ஈஷா கிராமோத்சவம்
தமிழகத்தின் கிராமங்களையும் கிராமிய விளையாட்டுகளையும் மீட்டெடுக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டு ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா வெகு சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது!
The annual Rural Olympics or Gramotsavam draws upto 500,000 people
கிராம ஒலிம்பிக் போட்டிகள்!
கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராம மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஊட்டி, அவர்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, விளையாட்டுப் போட்டிகளை மிகச் சிறப்பான வகையில் பயன்படுத்தி வருகிறது. ஒரு சமூகத்தில் வசிக்கும் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க விளையாட்டைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், அவர்களிடையே நிலவும் சாதி, மத வேறுபாடுகளைக் களைந்து அவர்களிடையே ஒரு நெருக்கமான பந்தத்தை உருவாக்குவது எளிதாக இருக்கும். தினமும் கைப்பந்து மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோரும் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி, ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். கிராமப்புற சமுதாயங்களிடையே ஒற்றுமை, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, தன்னம்பிக்கை, ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு கிராமப் புத்துணர்வு இயக்கம் நடத்தும் இது போன்ற விளையாட்டுத் திருவிழாக்கள் மிக வலுவான தளம் அமைத்துத் தருகின்றன.
“விளையாட்டில் ஈடுபடுவதும் கிராமங்களுக்கிடையேயான போட்டிகளில் கலந்துகொள்வதும் அவர்களது வாழ்வில் அசாதரணமான மாற்றத்தைக் கொண்டு வருகிறது. அரைகுறையாய் நிரம்பிய தங்கள் வயிறு மற்றும் அவர்கள் தங்களது அனைத்து துயரங்களையும் மறக்கிறார்கள். திடீரென்று அவர்கள் புதுவிதமான மனிதர்களாக மாறுகிறார்கள்.” - சத்குரு
தமிழக கிராமப் புறங்களில் இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் பெண்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன்புதான் மேற்கொள்ளப்பட்டது. கைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், குறிப்பிடத்தகுந்த ஒன்றைக் காணலாம்! ஒரு கைப்பந்து வீரர் அவர் தாழ்ந்த சமூகமாகக் கருதப்படும் சமூகத்திலிருந்து வந்திருப்பவர் என்பதை மறந்து, அவர் வெற்றிபெற்றதை அந்த கிராமம் கொண்டாடுகிறது. மேலும் கிராமப்புற விளையாட்டுகளில் மற்ற பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, உறியடி, தண்ணீர் நிரப்புதல், ரேக்லா ரேஸ் பந்தயம், வழுக்குமரம் ஏறுதல் மற்றும் மெதுவாக சைக்கிள் ஓட்டும்போட்டி என மாலை மங்கும் நேரம் வரை போட்டிகள் தொடர்ந்து நிகழும்.