கலையின் கைவண்ணம்
கலையின் கைவண்ணம் என்பது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் கைவினை கலைஞர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தும் ஒரு தனித்துவம் மிக்க கண்காட்சியாகும்!
கலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை குழுக்கள் தங்கள் திறன் வெளிப்படும் மரச்சாமான்கள், உள்அலங்கார பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உடல்பராமரிப்புப் பொருட்கள், கற்கள் மற்றும் உலோகத்தாலான வேலைப்பாடுகள், உபகரணகள் மற்றும் பரிசுப்பொருட்களை இதில் காட்சிப்படுத்துகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து, அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஒருசமயத்தில் கைவினைப்பொருட்கள் இருந்தன. அவை ஒருவரது வழ்வாதாரமாக மட்டும் இல்லாமல், ஆன்மீக வளர்ச்சிக்கான வழிமுறையாகவும் துணைநின்றன. எதிர்பாராதவிதமாக, தொழில் மயமாக்கலும், அதன் விளைவாக, பெருமளவிலான உற்பத்தியும் பல கைவினைக் கலைகளின் அடிப்படையையே சீர்குலைத்திருக்கின்றன. கடந்த சில நூறு ஆண்டுகளில் அவற்றில் பல இருந்த இடமே இப்போது தெரியவில்லை. நமது வருங்கால சந்ததியினருக்கு நமது மரபின் மீதும் கலைகளின் மீதும் நிலைத்திருக்கும்படியான தாக்கத்தை ஏற்படுத்த நமது பாரம்பரிய கலைகளையும், கலைத்திறனையும் மீட்டெடுத்து, புத்துயிரூட்டும் பெருமுயற்சியில் ஈஷா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. ஆண்டுதோறும், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் இணைந்து கைகளின் கலைவண்ணம் கண்காட்சி நடைபெறுகிறது.