ஈஷா ஆரோக்யா
தனிமனித ஆரோக்கியத்தை வழங்குவதில் முழுமையான மருத்துவ செயல்முறைகளோடு, மக்களுக்கு ஏற்புடைய கட்டண விகிதங்களில் ஈஷா ஆரோக்யா இயங்கி வருகிறது!
“ஆரோக்யா” உடல் நலம் என்ற வாழ்க்கையின் அடிப்படையான விஷயத்தை “ஆரோக்யா” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். தொற்றிக் கொள்கிற வியாதிகளை நவீன மருத்துவத்தால் எளிதில், துரிதமாக குணமாக்க முடியும். ஆனால் நாட்பட்ட, கடுமையான நோய்களைப் பற்றி பேசும் பொழுது, அலோபதி போன்ற நவீன மருத்துவங்களின் எல்லை அந்நோயின் உடல் அல்லது மன வெளிப்பாட்டிலேயே முடிந்து விடும். அதாவது நோயின் வெளிப்பாட்டிலேயே கவனம் செலுத்துவதால், நோயின் முழுத்தன்மையை, அதன் அடிப்படைத் தன்மையை குணப்படுத்துவது இல்லை.
நவீன மருத்துவத்தைப் போல் இல்லாமல், இந்திய முறைகளான சித்தா, ஆயுர்வேதம், மற்றும் யோக விஞ்ஞானம் முதலியவை நோயின் அடிப்படை காரணத்தை – ஒருவரின் சுற்றுப்புறம், வாழ்க்கை முறை, அவருடைய சமூக-பொருளாதார நிலமை போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, மருத்துவம் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அதன் முழு கவனமும் வியாதியை மட்டுமே அல்லாமல், ஆரோக்கியத்தை செழுமைப்படுத்துவதிலும் உள்ளது. உடலை உறுதியாக்கி, எந்த விதமான சூழ்நிலை மாற்றங்களாலும் பாதிக்கப் படாமல் இருக்க உதவுகிறது.
ஈஷா ஆரோக்யா, இந்த மாதிரியான ஒரு மருத்துவ முறையை – அதிக செலவில்லாமல், எல்லோருக்கும் சென்றடையும் வகையில் உருவாக்கி, ஒருவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. தொற்று நோய்களை துரிதமாக குணமாக்கும் அலோபதியின் திறமையையும், உடலை வலுவடைய வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் நாட்டு வைத்திய முறைகளையும் ஒன்றாக கலந்து ஈஷா ஆரோக்யா வழங்குகிறது. இந்த இரண்டு வழிமுறைகளையும் ஒன்றாக வழங்குவதினால், ஒருவரின் வியாதியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முழுமையான ஆரோக்கியமாக வாழும் வழிமுறையையும் ஈஷா ஆரோக்யா உருவாக்குகிறது.
ஈஷா ஆரோக்யா தமிழ் நாட்டு மக்களுக்கு ஆரோக்கிய வாழ்க்கையைப் பற்றி ஒரு புதிய புரிதலை உருவாக்க மையங்களை நிறுவி உள்ளனர். இந்த மையங்கள் இலவச அறிவுரைகள் மட்டுமல்லாமல் சித்த, ஆயுர்வேத, அலோபதி மருந்துகளும், தோல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்விற்குண்டான முழு சுகாதார பராமரிப்பை வழங்குகின்றன. இலவச அறிவுரைகளோடல்லாமல், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, தோல் சம்பந்தமான வியாதிகள், ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி, முடி கொட்டுதல் மற்றும் உடற்பருமன் போன்ற தனிச்சிறப்பு சேவைகளுக்கும் தேவையான உதவிகளுடன் இந்த மையங்கள் இயக்கப்படுகின்றன.
ஈஷா ஆரோக்யா நூற்றுக்கும் மேலான மூலிகைச் செடிகளையும் பராமரித்து, தமிழ் நாட்டில் வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டு வந்த மூலிகைகளைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்ய ஆய்வுக்கூடங்களை நிர்மாணித்துள்ளன.