சத்குரு சந்நிதி

"சந்நிதி" என்றால் இருப்பு (presence) என்று பொருள். சந்நிதி என்பது ஒருவிதமான சக்தி சூழலை, சக்தி இருப்பை உருவாக்கும். அந்த சூழலில் இயல்பாகவே நீங்கள் பக்தியில் திளைப்பீர்கள். உங்களைவிட மிகப் பெரிய ஒன்று உங்கள் அனுபவத்தில் வரும். - சத்குரு.

அருளின் பேரொளி
 

சத்குரு சந்நிதி

"சந்நிதி" என்றால் இருப்பு (presence) என்று பொருள். சந்நிதி என்பது ஒருவிதமான சக்தி சூழலை, சக்தி இருப்பை உருவாக்கும். அந்த சூழலில் இயல்பாகவே நீங்கள் பக்தியில் திளைப்பீர்கள். உங்களைவிட மிகப் பெரிய ஒன்று உங்கள் அனுபவத்தில் வரும். - சத்குரு.

அருளின் பேரொளி
seperator
 

சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள சந்நிதி, ஒரு குரு பாத யந்திரமாகும். இது ஓர் உகந்த சக்தி சூழ்நிலையை உருவாக்கி, ஒருவரின் உள்நிலை வளர்ச்சியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் பராமரிக்கப்படும்போது, சந்நிதி அதன் சக்தி வளையத்திற்குள் வரும் அனைவரின் உள்நிலை மற்றும் வெளிப்புற நல்வாழ்வில் சிறந்த பலனை வழங்குவதாக இருக்கும். இதன்மூலம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஆன்மீக சாத்தியத்தை சந்நிதி வழங்குகிறது.

 

சத்குருவின் அளப்பரிய ஆசியினால், ஒருவரின் வீட்டில் இத்தகைய இடத்தை நிலைநிறுத்துவதற்கான சாத்தியம் கிடைக்கப்பெறுகிறது. குருவின் இருப்பில் எப்போதும் இருப்பதென்பது விலைமதிப்பற்ற ஓர் அற்புத வாய்ப்பு.

சந்நிதி பராமரிப்பு

  • சந்நிதிக்கென்று உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் ஒரு பிரத்யேக இடத்தை அமைக்கவும்.
  • உங்கள் அன்றாட பயிற்சிகளை சந்நிதி இருக்கும் இடத்தில் தொடர்ந்து செய்யுங்கள்.
  • சந்நிதியைப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கும், சந்நிதி இருக்கும் இடத்தில் தேவையான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் ஓர் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கவும்.

 

மேலும் தகவலுக்கு:
அலைபேசி: +91 94890 00333
மின்னஞ்சல்: sadhgurusannidhi@ishafoundation.org

இப்போது பதிவுசெய்க

 

கடந்த Webstreams

 
 

நிகழ்வு காப்பகங்கள்

 

பகிர்வுகள்