சிவன் அனைவராலும் வழிபடப்படுபவன், தேவர்கள் முதல் அசுரர்கள் வரை, அரசன் முதல் ஆண்டி வரை, அனைவருக்கும் அவனொருவனே தலைவன், மஹாதேவன்.

விஷ்ணுவும் சிவனை வழிபடுவதுண்டு. விஷ்ணு எப்படிப்பட்ட சிவபக்தன் என்பதற்கு ஒரு அழகான கதை கூறப்படுகிறது. ஒருமுறை விஷ்ணு சிவனிடம் அவனுக்கு 1008 தாமரை மலர்களை அர்ப்பணிப்பதாக, வேண்டிக்கொண்டார். அதற்காக, உலகம் முழுவதும் தேடியும், விஷ்ணுவிற்கு 1007 தாமரை மலர்கள்தான் கிடைத்தது. அவை அனைத்தையும் சிவன் முன் அர்ப்பணித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு மலர் குறைவதை அறிந்த சிவன், முகத்தில் ஒரு சிறிய புன்னகையோடு தன் கண்களைத் திறவாமல் அப்படியே அமர்ந்திருந்தார். இதனைப் புரிந்துகொண்டு விஷ்ணு இவ்வாறு சிவனிடம் கூறினார்: கமலக்கண்ணன் என்ற பெயருடையதால், என் கண்களும் அழகிய தாமரை மலர்கள் போன்றதே. அதனால் குறையும் அந்த ஒரு கண்ணுக்குப் பதில் என்னுடைய ஒரு கண்ணையே உனக்கு அர்ப்பணிகிறேன் எனக் கூறி, உடனே அவரது வலது கண்ணை பிடுங்கி எடுத்து லிங்கங்கத்தின் மேல் வைத்தார்.
விஷ்ணுவின் பக்தியைக் கண்டு பூரித்துப்போய் சிவன் அவருக்கு சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.