அரசு பள்ளிகள் உதவித் திட்டம்
ஈஷாவின் சமூக நலத்திட்டத்தில் அரசு பள்ளிகள் உதவித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிக் குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்தி, அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்துவதற்கான உதவிகளும் ஒத்துழைப்புகளும் பலவிதங்களில் வழங்கப்படுகின்றன.
ArticleNov 3, 2017
அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம்
2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வு முடிவுகளின்படி...
- 35% மாணவர்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியவில்லை.
- 60% மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகள் கூட தெரியவில்லை.
- 65% மாணவர்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசுப் பள்ளிகளை ஈஷா தத்தெடுத்து, அங்கு பயிலும் ஏழை கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர துணைபுரிகிறது! இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
- யோகா, விளையாட்டு, கலை, இசை போன்றவற்றில் ஈடுபடச்செய்தல்
- மருத்துவ முகாம்கள் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வழங்குதல்
- அனைத்திற்கும் மேலாக, ஒவ்வொரு குழந்தையிடமும் இயல்பான மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தூண்டுதல்
- 31 பள்ளிகளைச் சேர்ந்த 28,000 குழந்தைகள் இத்திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார்கள்.
- 170 ஆசிரியர்களை புதிதாக நியமித்ததன் மூலம் 70:1 என்ற மாணவர்கள்-ஆசிரியர் விகிதத்திலிருந்து 40:1 அளவிற்கு விகிதாச்சாரம் மேம்பட்டுள்ளது.
- 71% (3,548 மாணவர்கள்) மெதுவாகக் கற்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
- தன்னம்பிக்கை உருவாக்குதல் மற்றும் தொடர்ச்சியாக பள்ளிக்கு வரவிரும்பக்கூடிய மற்றும் சமூகத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கக் கூடிய மாணவர்கள் சிறப்பாக செயல்படுதல்