மக்களின் ஆன்மீக நலனுக்காக ஈஷாவில் வழங்கப்படும் கருவிகளில், பாம்பு மோதிரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பு மோதிரம் எதற்காக, அதை அணிந்தால் என்ன பயன் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஒவ்வொரு மனிதருக்கும் அவர் வாழ்க்கை என்று எதை அறிந்திருக்கிறாரோ அதன் உச்சத்தை அடைய வேண்டும் அன்ற ஆவல் இயல்பாகவே இருக்கிறது. உலகின் கிழக்குப் பகுதி நாடுகள் சிலவற்றில் இந்த மனித விருப்பத்தை சீறி எழும் பாம்பாக சித்தரித்திருக்கிறார்கள். சிவபெருமானின் தலையில் பாம்பு படமெடுத்து காட்சியளிப்பது அவர் விழிப்புணர்வின் உச்ச நிலையை அடைந்ததையே இது சித்தரிக்கிறது.

மோதிர விரல், பல உணர்ச்சிமிக்க நாடிகள் அல்லது சக்தி வழிகளின் இருப்பிடமாக இருக்கிறது. அந்த நாடிகளை அல்லது சக்தி வழிகளை தகுந்த தீட்சை மற்றும் பயிற்சிகள் மூலம் தீவிரமாக தூண்டிவிட முடியும். தன் மோதிர விரலின் மீது ஆளுமை உள்ள ஒருவர், வேறொருவரின் விதியையே மாற்றி எழுத முடியும் என்பது ஒரு விஞ்ஞான உண்மையாக இருக்கிறது.

மோதிர விரலின் அடிப்பாகத்திலிருந்து நுனி வரை பல பிறவிகளின் அனுபவங்கள் பதிந்துள்ளன. அதை அறிவதற்கு அநேக ஆன்மீக சாதனைகள் தேவைப்படுகிறது. அந்த விரலின் வெவ்வேறு இடங்களைத் தொடும்போது, வெவ்வேறு அனுபவங்களை உணர முடியும். அந்த விரலின் ஒவ்வொரு மைக்ரோ மில்லி மீட்டரும் ஒவ்வொரு விதத்தில் வித்யாசமானது.

மோதிர விரல் உங்கள் கணினி மௌசைப் போன்றது. அதை வைத்து எதுவும் செய்யமுடியும். அதனால்தான் தன் மோதிர விரல் மீது ஆளுமை உள்ள ஒருவர் அவருடைய விதியையும் திருத்தி எழுத முடியும் என்று நாம் சொல்கிறோம்."

பாம்பு மோதிரத்தின் பயன்கள்:

  • ஒரு சாதகர் தன் மோதிர விரலில் செம்பு மோதிரத்தை அணியும்போது அது அவரது உடலை ஒருநிலைப் படுத்துகிறது.
  • அவருடைய ஆத்ம சாதனைகளுக்கு உதவியாக இருக்கிறது.
  • சரியான ஆன்மீகப் பயிற்சிகளுடன் பாம்பு மோதிரம் அணிவது ஒருவரின் இறைநிலைப் பரிமாணங்களுக்கான திறவுகோலாகவும் இருக்கிறது.

யாரெல்லாம் அணியலாம்?

  • இந்த செம்பு மோதிரத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.
  • இதை அணிவதற்கு எந்த வயதும், பாலினமும் ஒரு தடையில்லை, எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
  • இதை உங்கள் இடது கை மோதிர விரலில் அணிவது சிறந்தது.