சத்குரு: யோகாவில், வாழ்க்கையை இரண்டு அம்சங்களாகப் பார்க்கிறோம் - நேரம் மற்றும் சக்தி. உங்கள் நேரம் முடிவதற்குள் உங்கள் சக்தி குறைந்துவிட்டால், அது அல்சைமர் அல்லது டிமென்ஷியா போன்ற வியாதிகளுக்கு வழிவகுக்கும். யோகா என்பது உங்கள் சத்தியை உயர்த்துவதாகும், இதன் காரணமாக உங்கள் சக்திக்கும் முன் உங்கள் நேரம் முடிவடையும். 

நேரம் அனைவருக்கும் ஒரே வேகத்தில் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உங்கள் சக்தியை நீங்கள் கொஞ்சம் கையாள முடியும். யோகாவின் முழு அமைப்பும் உங்கள் சக்தியை உச்ச நிலைக்கு கொண்டு செல்வதாகும். இதனால் உங்கள் விழிப்புணர்வு திறன் மற்றும் சக்திநிலை மிக உச்சத்தில் இருக்கும். உங்கள் சக்திநிலை உச்சத்தில் இருக்கும்பொழுது, நேரம் வேகமாக கடந்து, உங்கள் சக்தி முடிவடையும் முன்னரே நேரம் முடிந்துவிடும். நீங்கள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கலாம் என்பது உங்களையும், வேறு சில அம்சங்களையும் சார்ந்தது. ஆனால், ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களை உணர்வுபூர்வமாக பராமரிப்பது மிகவும் முக்கியம். இந்த ஒன்றுதான் பூமியில் உள்ள மற்ற உயிர்களிடம் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது.

நம் முதுகுத்தண்டு அழிந்துபோன நம் உயிரணுக்களை புத்துயிரூட்டவும், மறுஉற்பத்தி செய்யவும் உதவக்கூடிய ஒரு முக்கிய பகுதி. நம் மூளையிலும் இதுபோன்ற செயல்கள் செய்வது மிக எளிது. டிமென்ஷியா மற்றும் இதில் தொடர்புடைய நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சில சரியான செயல்கள் செய்வதன் மூலம், இழந்த உயிரணுக்களை மறு உற்பத்தி செய்துகொள்ளலாம். இதற்கு கணிசமான அறிவியல் சான்றுகள் உள்ளன. இப்போது உங்கள் வாழ்க்கையில் கூட, எத்தனை நியூரான்கள் செயலில் உள்ளன என்பது உங்கள் மனதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து பெரிய அளவில் மாறுபடும். நீங்கள் மனச்சோர்வோடு இருக்கும்போது, எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கலாம். சரியான செயல்களைச் செய்வதன் மூலம், இதை நீங்கள் மேம்படுத்தலாம். நிச்சயமாக, இது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும், ஆணா அல்லது பெண்ணா என்பது முக்கியமல்ல. கொஞ்சம் புத்திசாலித்தனத்தை வைத்து இந்த உலகில் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம். 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
இப்போது உங்கள் பிரச்சனை என்னவென்றால், உங்களிடம் மூளை இருக்கிறது, ஆனால் விசைப்பலகை இல்லை - சில வேலை செய்கிறது, சில வேலை செய்வதில்லை.

ஹென்றி மார்க்ராம் "ப்ளூ ப்ரைன்" ஏ என்ற பெயரில் மூளை குறித்து ஒரு தனித்துவமான ஆராய்ச்சி செய்துள்ளார். மனித மூளை முழுமையாக வரைபடமாக்கப்படுவது இதுவே முதல் முறை. அதாவது, அவர்கள் ஒரு மெய்நிகர், மின்னணு மூளையை உருவாக்குகிறார்கள். விசைப்பலகை இணைக்கப்பட்ட உருவகப்படுத்தப்பட்ட மனித மூளை அவர்களுக்கு இருக்கும். இப்போது உங்கள் பிரச்சனை என்னவென்றால், உங்களிடம் மூளை இருக்கிறது, ஆனால் விசைப்பலகை இல்லை - சில வேலை செய்கிறது, சில வேலை செய்வதில்லை. உங்கள் மூளைக்கு ஒரு முழுமையான விசைப்பலகை உங்களிடம் இருந்தால், நீங்கள் எதை வேண்டுமானாலும் தட்டச்சு செய்ய முடிந்தால், நீங்கள் தற்போது இருப்பதை விட ஆயிரம் மடங்கு அதிக திறன் கொண்டவராக ஆகிவிடுவீர்கள், ஏனென்றால் இந்த மூளை எத்தகைய சிக்கலான செயல்களையும் கையாளும் திறன் கொண்டது. மூளை இதுபோன்ற ஒரு சிக்கலான இயந்திரமாகும், பெரும்பாலான மக்களுக்கு இதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஒருபோதும் பயிற்சியளிக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவிலான அர்ப்பணிப்பு மற்றும் கவனம் இருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலான மக்கள் தங்கள் கணினியின் திறன்களில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த பல வழிகள் உள்ளன, ஆனால் எப்படி என்று எல்லோருக்கும் தெரியாது. அவர்களின் மூளைக்கும் இதே நிலைதான். எல்லோருடைய மூளையும் பல விஷயங்களை செய்ய வல்லது, ஆனால் அந்த புத்திசாலித்தனம் உங்கள் விரல் நுனியில் இல்லை - அதுதான் பிரச்சனை.

APG19_IECSChennai-Tam-Newsletter-650x120-Updated

 

ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா என்பது யோக அறிவியலிலிருந்து பெறப்பட்ட நல்வாழ்வுக்கான தொழில்நுட்பமாகும். உங்கள் வாழ்க்கை, உங்கள் பணியிடம் மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கான முழுமையான கருவியாக இது வழங்கப்படுகிறது.

தன்னிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த செயல்முறைகள், பாரம்பரிய யோகத்தின் சாரம், வாழ்க்கையின் உன்னத அம்சங்களை உணர்ந்தறிவதற்கான தியானங்கள் மற்றும் தொன்மையான ஞானத்தின் ரகசியங்களை அறிவதற்கான உத்திகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்வதே இந்த வகுப்பின் நோக்கமாகும்.

ஈஷா யோகா வகுப்பு சுய-ஆய்வு மற்றும் தன்னிலை மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கி அதன்மூலம் ஆனந்தமான மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

பதிவுசெய்ய

Photo Courtesy of Maʝicdölphin @flickr