உயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும்! ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன மற்றும் உணர்ச்சிகள் கொண்டுள்ள தடைகளை அகற்றுகிறது. இந்த நிகழ்ச்சியில் மிக சக்திவாய்ந்த தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா தீட்சை வழங்கப்படுகிறது (உள்நிலை சக்தி செயல்முறை).

இன்றைய நவீன யுக மாந்தர்களுக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நல்வாழ்விற்கான தொழிற்படமான இன்னர் இஞ்சினியரிங் , 7 நாட்கள் வகுப்பாக வழங்கப்படுகிறது. ஈஷா யோகா மையத்தில், ரிட்ரீட் நிகழ்ச்சியாக 4 நாட்களில் வழங்கப்படுகிறது. மூன்று நாட்கள் வகுப்பாக சத்குருவால் நடத்தப்பட்ட மெகா வகுப்புகளில் , 10,000 மக்கள் கலந்துகொண்டனர். இன்னர் இஞ்சினியரிங் நிகழ்ச்சி மூலம் தனியார், அரசு அதிகாரிகள்-தலைவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் சிறைவாசிகள் என உலகின் பலவித நிலைகளில் உள்ள பல்வேறு வகையான மக்களும் பலனடைந்துள்ளனர்.