மஹாபாரதம்
மஹாபாரதம் என்பது வெறும் கதையாக மட்டும் இருப்பதல்ல, ஒரு மனிதன் அனுபவித்தில் உணரக்கூடிய ஆழம் மிக்க பரிமாணங்களை வழங்கக் கூடியதாக இருக்கும் என்பதை சத்குரு உணர்த்துகிறார்!
மகாபாரதம்–கிருஷ்ணனும் கூடவிடுதலைஅடையவில்லை
"மகாபாரதம் - இணையற்ற மகா காவியம் (Mahabharat – Saga Non-pareil)" என்ற 8-நாள் நிகழ்ச்சியில், மகாபாரதம் எனும் ஒப்பற்ற காவியத்தை ஞானியின் பார்வையில் உணர்ந்திட பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மகாபாரதத்தை வெறும் ஒரு கதையாக மட்டும் பாராமல், 'மனிதன்' என்பதன் ஆழத்தையும் அப்பரிமாணத்தின் விஸ்தாரத்தையும் நாம் அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அதை அணுகலாம் என்று சொல்கிறார் சத்குரு.
சத்குரு: மகாபாரதத்தின் உணர்ச்சிப் பிழம்பில் ஆட்பட்டுள்ளோம். உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் 450 பேர் இந்தப் பிரம்மாண்ட காவியத்தில் பங்கேற்க வந்துள்ளனர். இது 5000 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய கதைதான் எனினும், இன்றைய காலத்திற்கும் அபாரமாகப் பொருந்துகிறது. 100,000 க்கும் மேற்பட்ட பாடல்களில், சில ஆயிரம் கதாபாத்திரங்களை அவர்களின் பிறப்பில் இருந்து இறப்பு வரை இக்காவியம் சித்தரிக்கிறது. அம்மனிதர்களின் வெற்றிகள், இன்பம், துன்பம், முன்ஜென்மம் என அனைத்தையும் விரிவாக இக்கதை சொல்கிறது. இந்த 8 நாட்களில், இந்த மஹாகாவியத்தின் முழுக்கதையை நாம் பார்க்கப் போவதில்லை. மாறாக அக்காவியம் நமக்கு எப்படிப் பொருந்துமோ அவ்வாறு அதைப் பார்க்க இருக்கிறோம். விலகியிருந்து ஒரு பார்வையாளர் போல் இதை அணுகாமல், ஒரு பங்கேற்பாளராய் அதனூடே நாம் வாழ்ந்துணர்வதற்கும், 'மனிதன்' என்பதன் ஆழத்தையும், அப்பரிமாணத்தின் விஸ்தாரத்தையும் நாம் அறிந்துகொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.