கேள்வி: இந்த குடியரசு தினத்தில் தேசத்திற்காக நான் செய்யக்கூடிய மூன்று விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி.

சத்குரு:

நாம் "தேசம்" என்று சொல்லும்போது, ஒரு நில அமைப்பினைப் பற்றி பேசவில்லை, அரசியல் அமைப்புகொண்ட நிறுவனத்தைப் பற்றி பேசவில்லை. மக்களைப் பற்றி பேசுகிறோம். மக்கள்தான் தேசத்தை ஆக்குகிறார்கள். மக்களின் மனதிலும் இதயங்களிலும்தான் ஒரு தேசம் வாழ்கிறது. நிலம் பூமிக்கு உரியது. அது எந்த தேசத்திற்கும் சொந்தமானதல்ல. நம் இதயங்களிலும் மனங்களிலும் மட்டுமே தேசம் உள்ளது, ஏனெனில், ஒரு மனிதனால் முழு உலகத்தையும் ஒன்றாய் பார்த்து வாழ இயலுவதில்லை.

எல்லா மனிதர்களும் சரியான ஊட்டச்சத்துடன் இருக்கவேண்டும். இது மிக அடிப்படையான விஷயம், இது நிகழவேண்டும்.

ஒரு கூட்டத்தை சேர்ந்த மக்கள் அடையாளம் எடுத்துக் கொள்வது அவர்களுடைய தேசத்துடன்தான். அதனால், தேசம் எனும் அந்த உணர்வு எத்தனை முக்கியமானது? அங்கு வாழும் மனிதர்களைப் பொருத்த விஷயம் அது. பல நிலைகளில், தேசத்தின் பல பரிமாண நிலைகளில், நாம் எத்தனை தேசப்பற்றுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்பதைப் பொருத்து அளவீடு செய்யவேண்டும்.

சுதந்திரத்திற்கு முன்னால், நமது தேசிய உணர்வு தீயில் இட்டதுபோல் இருந்தது. ஏனென்றால், அப்போது நலமாய் வாழ்வதைப் பற்றிய போராட்டமாய் அது இருக்கவில்லை. தேசத்திற்காக உயிர்தியாகம் செய்வதைப் பற்றி அது இருந்தது. அதனால், தேசப்பற்றும், நமது தேசியமும் தீயில் இட்டத்தைப்போல் இருக்கவேண்டும். ஏனெனில், நாம் பிறரின் ஆதிக்கத்தில் இருந்தோம். ஆனால், சுதந்திரத்திற்கு பின்னால், நமது தேசிய உணர்வை சற்றே நாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். முன்னம் இருந்த அளவிற்கு நாம் கொந்தளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், இந்த நாட்டிலுள்ள மக்களில் பாதி பேர் சரியாக உணவு உண்டிருக்காத பட்சத்தில், மற்றது அனைத்தையும் நாம் மறந்துவிடலாம். மனித நலத்தில் வேறெந்த அம்சத்தைப் பற்றியும் நாம் கவலைக் கொள்ளவில்லை. அவர்கள் கல்வி கற்றிருக்கலாம், கற்காமல் போகலாம். வீடு இருக்கலாம், மரத்தின் கீழ் வாழலாம். உடை உடுத்தலாம், கந்தல் ஆடையை அணியலாம். கார் ஓட்டலாம், நடந்து செல்லலாம் - எதைப் பற்றியும் எனக்கு கவலையில்லை. ஆனால், எல்லா மனிதர்களும் சரியான ஊட்டச்சத்துடன் இருக்கவேண்டும். இது மிக அடிப்படையான விஷயம், இது நிகழவேண்டும்.

துரதிர்ஷ்டமாக, இது நடக்கவில்லை. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் உலகில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் பாதிபேர் நம் நாட்டில் உள்ளனர். உலகிலேயே மிக வேகமாய் வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரமாக நாம் இருந்தாலும், ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் நம் தேசத்தில்தான் உள்ளனர். இந்தவொரு குறையை நாம் நிவர்த்தி செய்யவேண்டும், ஒவ்வொரு மனிதரும் தனக்கு தேவையானதை உண்ண வழிசெய்ய வேண்டும்.

கல்வி கற்க போதிய ஊட்டச்சத்து இல்லாமல் ஒரு குழந்தை பள்ளிக்கு செல்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கையில், தேசம் பற்றிய நமது உணர்வு சற்று பலமாய் இருப்பது மிக முக்கியம். நம் இதயத்தில் ஏதோவொன்று துடிக்கவேண்டும், நம் வயிற்றிலும் ஏதோவொன்று எரியவேண்டும்.

கடினமான உழைப்பிற்கு தேவையான போஷாக்கு இல்லாமல் ஒரு விவசாயி இன்று வயல்வெளிக்கு வேலைக்கு செல்கிறார். தனக்கு போதிய போஷாக்கு இல்லாமல், தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமல், ஒரு பெண் கருவை சுமக்கிறார். விழிப்பாய் இருந்து, கல்வி கற்க போதிய ஊட்டச்சத்து இல்லாமல் ஒரு குழந்தை பள்ளிக்கு செல்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நடக்கையில், தேசம் பற்றிய நமது உணர்வு சற்று பலமாய் இருப்பது மிக முக்கியம். நம் இதயத்தில் ஏதோவொன்று துடிக்கவேண்டும், நம் வயிற்றிலும் ஏதோவொன்று எரியவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

இந்த விஷயங்கள் எல்லாம் சரிகட்டப்படும் வரை, மக்கள் எல்லாம் நலமாய் வாழும்போது, நாம் நெருப்பை குறைத்துக் கொள்ளலாம். தேசம் ஆபத்தில் இருக்கும்போது தீயை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தினசரி வாழ்க்கையில், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இந்த விவேகம் நமக்கு இருக்கவேண்டும். ஆனால், தற்போது மக்கள் தொகையில் பாதிபேர் சரியாய் உணவுண்ணாத பட்சத்தில், "நமக்கு தேசப்பற்று தேவையில்லை, இந்த தேசத்திற்காக நாம் உணர்ச்சிவயப்பட தேவையில்லை, அதில் என்ன இருக்கிறது? உலகம் ஒன்றுதான்," என்றெல்லாம் பேசுகிறார்கள். உலகம் ஒன்றுதான், எனக்கும் அதில் உடன்பாடுதான். ஆனால், அதில் யதார்த்தம் இல்லையே - அரசியல் ரீதியாய், பொருளாதார ரீதியாய் உலகம் ஒன்று என்று நாம் பேசுவதில் உண்மை இல்லையே!

எனது குழந்தைகள் அவர்கள் என்ன உண்ணவேண்டுமோ அதை உண்ணாமல் உறங்கச் செல்கிறார்களே என்ற வலியை நாம் உணரவேண்டும். நீங்கள் உணவு உண்பதை குலைப்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. நீங்கள் உண்ணும் உணவின் மதிப்பைக் கூட்டுவதற்காக சொல்கிறேன்.

பல தேசங்களில், சும்மா வீசியெறியும் பொருட்கள் கிடைத்தாலே பல குழந்தைகளின் ஊட்டச்சத்து சரிசெய்யப்படும். இதுதான் நிலை என்று இருக்கும்போது, "ஒன்றே உலகம்," என்றெல்லாம் நீங்கள் பேச முடியாது. பகட்டான எண்ணங்கள், பிரம்மாண்டமான எண்ணங்கள் - அவ்வளவுதான். நான் அவற்றிற்கு எதிரானவன் அல்ல, எனக்கும் அவற்றில் உடன்பாடு உண்டு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அவை யதார்த்தமாய் இல்லை. தற்சமயம், நமக்கு மிக தீவிரமான தேசப்பற்று தேவை, ஏனெனில், இந்த தேசத்தில் உள்ள பாதி பேருக்கு நாம் இன்னும் உணவு வழங்கவில்லை.

நீங்கள் இன்றைய இரவு உணவை ரசிக்கக்கூடாது என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. உங்கள் இரவு உணவினை நீங்கள் ரசிக்கவேண்டும். பலருக்கும் கிடைக்காத இந்த உணவு, எனக்கு உண்ணக் கிடைத்திருக்கிறதே, நான் உணவை ரசிக்க மட்டும் கூடாது, அதனை என் வாழ்வில் சிறப்பாய் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் வேண்டும் இல்லையா? நம் இதயத்தில் சற்றே வலி ஏற்பட வேண்டும். "நான் சிறப்பாய் உண்கிறேன். இது எனக்குள் சென்று, என்னுள் ஒரு பாகமாய் மாறி, எனது நல்வாழ்விற்கும் வாழ்வில் எனது செயல்களுக்கும் உதவவேண்டும்."

உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், நீங்கள் எங்கிருந்தாலும் சரி. எங்கு தேசியக்கொடி பறக்கிறதோ எழுந்து நில்லுங்கள். உங்களுக்கு தேசியகீதம் தெரியாவிட்டால், அதனை கற்றுக்கொள்ளுங்கள்.

இன்று இரவு, எனது குழந்தைகள் அவர்கள் என்ன உண்ணவேண்டுமோ அதை உண்ணாமல் உறங்கச் செல்கிறார்களே என்ற வலியை நாம் உணரவேண்டும். நீங்கள் உணவு உண்பதை குலைப்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. நீங்கள் உண்ணும் உணவின் மதிப்பைக் கூட்டுவதற்காக சொல்கிறேன். நீங்கள் உண்பதைப் பற்றி குற்றவுணர்ச்சி ஏற்படுத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. மிருகத்தைப்போல் அல்லாமல் மனிதனைப்போல் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சொல்கிறேன்.

சரி, குடியரசுத் தினத்தில் நீங்கள் என்ன செய்யலாம் என்று கேட்டீர்கள் அல்லவா? உங்கள் அனைவருக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், நீங்கள் எங்கிருந்தாலும் சரி. எங்கு தேசியக்கொடி பறக்கிறதோ எழுந்து நில்லுங்கள். உங்களுக்கு தேசியகீதம் தெரியாவிட்டால், அதனை கற்றுக்கொள்ளுங்கள். உங்களில் பெரும்பாலானோருக்கு அது தெரியாது என்று எனக்குத் தெரியும் - பாடுங்கள். "நான் தேசியகீதத்தைப் பாடி, கொடியின் முன் நின்றால், இந்த தேசத்திலுள்ள எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமா?" என்று நீங்கள் கேட்கலாம். இப்படியொரு கேள்வியை கேட்கவே நீங்கள் ஒரு முட்டாளாக இருக்கவேண்டும். பிரச்சனைகள் தீரும் என்று யார் சொன்னார்கள்? ஆனால், இந்த நாட்டின் எல்லா குடிமக்களும் ஒன்றுசேர்ந்து, தேசத்தின் பிரச்சனையை தீர்க்க முற்படுவார்கள் என்றால், நிச்சயம் தேசத்தின் பிரச்சனைகள் மறையும். ஓ!! செய்யக்கூடிய மூன்று விஷயங்கள் பற்றி நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? நான் இரண்டைத்தான் சொல்லி இருக்கிறேன்...

நீங்கள் அடையாளம் கண்டுபிடியுங்கள். வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு விஷயங்களை நினைக்கிறார்கள். சிலர் சுற்றுச்சூழல் மாசு என நினைக்கிறார்கள். சிலர் ஊழல் என்று நினைக்கிறார்கள். சிலர் செயல்திறன் குறைபாடு என்று நினைக்கிறார்கள். இந்த தேசத்தில் நடக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் இதுவென்று பலரும் பல விஷயங்களை நினைத்துக் கொள்கிறார்கள். ஒழுக்கம் தேவை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஒழுக்கத்தை வெளிப்படுத்துங்கள். ஊழல் அகலவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முதலில் நீங்கள் ஊழலற்றவராய் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் சீர்கேடு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் சுற்றுச்சூழல் மாசினை உருவாக்குபவராய் இருக்காதீர்கள்.

அதனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, நீங்கள் அதற்கான காரணமாய் இருக்காதீர்கள். உங்களால் எல்லவாற்றையும் நிறுத்த முடியாமல் போகலாம். இயன்றால், உங்களால் எடுத்துச் சொல்லி மாற்றக்கூடிய மக்களையும் அந்தப் பிரச்சனையின் ஊற்றாக அவர்கள் இல்லாதவாறு இருக்கச் சொல்லுங்கள். மூன்றாவதையும் சொல்லிவிட்டேனா?

நாம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் - தேசம் என்பது கடவுள் கொடுத்தது அல்ல. நம் மனதிற்குள் நாம் உருவாக்கியுள்ள கருத்து அது. அந்த கருத்திற்குள் கொஞ்சம் உணர்வையும், அர்த்தமுள்ள எண்ணங்களையும் நாம் பொருத்துகிறோம். அதனால்தான், அது முக்கியமானதாகிறது. கடவுள் கொடுத்ததால் அல்ல. நாம் இதனை உருவாக்கினோம், அதனால்தான் இது முக்கியம், இல்லையா?

நாம் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் - தேசம் என்பது கடவுள் கொடுத்தது அல்ல. நம் மனதிற்குள் நாம் உருவாக்கியுள்ள கருத்து அது. அந்த கருத்திற்குள் கொஞ்சம் உணர்வையும், அர்த்தமுள்ள எண்ணங்களையும் நாம் பொருத்துகிறோம்.

நாம் உருவாக்கியதால்தான் அது முக்கியத்துவம் பெறுகிறது, இல்லையா? தேசம் என்ற உணர்வில் நாம் ஒன்றுபடும்போது நம்முடைய தனிப்பட்ட வரையறைகளை தாண்டி நாம் வளரமுடிகிறது. உலகம் முழுவதுமே, தனிப்பட்ட மனிதர்கள், தேசவுணர்வு கொண்டதால், தேசத்திற்காக உயிரையும் கொடுக்க துணிந்ததால், பன்மடங்கு உயர்ந்திருக்கிறார்கள். பெண்களும் ஆண்களும், இந்த தேசத்திற்காக தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கிறார்கள். இப்படி இருக்கவேண்டிய அவசியமில்லை. துரதிருஷ்டவசமாக, தற்சமயம் அப்படி ஆகிவிட்டது.

மனிதர்கள் ஒன்றாய் வாழ்வது தேவைதானா? தேவையில்லை, தேவையில்லை என்றே நினைத்துக் கொண்டே இருக்காமல்... அதுவொரு தொலைதூர உண்மை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, தற்சமயம் நீங்கள் சிக்கிப்போய் உள்ள, உங்களது சொந்த வரையறைகளை கடந்து போவதற்கு மிகச் சுலபமான ஒரு உபாயம் அது என்பதையும் அறிந்திடுங்கள். அதனால், குடியரசு தினத்தன்று மட்டுமாவது, வருடத்தின் ஒரு நாளில் மட்டுமாவது, ஒரு கொடியினை வாங்கி உங்கள் வீட்டில் பொருத்திடுங்கள்.

ஆமாம், என்ன பிரச்சனை? காலையில் எழுந்திடுங்கள். பயிற்சிகளை முடித்தபின், எழுந்து நில்லுங்கள். தேசியகீதம் 52 நொடிகளாக குறைக்கப்பட்டுவிட்டது. பாடுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், நிச்சயம் இதனைச் செய்யுங்கள். இந்த தேசத்திள்ள ஒவ்வொரு குழந்தையும் போதிய ஊட்டச்சத்தினை பெறும் வரை இதனை நீங்கள் செய்யுங்கள். அதன்பின், தேசியகீதம் இசைக்கப்பட்டாலும், நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம்.