங்கம் அல்ல!

இன்று இணையதளத்தில் அதிகமாகத் தேடப்படுபவை 'காமம்' சம்பந்தப்பட்டவைகளாகவே உள்ளது. எல்லா உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்யத்தான் செய்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டும் ஏன் இதில் இத்தனை குழப்பங்களும் கேள்விகளும்?! இங்கே காமம் சத்குருவின் பார்வையில்...

2) பாலுணர்வை கையாள சிறந்த வழி என்ன?

காமம் என்ற நம் உடல்சார்ந்த உணர்ச்சியை அடக்கி வைப்பது, அனுபவிப்பது மற்றும் அதிலிருந்து வெளிவருவது என பல்வேறு கோணங்களில் தொடர்ந்து மக்களால் விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. காமத்தைப் பற்றி இந்த வீடியோவில் பேசும் சத்குரு, அதனை முறையாக கையாள்வதற்கு அதுகுறித்த சில நிதர்சனங்களை தெளிவுபடுத்துகிறார். 

3) காம உணர்வை தவிர்க்க என்ன வழி?

கேள்விகள் நம் மனதில் பிறப்பது நாம் சிந்திப்பதற்கான அறிகுறி! ஆனால், கேள்விகளை யாரிடம் கேட்கிறோம் என்பதே சரியான தீர்வு கிடைக்க வழிவகுக்கும். இங்கே சத்குருவிடம் கேட்கப்பட்ட மூன்று கேள்விகளுக்கு விடை பகிர்கிறார் சத்குரு. இந்தக் கேள்விகள் ஒருவேளை உங்கள் மனதிலும் தோன்றியிருக்கலாம். இந்தப் பதிவை படித்து சத்குருவின் பதிலை அறியுங்கள்!

4) காம உணர்வு வருவதன் காரணம் இதுவா?

இறந்தபின் என்ன நடக்கும்? எந்த வயதில் சந்நியாசம் எடுக்கலாம் என்ற கேள்விக்கு சத்குரு அவர்கள் பதிலளிக்கும்போது காம உணர்வு வருவதன் காரணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.

5) காதலிக்க காமம் அவசியமா?

காதல் என்று பேசும்போது, அதில் காமம் என்பது தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது. காமம் என்ற உணர்ச்சியின் அடிப்படைத் தன்மைகளை ஆராயும் சத்குருவின் இந்தக் கட்டுரை, நம் கலாச்சாரத்தில் காமத்தைக் கடந்துசெல்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

6) ஆட்டிப்படைக்கும் பாலுணர்வு சார்ந்த ஆசைகளிலிருந்து விடுபடுவது எப்படி?

பொதுவெளியில் அது குறித்த உரையாடலும், செயலும் விலக்கப்படுகிறது என்ற புரிதல் இருந்தாலும், ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்குத் தகுந்த அவசியமான ஒரு தலைப்பை சத்குரு வெளிப்படையாக அலசி ஆராய்கிறார்.

7) காமத்தை வென்ற சிவனின் கதை

சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசை என்பது வெளியே தோன்றுவதல்ல, உங்களுக்குள் நிகழ்வது. உங்களுக்குள் உள்ள ஆசையை நீங்கள் எரித்தால் 'நான்' என நீங்கள் உணர்பவை அனைத்தும் இறக்கிறது, நீங்கள் வாழும் மரணமாகிறீர்கள் - உங்கள் இருப்பு நித்தியமானதாகிறது.