ஞானியுடன் கலந்துரையாடல் எனும் இந்த தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சத்குருவுடன் பல்வேறு சுவாரஸ்ய தலைப்புகளில் கலந்துரையாடுகின்றனர். சத்குருவின் சுவையான விளக்கங்களும் வெடிச் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை துணுக்குகளும் நவீன பார்வை மற்றும் ஆன்மீக சிந்தனைகளுக்கிடையே உள்ள இடைவெளிகளை அகற்றி புதிய ஒரு பரிமாணத்தைக் கொடுக்கிறது.

முதல் கலந்துரையாடல் நிகழ்ச்சியானது, பல உயரிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியாக அமைந்தது. இதில் அன்பு, வாழ்க்கை, ஆசை போன்ற பல்வேறு பொருள்களில் கலந்துரையாடப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக பிரபல கார் பந்தய வீரர் க்ரிஸ் ரேடோ மற்றும் இந்தியாவின் முதன்மை வணிக தலைமையான ரி.க்ஷி.காமத் ஆகியோருடன் சுவாரஸ்ய உரையாடல்கள் தொடர்ந்தன.