சத்குரு:

தூக்கத்திற்கும், தியானத்திற்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், தூங்கும்போது உங்களுடைய எல்லா அடையாளங்களும் மறைந்து போகின்றன. நீங்கள் ஒன்றுமில்லாத் தன்மைக்குச் சென்று விடுகிறீர்கள். வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், அடையாளங்கள் இல்லாமல் போகும்போது, உங்களுடைய இயல்பான நிலைக்குச் சென்றுவிடுகிறீர்கள். இந்த நிலை மிக அற்புதமான ஒன்று. ஆனால் இந்த நிலை, உங்களுக்கு, முழுமையான விழிப்புணர்வு அற்ற நிலையில்தான் நிகழ்கிறது.

கனவுகள் இன்றி ஆழமாகத் தூங்கினால், காலையில் விழித்தெழும்போது, மிக அற்புதமாக இருக்கும். முழுமையான விடுதலையுணர்வும், புத்துணர்ச்சியும் ஏற்படும். ஏனெனில் உங்களுடைய இயல்பானத் தன்மையைத் தொட்டிருப்பீர்கள். அடையாளமற்ற நிலையில் இருந்திருப்பீர்கள்.

ஏதோவொரு நாள், ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அது எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல. மிக ஆழமாகத் தூங்கினால், மறுநாள் காலை விழித்தெழும்போது புத்துணர்ச்சியும், விழிப்புணர்வும் உங்களிடம் ஏற்படும். பலர், தினமும் அவ்வாறு ஆழமாக தூங்குவதில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே அப்படி உறங்குகிறார்கள். ஏனெனில் விழிப்புணர்வு அற்ற நிலையில் கூட உங்களுக்குள் உள்ள முழுமையான வெறுமையை நீங்கள் தொடுவதில்லை. அதாவது அடையாளமற்ற நிலைக்கு செல்வதில்லை. அப்போது எல்லாம் உங்களால் ஆழமான உறக்கத்திற்கு செல்ல முடிவதில்லை. உதாரணமாக பல நாட்களில் கனவு காண்கிறீர்கள். அப்போதெல்லாம் நீங்கள் அடையாளத்தில்தானே இருக்கிறீர்கள். கனவில், நீங்கள் நீங்களாகவே இருப்பதைக் கண்டிருக்கிறீர்களா?

கனவுகள் இன்றி ஆழமாகத் தூங்கினால், காலையில் விழித்தெழும்போது, மிக அற்புதமாக இருக்கும். முழுமையான விடுதலையுணர்வும், புத்துணர்ச்சியும் ஏற்படும். ஏனெனில் உங்களுடைய இயல்பானத் தன்மையைத் தொட்டிருப்பீர்கள். அடையாளமற்ற நிலையில் இருந்திருப்பீர்கள். அதாவது ஏதோவொரு முழுமை உங்களைத் தொட்டிருக்கும். ஆனால் அது விழிப்புணர்வற்ற நிலையில் நிகழ்ந்திருக்கும். அதே நிலையை விழிப்புணர்வோடு அடைந்தால், அதுதான் தியானம். விழித்திருக்கும்போதும், உங்களால் அப்படியிருக்க முடிந்தால், அதுதான் தியானம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.