மாற்றத்தை ஏற்படுத்துதல்

17 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. (70% மரக்கன்றுகள் மரங்களாகி உள்ளன) 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களால் 3 நாட்களில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது, இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும். சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான 'இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார் விருது' பசுமைக்கரங்கள் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நலன் காப்பாதற்காக ஈஷா அறக்கட்டளையால், துவங்கப்பட்ட பசுமைக் கரங்கள் திட்டமானது, தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதற்காகவும் மண்வளத்தையும் இயற்கை வளங்களை சரியாக பராமரிப்பதற்காகவும் தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக இதுவரை 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களால் 17 மில்லியன் மரக்கன்றுகள் தமிழகமெங்கும் நடப்பட்டுள்ளன. 2006ல் மூன்றே நாட்களில் 2,50,000 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டன. இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும்..சுற்றுச்சூழல் பாதுகாத்தல் குறித்த பசுமைக் கரங்கள் திட்டத்தின் செயல்பாடுகளை அங்கீகரித்து, சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான 'இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார் விருது' இந்திய அரசால் பசுமைக்கரங்கள் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் பசுமைக் கரங்கள் திட்டம் பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. அரசாங்கத்தோடு மட்டுமல்லாமல், வணிகத் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் ஆகியோருடன் கைகோர்த்து சுற்றுச்சூழல் நலன்காக்கும் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வோடு சுற்றுச்சூழலைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தாங்களே பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு முன்னுதாராணமாக விளங்க வேண்டும் என்பதை பசுமைக் கரங்கள் திட்டம் விரும்புகிறது.