Question: சத்குரு, காதல் என்றால் என்ன, பேரானந்தம் என்றால் என்ன? இவற்றுக்கிடையே என்ன தொடர்பு?

சத்குரு:

நீங்கள் பேரானந்தத்தில் திளைத்திருந்தால், காதல் என்ற ஒன்று உங்களுக்குத் தேவைப்படாது. இன்று காதல் முக்கியமாகி இருப்பது, மகிழ்ச்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால்தான். காதலில்தான் சிறிதளவாவது நீங்கள் ஆனந்தத்தை உணர்கிறீர்கள். அதனால்தான் அது இத்தனை முக்கியமாகிவிட்டது.

காதல் என்பது ஒரு உணர்ச்சி. உணர்ச்சி என்பது நல்ல வாகனம்தான், ஆனால் அதனளவில், தனியாக அதற்கு எவ்விதப் பயனும் இல்லை.

பேரானந்தத்தைப் பற்றித் தெரியாதவர்கள்தான், காதலைப் பற்றி எப்போதுமே பேசிக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது ஒரு உணர்ச்சி. உணர்ச்சி என்பது நல்ல வாகனம்தான், ஆனால் அதனளவில், தனியாக அதற்கு எவ்விதப் பயனும் இல்லை. நம்மிடம் இருக்கும் வாகனம் நகராத வாகனம் என்றால், அதில் எவ்வித பயனும் இல்லையே!

இதுவே அந்த வாகனம் உங்களை எங்கோ கொண்டு சேர்க்கமுடியும் என்றால், அதற்குப் பிரயோஜனம் உண்டு. நகர்கிற வாகனம் என்றால், அது குதித்து, குதித்து சென்றால் என்ன, அளவுக்கதிகமாக சப்தம் செய்தால் என்ன, இல்லை வேறு ஏதோ தொல்லை கொடுத்தால் தான் என்ன? நகர்கிறவரை சரிதானே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.