ஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. மனிதர்களிடத்தில் உற்சாகத்தையும் புதிய மாற்றத்தையும் கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் முன்னுதாரணமாகவும் இத்திட்டம் அமைகிறது.

2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களுக்கும் அதிகமானவர்கள் தங்கள் பொன்னான நேரங்களை ஒதுக்கி இத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் நன்கொடை திரட்டுவது குறித்து சத்குரு பேசுகையில், இந்தியாவில், அதிலும் தமிழகத்தில்தான் செயல்பாடுகளை மேற்கொண்ட காரணம் குறித்து விளக்கினார். “நீங்கள் ஓரிடத்தில் சிறப்பாக பணியாற்றாமல் அங்கே ஏதும் செய்வதால் எந்த பலனும் இல்லை! நாம் இதனை நம் மனத் திருப்திக்காக செய்யவில்லை. நாம் இதனை செய்யத் தேவையிருப்பதால்தான் செய்கிறோம். ஒரு வித்தியாசம் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தைக்கொண்டுவரக் கூடியதாகும். குறைந்த அளவு செயல்செய்தாலே நம்மால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் - எனவேதான் இந்தியா, எனவேதான் தமிழகம். நீங்கள் என்னிடம் 10 டாலர் பணம் கொடுத்தால், நான் அதனை 20 டாலர் மதிப்புள்ளதாக மாற்றமுடியும். ஏனென்றால் எல்லா இடத்திலும் அங்கே அர்ப்பணிப்பு மிக்க மக்கள் உள்ளனர். இப்படியான மனிதர்களை உருவாக்குவதற்கு 16 முதல் 18 வருடங்கள் எனக்குப் பிடித்தது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வத் தொண்டர்கள் கிராமங்களின் நலனிற்காக செயல்படுகிறார்கள். குறந்த அளவு செயல் செய்து நம்மால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்!”